மேகத்தின் முத்தம்

வானத்தில் மேகங்கள்
காதல் கொண்டு
ஒன்றோடு ஒன்று
ஓடிப்பிடித்து விளையாடி
அருகினில் நெருங்கி
முத்தங்களை
பரிமாறிக் கொண்டது ...!!

முத்தத்தின் சத்தம்
இடியோசையுடன்
முத்த மழையாக பிறந்து
பூமியில் தவழ்ந்து ஓடியது ...!!
--கோவை சுபா

எழுதியவர் : கோவை சுபா (18-May-22, 1:05 pm)
சேர்த்தது : கோவை சுபா
பார்வை : 304

மேலே