குறுந்தட்டில் ஒலியை

உடற்பயிற் சியைசெய் வதுண்டோ விலங்குகள்
விடவுண வைச்சுவைக் காகப் புசிக்குமோ
நடுநிலைத் தவறியோ விரும்புமோ பிறதை
தடமா றமிருகம் தர்மத் தலைவன்

உடலோடு ஒட்டி உறவாடும் உயிரது
கடலோடு விளையாடும் அலையென இருப்பதோ
தடையின்றி நரம்பின் வழியே தனியே
நடைபயிலும் சிவப்பான குருதியே உணர்வு

பெண்கள் பணிக்கு புகுகிறார் தொழிலகம்
தண்மை நீங்கியே திரும்புவர் இல்லம்
வெண்ணை உருகிய நிலையாய் சுற்றம்
எண்பொடிந் தகையாய் உறுதியி லாமலே

குறுந்தட் டிலொலியை நிலையாய் பதிவிட
அறிவியல் படைத்தது சாலமிகு படைப்பு
குறைவிலா வகையிலே யாவும் இயங்கிட
குறையா நிலையிலே வேண்டுமே மின்னணு

கற்பென் பதுவோ உடலில் இல்லையே
நற்பண் பினாலே ஆனது அதுவே
அற்ப மனிதரும் ஆக்கினர் பெண்மையுள்
அற்புதம் ஆக்கவே யாவரும் பேணணும்.
--- நன்னாடன்.

எழுதியவர் : நன்னாடன் (19-Aug-22, 5:45 pm)
சேர்த்தது : நன்னாடன்
பார்வை : 26

மேலே