அவள் ஒரு முடிவில்லா பயணம் 1

அழகான ஒரு பெண் அவள் பெயர் பாரதி தன் அப்பா ஒரு பண்ணையார் அவர் ஒரு வறட்டு கௌரவம் பிடித்தவர் அம்மா அவள் ஒரு வாயில்லா பூச்சி பூங்கொடி என்று பெயர் பாரதி இவள் நன்றாக படிப்பாள் மிகவும் புத்திசாலி 12 ஆம் வகுப்பு படித்து முடித்து விட்டால் படிக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறாள் இதைப் பற்றி தன் அப்பாவிடம் எப்படி சொல்வது என்று யோசிக்கிறாள் தன் அப்பா யார் சொல்வதும் கேட்க மாட்டார் தான் அம்மா அப்பா சொல்வது சரி என்ற வார்த்தையை தவிர வேறு எதுவும் சொல்லத் தெரியாது யார் எதை சொன்னாலும் கேட்காதவர் பண்ணையார் தான் செய்வது தான் முடிவு தான் நினைப்பதுதான் சரி என இருப்பவர் தான் பண்ணையார் ஆனால் பாரதிக்கோ படிக்க வேண்டும் படித்து ஒரு பெரிய அளவிற்கு வரவேண்டும் என யோசிக்கிறாள் இதைப் பற்றி எப்படி அப்பாவிடம் பேசுவது அம்மாவிடம் சொல்லலாம் என்றால் எதுவும் கேட்க மாட்டார் அப்பா சொல்வது மட்டும் தான் சரி என சொல்வார் என அவள் யோசிக்கிறாள் ஆனாலும் இதைப் பற்றி எப்படியாவது அப்பாவிடம் சொல்ல வேண்டும் அப்பொழுது பண்ணையார் தன் மகளுக்கு திருமணம் செய்து வைத்து விடலாம் 12-வது முடித்து விட்டால் தானே இதற்கு மேல் என்ன படித்தது போதும் ஒரு பெண் இதற்கு மேல் என்ன படிப்பு படித்தது போதும் கல்யாணம் செய்து வைத்து விடலாம் என யோசிக்கிறார் அப்பொழுது தரகர் ஒருவர் வருகிறார் ஐயா வணக்கம் வாங்கள் தரகர் நானும் உங்களை தான் நினைத்தேன் நல்ல பயனாக நல்ல அரசாங்க வேலையில் இருப்பவனாக ஒரு மாப்பிள்ளை பாருங்கள் என் மகளுக்கு திருமணம் செய்து வைக்கலாம் என நினைக்கிறேன் சரி ஐயா நான் பார்த்து சொல்கிறேன் எனத் தரகர் சொல்கிறார் ஆனால் பாரதிக்கோ படிக்க வேண்டும் படித்து வாழ்க்கையில் உயர வேண்டும் கல்யாணம் என்ற எண்ணம் எல்லாம் அவளுக்கு இப்போதைக்கு எதுவுமே இல்லை கிராமத்தில் பிறந்து கிராமத்திலே இருந்து நம் ஒரு சாதனை பெண்ணாக வாழ வேண்டும் என அவளுக்கு ஒரு ஆசை ஆனால் அவள் நினைப்பதெல்லாம் அங்கு நடப்பது இல்லை தன் அப்பா அதாவது பண்ணையார் சொல்லும் முடிவு மட்டும்தான் அவர் என்ன செய்தாலும் அதை எதிர்த்துப் பேச முடியாது சொந்த பந்தம் என இருக்கிறார்கள் அவர் யாரும் அவர்கள் யாரையும் பண்ணையார் மதிப்பதும் இல்லை பேசுவதும் இல்லை அதனால் அவர்களும் பண்ணையாரிடம் எதுவும் பேசவும் மாட்டார்கள் அவர்களிடம் என்ன சொன்னாலும் அவர் கேட்க மாட்டார் என நினைப்பார்கள் ஆனாலும் ஏதாவது முக்கியமான விஷயம் என்றால் சில பேர் வந்து பேசுவார்கள் அதையும் பண்ணையார் இவர்கள் சொல்லி நாம் கேட்பதா என்று பிடிவாதமும் ஒரு வறட்டு கௌரவமும் பிடித்தவர் இவர் இப்படி இருக்க பாரதியின் எண்ணம் கனவு இது எல்லாம் எப்படி சொல்வது எப்படி செய்வது என அவளுக்கு தெரியவில்லை யாரிடமும் அவள் அதிகம் பழகுவதுமில்லை பேசுவதும் இல்லை அவள் உண்டு அவள் வேலை உண்டு என்று மட்டும் தான் இருப்பாள் என் என்றால் யாரிடம் பேசுவதற்கும் அனுமதி இல்லை தன் அம்மாவும் அதிகம் பேசுவாரா பேசுவதும் இல்லை இவள் உண்டு இவள் வேலை உண்டு என இருப்பதே இவருக்கு கிராமத்தில் பிறந்ததல் சிறு பயம் அதிக பொறுமை எதுவாக இருந்தாலும் சரி அப்பா அம்மா சொன்னால் சரியாகத்தான் இருக்கும் என்ற எண்ணம் அவளோடு பிறந்தது அதனாலே எதுவும் செய்வதற்கு அவள் யோசித்துக் கொண்டே இருக்கிறாள் இப்படி இருக்க திடீரென்று தாகர் வந்து விடுகிறார் தரகர் ஐயா நீங்கள் கேட்டது போலவே நல்ல பையன் அரசாங்க வேலையில் இருக்கிறான் அவரை பெண் பார்க்க வரச் சொல்லலாமா தாங்கள் என்ன சொல்கிறீர்கள் எனக் கேட்க பண்ணையார் சரி வரச்சொல் நல்ல இடம் என்றால் கொடுத்து விடலாம் கல்யாணம் முடிந்தால் நல்லது தானே என சொல்கிறாள் சரி ஐயா நான் நாளை அவர்களை வரச் சொல்கிறேன் என தரகர் சொல்கிறார் மறுநாள் பாரதியும் தன் அம்மா பூங்கொடியும் கோவிலுக்கு கிளம்புகிறார்கள் அப்பொழுது பண்ணையார் சாமியிடம் சீக்கிரம் கல்யாணம் ஆக வேண்டும் என வேண்டிக் கொள் பாரதி என சொல்கிறார் ஆனாலும் அவளுக்கு எதற்கு இப்பொழுதே கல்யாணம் பற்றிய பேச்சு என அவள் மனதில் யோசிக்கிறாள் எதையும் எடுத்ததும் கேட்க முடியாது அதனால் எதாக இருந்தாலும் தனக்குள்ளேயே கேட்டுக் கொள்வது அவளுக்கு வழக்கமாக இருந்தது தான் அம்மா பூங்கொடியும் பாரதியும் கோயிலுக்கு வந்து சாமி கும்பிட்டு விட்டு வீட்டிற்கு வருகிறார்கள் பாரதியை பெண் பார்க்க வருகிறார்கள் அதனால் சீக்கிரம் அவளை அலங்காரம் செய் என சொல்கிறார். அதற்கு ஒரு வார்த்தை கூட என்ன எதற்கு ஏன் என பூங்கொடி கேட்கவே இல்லை சரி செய்கிறேன் அவ்வளவுதான் அவள் பேசிய வார்த்தை. என்ன சொல்கிறார் எதற்கு இப்பொழுது கல்யாணம் என கேட்கிறாள் அப்பா சொன்னால் சரியாகத்தான் இருக்கும் அவரை எதிர்த்துப் பேச முடியாது அவர் சொல்வதைக் கேள் என சொல்கிறாள் ஆனாலும் இப்பொழுது எதற்கு மா நான் இன்னும் படிக்க வேண்டும் படித்து எனக்காக வாழ்க்கையை நான் தானே வாழ வேண்டும் யாரோ ஒருவரை நம்பி நான் எப்படி கல்யாணம் செய்து கொள்வது என பாரதி கேட்கிறாள் யாரோ ஒருவருக்கு உன்னை கல்யாணம் செய்து கொடுப்பாரா அப்பா நன்றாக விசாரித்து நல்ல மாப்பிள்ளை என்று தெரிந்து கொண்டுதானே கல்யாணம் செய்கிறார் இப்படி எதிர்த்து பேசக்கூடாது பாரதி நாங்கள் சொல்வதைத்தான் நீ கேட்க வேண்டும் என பூங்கொடி சொல்கிறான் வருபவர்கள் எப்படி என்று பார்த்துக் கொண்டு அப்புறம் பேசிக்கொள்ளலாம் பாரதி இப்பொழுது நீ எதுவும் பேசக்கூடாது அப்பா சொல்வதை மட்டும் நீ கேட்க வேண்டும் சீக்கிரம் ஆக நீ அலங்காரம் செய்து கொள் அவர்கள் வந்துவிட்டால் என்ன செய்வது எனப் பூங்கொடி சொல்கிறாள் எனக்கு இந்த வாழ்க்கை கொஞ்சம் கூட பிடிக்கவில்லை ஏன் இப்படி செய்கிறீர்கள் என சொல்லிவிட்டு அவளும் சரி என அலங்காரம் செய்து கொள்கிறாள் மாப்பிள்ளை வீட்டார் வருகிறார்கள் தரகர் வந்து ஐயா இவர்கள்தான் மாப்பிள்ளை என அழைத்துக் கொண்டு வருகிறார் பண்ணையார் வாருங்கள் வணக்கம் என சொல்லி உள்ளே அழைத்து வருகிறார் வந்ததும் தரகர் இவர்தான் மாப்பிள்ளை கதிரவன் என பெயர் சொல்கிறார் வணக்கம் என மாப்பிள்ளை பண்ணையாரிடம் சொல்கிறார் இவர் மாப்பிள்ளையின் அம்மா அப்பா இவர்கள் இருவரும் கிராமத்தில் தான் இருக்கிறார் மாப்பிள்ளை மட்டும் பட்டணத்தில் அரசாங்க வேலையில் இருக்கிறார் ஐயா உங்களுக்கு பிடித்திருந்தால் நம் மேற்படி பேசி முடித்துக் கொள்ளலாம் திருமணத்தை என தரகர் சொல்கிறார் சரி எனக்கு மாப்பிள்ளையை பிடித்து தான் இருக்கிறது ஆனாலும் பெண் பார்த்துவிட்டு நம் என்ன என்பதை பேசிக்கொள்ளலாம் என பண்ணையார் சொல்கிறார் பாரதியை அழைத்து வா பூங்கொடி என தன் மனைவியிடம் சொல்கிறார் பூங்கொடியும் பாரதியை அழைத்துக்கொண்டு வருகிறாள் எல்லோருக்கும் வணக்கம் சொல் பாரதி என சொல்கிறார் பண்ணையார் வணக்கம் என சொல்கிறாள் காபி கொடு என பூங்கொடி கொண்டு வந்து பாரதி இடம் கொடுக்கிறாள் அதை பாரதி வந்திருக்கும் மாப்பிள்ளை விட்டார்கள் மாப்பிள்ளையை கூட அவர் சரியாக பார்க்கவில்லை அவளுக்கு இருக்கும் குழப்பமும் தீரவில்லை இதற்குள் கல்யாணமா என அவள் அதையே யோசித்துக் கொண்டு இருக்கிறாள் யார் என்ன எது என்று எதுவும் கேட்கவில்லை பார்த்ததுமே மாப்பிள்ளை இடம் உனக்கு பெண் பிடித்திருக்கிறதா என்று மாப்பிள்ளையின் அம்மா அப்பா கேட்கிறார் பிடித்திருக்கு என தன் தலையை ஆட்டுகிறார் கதிரவன் உடனே தன் அம்மா அப்பா இருவரும் பிடித்தது என் மகனுக்கு பெண்ணை மேற்படி நம் திருமணத்திற்கான வேலையை செய்யலாம் என சொல்கிறார்கள் சரி எனக்கும் மாப்பிள்ளையை பிடித்து தான் இருக்கிறது என பண்ணையார் சொல்கிறார் இருந்தாலும் பெண் இடம் ஒரு வார்த்தை கேட்க வேண்டும் தானே என மாப்பிள்ளையின் அம்மா அப்பா சொல்கிறார்கள் என் மகளை நான் அப்படி வளர்க்கவில்லை நான் சொன்னால் அவள் கேட்பாள் நான் சொல்வது தான் முடிவு அவளுக்கு இந்த கல்யாணத்தில் சம்மதம்தான் என ஒரே வார்த்தையில் முடித்துக் கொள்கிறார் அதைக் கேட்டதும் பாரதி உடைந்து போகிறாள் நமக்குப் பிடித்ததா என்று கூட நம் அப்பா நம்மிடம் கேட்க மாட்டார அவள் நினைக்கிறாள் படிக்கும் வயதில் திருமணம் தேவையா ஏன் இவர் இப்படி செய்கிறார் யாராவது நம்மை காப்பாற்ற மாட்டார்களா என பாரதி நினைக்கிறாள் திருமணத்திற்கான வேலையை நாம் பார்க்கலாம் நல்ல நாள் பார்த்துவிட்டு நான் உங்களிடம் சொல்கிறேன் மாப்பிள்ளை என்ன வேலை செய்கிறார் அரசாங்க வேலையில் இருக்கிறான் மாதம் 20 ஆயிரம் சம்பளம் வாங்குகிறான் வீடு நிலம் என எங்களுக்கு சிறிது இருக்கிறது ஒரே ஒரு மகன் தான் வேறு யாரும் எங்களுக்கு இல்லை நாங்கள் இருவரும் விவசாயத்தைப் பார்த்துக் கொண்டு கிராமத்தில் இருக்கிறோம் இவன் மட்டும் தான் பட்டணத்தில் வேலையில் இருக்கிறான் இவன் தனியாக இருப்பதால் கல்யாணம் செய்து வைத்தால் அவனும் அவன் மனைவியும் நன்றாக வாழ்வார்கள் என்பதற்காக தான் கல்யாணம் செய்யலாம் என நான் தரகர் இடம் கேட்டதற்கு உங்களைப் பற்றி சொன்னார்கள் என மாப்பிள்ளையின் அம்மா சொல்கிறாள் சரி எனக்கு மாப்பிள்ளையை பிடித்து தான் இருக்கிறது என்னிடம் இருக்கும் எல்லாம் என் மகளுக்கு மட்டும் தான் வேறு யாருக்கும் எதுவும் இல்லை அதனால் நான் என்ன எது என்று எதையும் சொல்லப்போவதில்லை நான் வைத்திருக்கும் சொத்து எல்லாத்திற்கும் ஒரே வாரிசு என் மகள் பாரதி தான் என பண்ணையார் சொல்கிறார் சரி நாங்கள் வரதட்சணை பற்றி ஒன்றுமே கேட்கவில்லை பெண் எங்களுக்கு பிடித்திருக்கிறது நீங்கள் திருமணம் செய்து வைத்தால் எங்களுக்கு அதுவே போதும் என மாப்பிள்ளை வீட்டார் சொல்கிறாள் மாப்பிள்ளைக்கு பெண் பிடித்திருக்கிறது என இன்னொரு முறை கேட்கலாமா என தரகர் சொல்கிறார் அவனுக்கும் பிடித்து தான் இருக்கிறது எங்கள் மகனை நாங்களும் அப்படி வளர்க்கவில்லை என மாப்பிள்ளையின் அம்மா அப்பா சொல்லவும் சரி என தரகர் அப்பொழுது இரு வீட்டிற்கும் சம்மதம் இனி அடுத்து நிச்சயதார்த்தம் வைத்துக் கொள்ளலாமா இல்லை நேரடியாக திருமணத்தையே செய்து முடித்து விடலாமா என கேட்கிறார் எதற்கு இரண்டு விசேஷம் ஒரே நாள் நிச்சயம் செய்து விட்டு உடனே திருமணத்தை செய்து கொள்ளலாம் ஒரு நல்ல நாள் ஜோதிடரை பார்த்துவிட்டு நான் உங்களிடம் சொல்கிறேன் தரகர் என பண்ணையார் சொல்கிறார் சரிங்கள் ஐயா தாங்கள் சொல்வது போலவே செய்து கொள்ளலாம் என தரகர் சொல்கிறார் அப்பொழுது நாங்கள் வருகிறோம் என மாப்பிள்ளை வீட்டார் கிளம்புகிறார்கள் இப்பொழுது பண்ணையார் பாரதி இடம் என்ன கல்யாணம் செய்துகொள்ள உனக்கு விருப்பமா என்று நான் உன்னிடம் கேட்கவில்லை என்று வருத்தமா எப்படி என்றாலும் யாரையாவது திருமணம் தான் செய்து கொள்ளப் போகிறாய் அது நல்லவனாகவும் படித்தவனாகவும் இருக்கும் இவனையே செய்து கொள் அப்பா நான் படிக்க வேண்டும் எனக்கும் சில கனவுகள் இருக்கிறது என பாரதி சொல்கிறார் அவனை திருமணம் செய்து கொண்டு அதற்கு மேல் நீ படித்தாலும் சரி படிக்காவிட்டாலும் சரி எனக்கு அவசியமில்லை உனக்கு திருமணம் செய்து வைத்தால் போதும் நான் நிம்மதியாக இருப்பேன் என் கடமை முடிந்துவிடும் என பண்ணையார் சொல்கிறார் எதற்கு இவ்வளவு அவசரமாக எனக்கு திருமணம் செய்தீர்கள் நான் என்ன ஏதாவது தவறு செய்து விடுவேன் என நீங்கள் நினைக்கிறீர்களா தவறு செய்தால் நான் உன்னை விட்டு விட்டு வேடிக்கை பார்க்க மாட்டேன் எனக்கு மகளே இல்லை என்று தலைமுழுகி விடுவேன் அப்படிப்பட்ட பெண் எனக்கு தேவையே இல்லை அப்படி ஒரு பெயர் வந்துவிடக் கூடாது என்பதற்காகத்தான் நானாகவே திருமணம் செய்து வைத்து கௌரவமாக வாழ இப்பொழுது யாராவது உன்னை தவறாக பேசுவார்களா யாருக்கும் எந்த பிரச்சனையும் இல்லை அப்பா படித்து முடித்த பின் நான் கல்யாணம் செய்து கொள்கிறேன் அப்பா இப்பொழுது வேண்டாம் என பாரதி கேட்கிறாள் மாப்பிள்ளையை பிடித்திருக்கிறது திருமணத்திற்கு ரெடியாகு அவ்வளவுதான் என் வார்த்தை சரியா உனக்கு சம்மதமா இல்லையா என்று எல்லாம் நான் கேட்கவில்லை அவ்வளவுதான் ஒரே வார்த்தை என சொல்லிவிட்டு பண்ணையார் நம் சொந்த பந்தங்களுக்கு எல்லாம் தெரிய வேண்டும் நான் பார்த்திருக்கும் மாப்பிள்ளை எப்படியாப்பட்டவன் என்று அரசாங்க வேலையில் இருப்பவன் என்று எல்லோருக்கும் தெரிய வேண்டும் அதனால் எல்லாம் சொல்ல பத்திரிகை எல்லாம் அடிக்க வேண்டும் எனக்கு வேலை எவ்வளவு இருக்கிறது உங்களிடம் பேசிக் கொண்டு இருக்க எனக்கு நேரமில்லை என சொல்லிவிட்டு அவரும் அவருக்கு அடி ஆட்கள் இருப்பவர்களும் செல்கிறார்கள் பாரதி அம்மா இப்பொழுது கூட நீ வாயைத் திறந்து பேச மாட்டாயா நான் வாழ வேண்டும் என்று நீ நினைத்தாயா இல்லை எப்படியோ போகட்டும் என்றுதான் என்னை பெற்றாயா ஏன் இப்படி என்னை இவர் செய்கிறார் எனக்கு ஒரு வார்த்தை பிடித்து இருக்கிறதா என்று கேட்கவும் இல்லை என் வாழ்க்கைக்கு முடிவை எடுக்க எனக்கு தைரியம் இல்லை என்ன செய்வது என்று எனக்கு தெரியவில்லை பாரதி போகிறாள் அழுது கொண்டே உள்ளே போகிறாள் பூங்கொடி என்ன செய்வது என்றே அவளுக்குத் தெரியவில்லை எதுவாக இருந்தாலும் அவர் செய்தால் அது சரியாகத்தான் இருக்கும் என நினைக்கிறாள் சில பேர் எல்லாம் வருகிறார்கள் என்ன பூங்கொடி உன் மகளுக்கு திருமணமும் என நாங்கள் கேள்விப்பட்டோம் உண்மைதானா என அக்கம் பக்கம் உள்ள சொந்தங்கள் எல்லாம் கேட்கிறார்கள் ஆமாம் எல்லாம் அவர் எடுத்த முடிவுதான் நல்லா படித்த பையன் ஆகவும் வேலையில் இருப்பவர் என சொல்கிறார் நன்றாக விசாரித்துக் கொடுங்கள் நம் பெண் வாழ்க்கை எப்படியோ போகட்டும் என்றெல்லாம் விட்டுவிடக்கூடாது பூங்கொடி நீ பண்ணையாரிடம் சொல் அவர் யார் வார்த்தையும் கேட்பதில்லை அவர் தன் பெண் வாழ்க்கையாவது நல்லா இருக்க வேண்டும் என நினைக்க வேண்டும் என பக்கத்தில் இருக்கும் பெண்கள் சொந்தக்காரர்கள் எல்லாம் சொல்கிறார்கள் அதற்கு பூங்கொடி அவருக்குத் தெரியும் அவர் எது செய்தாலும் சரியாகத்தான் இருக்கும் தன் மகள் வாழ்க்கை எப்படியாவது போகட்டும் என நினைப்பவர் யாராவது இருப்பார்களா நீங்கள் உங்கள் வேலையை பாருங்கள் அவரைப் பற்றிய எப்பொழுதும் பேசிக்கொண்டு குற்றம் சொல்லிக் கொண்டு குறை சொல்வதே உங்களுக்கு வேலை என சொல்கிறாள் பூங்கொடி அதற்கு அவர்கள் எங்களுக்கு இதைத் தவிர வேறு வேலை இல்லையா அவர் சரியே இல்லை என்றாலும் அவர் சொல்வது தான் முடிவு என வாழ்பவர் அதனால் தான் நாங்கள் சொன்னால் அதற்கு அவரை விட மோசமாக நீ பேசுகிறாய் எப்படியோ போங்கள் உங்கள் குடும்பம் எங்களுக்கு என்ன ஆனது என சொல்கிறார்கள் பண்ணையார் தன் நண்பர்களிடம் தனக்கு தெரிந்த சில பேரிடம் என் மகளுக்கு திருமணம் செய்யப் போகிறேன் அதற்கு அவர்கள் எதற்கு இவ்வளவு அவசரமாக திருமணம் ஒரு இரண்டு மூன்று வருடம் கழித்து தான் திருமணம் செய்தால் என்ன இவ்வளவு அவசரமாக திருமணம் தேவையா கொஞ்ச நாள் கழித்து செய்தால் என்ன பண்ணையார் ஐயா இவ்வளவு சீக்கிரம் திருமணம் செய்கிறீர்கள் நன்றாக படிப்பவள் பாரதி அவளை நீங்கள் இன்னும் படிக்க வைக்கலாம் தானே என அவரின் சொந்தக்காரர்களும் சில நண்பர்களும் சொல்கிறாள் நான் உங்களிடம் ஆலோசனை கேட்கவில்லை பெண் பார்த்துவிட்டு போயிருக்கிறார்கள் என்ன எனக்கு மாப்பிள்ளையை பிடித்திருக்கிறது நான் திருமணம் செய்யப் போகிறேன் என்று தான் சொன்னேன் தவிர உங்களுடைய கருத்து என்ன அதற்கு காரணம் என்ன என்றெல்லாம் நான் இப்பொழுது கேட்கவில்லை திருமணத்திற்கு வேலை இருக்கிறது அதனால் தாங்கள் வந்து கொஞ்சம் செய்ய வேண்டும் அதற்கு எவ்வளவு பணமோ அது வாங்கிக் கொள்ளுங்கள் என்றுதான் சொல்ல வந்தேனே தவிர உங்களிடம் கருத்து கேட்க வரவில்லை என சொல்லவும் அவர்களுக்கு கோவம் வருகிறது சரி நாங்கள் எதுவும் சொல்லவில்லை நீங்கள் சொல்லும் வேலையை செய்து தருகிறோம் நீங்கள் எங்களுக்கு பணம் தருகிறீர்கள் அவ்வளவுதான் என சொல்கிறார்கள் எல்லாம் சிறப்பாக தான் செய்கிறார் பாரதியிடம் தன் சொந்தக்காரர்கள் சில பேர் உனக்கு இந்த கல்யாணத்தில் சம்மதமா நீ ஏன் எதுவும் பேசாமல் உன் அம்மா போலவே இருக்கிறாய் பிடிக்கவில்லை என்று ஒரு வார்த்தை சொன்னால் கல்யாணத்தை நிறுத்தி விடலாம் தானே உன் அப்பா செய்வது மிகவும் தவறு அதை நாங்கள் சொன்னால் அவர் கேட்க மாட்டார் நீயாவது பேசி பார்க்கலாம் தானே பாரதி. நீ எவ்வளவு புத்திசாலி உனக்கே தெரியாதா என சில பேர் கேட்கிறார்கள் அதற்கு அவர் என் அப்பா செய்தால் சரியாகத்தான் இருக்கும் அவரை மீறி நான் எதுவும் செய்ய மாட்டேன் அதற்கு எனக்கு தைரியமும் இல்லை அவர் அவமானப்படுவது என்னால் பார்க்க முடியாது என சொல்கிறாள் இதற்கு மேல் உன் தலைவிதி அந்த கடவுள் என்ன நினைக்கிறாரோ அதே நடக்கட்டும் பாரதி என சொல்கிறார்கள் திருமண ஏற்பாடு எல்லாம் சிறப்பாக நடக்கிறது ஒரு நல்ல நாள் பார்த்து திருமணமும் நடக்கிறது சரி இதற்கு மேல் நம் தலைவிதி இதுதான் கல்யாணம் திருமணமான பின் தான் நம் படிப்பை பற்றி யோசிக்கலாம் அவர் நல்லவராக தான் இருப்பார் அவரை பார்த்தால் தெரிகிறது அவரிடம் திருமணத்திற்கு பின் பேசி நம் படிப்பதை அவரிடம் சொல்லலாம் என அவள் நினைக்கிறாள் அப்பா தான் இப்படி பிடிவாதம் கோபம் என இருப்பவர் ஆனால் வரும் கணவராவது நம்மிடம் நன்றாகவும் அன்பாகவும் இருக்க வேண்டும் என பாரதி நினைக்கிறாள் அவளும் திருமணத்திற்கு தயாராகி விட்டாள் திருமணம் நடந்து முடிகிறது பாரதி தன் புகுந்த வீட்டுக்குச் செல்கிறாள் போகும் போது பண்ணையாரும் தன் மனைவி பூங்கொடியும் இங்கு எப்படி நல்ல பேர் எடுத்தாயோ அப்படியே அங்கும் நல்ல பேர் எடுக்க வேண்டும் அவர்கள் மனம் நோகாமல் அவர்கள் சொல்வதைக் கேட்டு நல்ல பெண்ணாக நீ இருக்க வேண்டும் எனக்கு நீ பேர் வாங்கி தர வேண்டும் என பண்ணையாரும் பூங்கொடியும் சொல்கிறார்கள் சரிப்பா நான் நீங்கள் சொல்வது போலவே நடந்து கொள்கிறேன் என் மகளை பார்த்துக் கொள்ளுங்கள் மாப்பிள்ளை நான் அவளை இவ்வளவு நாட்களாக பார்த்துக் கொள்கிறேன் இதற்கு மேல் நீங்கள் தான் அவளை நன்றாக பார்த்து கொள்ள வேண்டும் அவர் கண்ணில் இருந்து ஒரு துளி கண்ணீர் கூட வரக்கூடாது அவள் ஆசைப்பட்டதை நான் சிலது செய்யவில்லை நீங்களாவது அவள் ஆசைப்பட்டதை செய்து தர வேண்டும் என சொல்கிறார் சரி அவ்வளவுதான் வேறு எதுவுமே கதிரவன் பேசவில்லை நாங்கள் வருகிறோம் என கிளம்பி வருகின்றார்கள் இதற்கு மேல் நீங்கள் இருவரும் நன்றாக வாழ வேண்டும் சந்தோஷமாக இருக்க வேண்டும் என் மகனை நீ தான் நன்றாக பார்த்து கொள்ள வேண்டும் பாரதி எனதன் மாமியார் சொல்கிறாள் சரி அத்தை நான் நன்றாக வை பார்த்துக்கொள்கிறேன் தன் வீட்டுக்கு வருகிறார்கள் முதன் முதலாக புகுந்த வீட்டுக்கு வலது கால் எடுத்து வைத்து வாமா என தன் மாமியார் அழைக்கிறாள் சரி என வருகிறாள் வந்து பூஜை அறையில் விளக்கேற்றிவிட்டு இதுதான் நம் வீடு இனி இங்கதான் நீ வாழப் போகிறாய் என சொல்கிறாள் தன் மாமியார் ஆமாம் பாரதி நீயும் எங்களுக்கு மகள்தான் நாங்களும் இருவரும் உன் அப்பா அம்மா என நினைத்துக் கொள் என தன் மாமனார் சொல்கிறார் சரி மாமா என பாரதி சொல்கிறாள் ஆனால் கதிரவன் எதுவும் பேசவில்லை ஏதாவது பேசு கதிரவா ஏன் இப்படி அமைதியாக இருக்கிறாய் எனத் தன் அம்மா அப்பா இருவரும் சொல்கிறார்கள் அதற்கு கூட அவன் எதுவும் பேசவில்லை எனக்கு தலை வலிக்கிறது நான் உள்ளே போகிறேன் என போகிறான் நமக்கு தான் கல்யாணத்தில் விருப்பம் இல்லாமல் இருந்தது இவர் நம்மை பார்க்கும் போது பிடித்திருக்கிறது எனத்தானே சொன்னார் ஆனால் இப்பொழுது பார்த்தால் இவர் எதுவும் பேசவே மாட்டிக்கிறார் . சிரிக்கவும் மாட்டிக்கிறாரே என அவள் யோசிக்க சரி இப்பொழுது தானே வந்திருக்கிறோம் இனி பார்த்துக் கொள்ளலாம் போகப் போக அவர் பேசுவார் என நினைக்கிறாள் ஒரு நாள் இரண்டு நாள் என நாட்கள் அப்படியே செல்கிறது கதிரவன் சரி நான் வேலைக்கு போக வேண்டும் அதனால் நான் பட்டினத்திற்கு போகிறேன் என சொல்கிறான் சரி கதிரவா நீ போகும் போது பாரதியும் அழைத்துக் கொண்டு போ நீங்கள் இருவரும் இனி ஒன்றாக தானே வாழ வேண்டும் என தன் அம்மா சொல்கிறாள் சரி என சொல்லிவிட்டு நீயும் அவனோடு போ என தன் மாமியார் சொல்கிறார் இருவரும் கிளம்பி வருகிறார்கள் வரும் வழியில் கூட கதிரவன் ஒரு வார்த்தை பாரதியிடம் பேசவில்லை வீட்டிற்கு வருகிறான் வந்து கதவைத் திறந்து உள்ளே போகிறான் இதுதான் நம் புது விடா என பாரதி கேட்கிறாள் அவன் எதுவும் பேசவில்லை அவன் பாட்டுக்கு உள்ளே போய் முகம் கழுவிக்கொண்டு வந்து உட்காருகிறான் பாரதி நான் கேட்கிறேன் நீங்கள் எதுவுமே சொல்ல மாட்டிக்கிறீர்களா என கேட்கிறாள் அவன் வாய் திறந்து பேச மாட்டிக்கிறான் என்ன ஆனது உங்களுக்கு சரி இருங்க நான் உங்களுக்கு காப்பி கொண்டு வருகிறேன் பொய் சமையல் அறைக்குள் செல்கிறாள் தேவையான பொருட்கள் எல்லாம் வீட்டில் இருக்கிறது ஏனென்றால் அவன் கல்யாணமான பின் இங்குதானே வாழ வேண்டும் என முதலே தன் அம்மா இங்கு வந்து வீட்டிற்கு தேவையான அனைத்து பொருட்களையும் வாங்கி வைத்துவிட்டு தான் சென்றார் அதைப்பற்றி கூட அவன் வீட்டில் அனைத்துப் பொருளும் இருக்கிறது உனக்கு என்ன தேவை என்ன வேண்டும் என எதுவுமே அவன் கேட்பதில்லை அவளே போய் பார்க்கிறாள் வீட்டில் பால் மற்றும் இல்லை என சொல்கிறாள் சரி என அவன் எழுந்து போய் பால் வாங்கி வந்து கொடுக்கிறான் அவள் காப்பி வைத்து அவனுக்கு கொடுக்கிறாள் குடித்துவிட்டு பேசாமல் எழுந்து போகிறான் இரவு என்ன சமைப்பது என கேட்கிறாள் அதற்கும் அவன் எதுவும் பேசவில்லை எதற்காக இவர் இப்படி பேசாமல் இருக்கிறார் என புரியாமல் தவிக்கிறாள் சரி ஒரு வேளை ஏதாவது எப்படி பேசுவது என்று தயக்கமாக இருக்கிறாரா என அவள் நினைக்கிறாள் சரி போகப் போக பார்க்கலாம் நாம் அப்பா தான் அப்படி என்றால் இவர் இப்படி இருக்கிறார் என எல்லாம் அவளுக்கு கொஞ்சம் புதிதாகவே இருக்கிறது எப்படி சமைப்பது என்ன செய்வது என எதுவும் தெரியாமல் கொஞ்சம் தடுமாறுகிறாள் பயப்படுகிறாள் அவர் ஏதாவது சொன்னால் என்ன செய்வது அவர் எதுவுமே பேச மாட்டிக்கிறாரே சரி ஆனாலும் ஏதாவது செய்யலாம் என செய்கிறாள் வீட்டில் என்ன இருக்கிறது என்று பார்த்தால் வீட்டில் அரிசி எல்லாம் இருக்கிறது சரி என்று தனக்குத் தெரிந்த முறையில் சமைக்கிறாள் இரவு உணவு ரெடியாகிவிட்டது வாருங்கள் சாப்பிடலாம் என கூப்பிடுகிறாள் வருகிறான் அவன் உட்காருகிறான் இவள் சாப்பாடு பரிமாறவும் சாப்பிட்டுவிட்டு எழுந்து போகிறான் நீ சாப்பிடு நீ சாப்பிட்டாயா? இல்லையா என்று கூட அவன் கேட்கவில்லை சரி என அவன் கிளம்பி போன பின் இவளே சாப்பிடுகிறாள் மறுநாள் காலை எழுந்து குளித்துவிட்டு வேலைக்கு கிளம்பி போகிறான் இருங்கள் அதற்குள் கிளம்புகிறீர்கள் சாப்பிடவில்லையா அவன் எதுவும் பேசாமல் கிளம்பி போகிறான் பாரதிக்கு இதுவே பெரிய குழப்பம் ஆகிவிட்டது அவன் மனதில் ஒரு பெரிய குழப்பம் அவன் ஒரு பெண்ணை காதலித்து இருக்கிறான் அவள் பெயர் கார்த்திகா அவளுக்கு தன் வீட்டில் தங்கள் காதலை ஏற்றுக் கொள்ளாமல் வேறு ஒரு மாப்பிள்ளையை பார்த்து திருமணம் செய்து வைத்து விட்டார்கள் அவளை மறக்க முடியாமல் இவன் தவிக்கிறான் அப்படி இருக்கும்போது எப்படி பாரதியிடம் பேசுவது பழகுவது அம்மா அப்பா இருவரும் சேர்ந்து நம்மை கட்டாயம் செய்து திருமணம் செய்து வைத்தார்கள் பாரதிக்கு நாம் செய்யும் பெரிய துரோகம் அல்லவா என அவன் மனதில் அவன் நினைத்து வருந்துகிறான் இதை எப்படி பாரதியிடம் சொல்வது அவள் என்ன நினைப்பார் என யோசித்துக் கொண்டு இருக்கிறான் ஆசைப்பட்ட வாழ்க்கையும் வாழ முடியவில்லை அப்பாவி பெண்ணை இப்படி ஏமாற்றுகிறேன் என நினைக்கிறான் அதனாலேயே பாரதியிடம் பேசுவதை தவிர்க்கிறான் பாரதிக்கு இது புரியவில்லை இது தெரியாது அதனால் அவள் நாம் என்ன தவறு செய்தோம் என தெரியாமல் அவள் இருக்கிறாள் இரவு வெகு நேரம் ஆனாலும் வீட்டுக்கு கதிரவன் வருவதில்லை பாரதி மட்டும்தான் தனியாக இருக்கிறாள் ஏன் இவர் இப்படி செய்கிறாள் என தெரியாமல் இருக்கிறாள் 11 மணிக்கு மேல் வருவான் வந்ததும் போய் படுத்துக் கொள்வான் சாப்பிடுவீர்களா என பாரதி கேட்டாலும் எதுவும் சொல்ல மாட்டான்சரி கல்யாண வாழ்க்கை விருப்பமில்லாத வாழ்க்கையாக பாரதிக்கும் கதிரவனுக்கும் சென்றது பாரதியின் மனது கதிரவனுக்கு தெரியவில்லை கதிரவனின் மனது பாரதிக்கு புரியவில்லை இருவரும் வெவ்வேறு திசையில் பயணம் செய்கிறார்கள் பேருக்கு இருவரும் கணவன் மனைவி ஆனால் வீட்டுக்குள் கதிரவன் ஒரு வார்த்தை பாரதி மனைவி என பேசவில்லை வேலைக்கு போவான் வருவான்.

எழுதியவர் : தாரா (26-Nov-22, 1:04 am)
சேர்த்தது : Thara
பார்வை : 652

மேலே