கவனம்

ஒவ்வொரு கல்லுக்குள்ளும்
ஒளிந்துகிடக்கிறது;
ஒவ்வொரு சொல்லுக்குள்ளும்
உறைந்துகிடக்கிறது;

கவனமாயிருங்கள்
பெயர்க்கும் போதும்...
பேசும் போதும்...

சிற்பமோ...
மனதோ...
மூளியாகிவிடப்போகிறது!

எழுதியவர் : ஜ. கோபிநாத் (27-Jan-23, 6:28 pm)
சேர்த்தது : Gopinath J
பார்வை : 73

மேலே