மெல்லிடை அசைய மேனகையாய்

முல்லை விரிந்தாற்போல்
---முழுநிலவாய் சிரிக்கிறாய்
அல்லியும் தாமரையும்
-அழகில் இணைந்தாற்போல்
மெல்லிடை அசைய
---மேனகையாய் வருகிறாய்
கல்லிலா சொல்லிலா
---எதில்வடிக்க சொல்லடி !

எழுதியவர் : கவின்சாரலன் (5-Jun-23, 8:47 pm)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 45

மேலே