துள்ளித் திரிந்த காலம்

துளித் துளியாய் சேகரித்தேன்
துள்ளித்திரிந்த காலம் தொட்டு
என்னுள் எழுந்த உன்தன் காதலை.....

தழும்பித் தவிக்கிறது சாகரமாக
மனதில் ஆசைகள் பேரலையாக,
பேரழிவில் தவிக்கின்றேன் சுனாமியாக.....

தாக்கம் தகிக்க தயங்குகிறேன்
தர்க்கம் புரிந்து தடுமாறுகிறேன்
கைகொட்டி சிரிக்கின்றது காலம்
என்மீது.....

கவிபாரதீ ✍️

எழுதியவர் : கவிபாரதீ (20-Sep-23, 6:03 am)
சேர்த்தது : கவிபாரதீ
பார்வை : 40

மேலே