பெண்ணே....!!!!
💃💃💃💃💃💃💃💃💃💃💃
*பெண்ணே..!*
படபை்பு *கவிதை ரசிகன்*
குமரேசன்
💃💃💃💃💃💃💃💃💃💃💃
அடி பெண்ணே !
நிலவும்
உன்னிடம் இருந்து தான்
அழகு பெற்றதோ ?
மலரும்
உன்னிடம் இருந்துதான்
மணம் பெற்றதோ ?
சிலைகள் எல்லாம்
உன்னை கொண்டுதான்
செதுக்கப்பட்டதோ ?
ஓவியங்கள் எல்லாம்
உன்னை கண்டு தான்
வரையப்பட்டதோ ?
காதல் கவிதைக்கு
நீ தான் கலைமகளோ ?
காதல் காவியத்திற்கு
நீதான் தலைமகளோ ?
வண்ணங்களை எல்லாம்
வானவில்
உன்னிடம் இருந்துதான்
கடன் வாங்கியதோ ?
கடல் மீன்
உன் கண்ணில் வந்து தான்
பதுங்கியதோ ?
பூக்கும் விண்மீன்கள் எல்லாம்
உன் புன்னகையின்
மிச்சமோ ?
அடிக்கும் தென்றல் எல்லாம்
உன் மூச்சுக்காற்றின்
எச்சமோ..?
கூவும் குயில்கள் எல்லாம்
உன் குரலை
குத்தகைக்குக் எடுத்ததோ ?
வசந்தகால அழகெல்லாம்
நீ வாடகைக்குக் விட்டதோ ?
மணக்கும் பொருள் எல்லாம்
உன் கட்டழகு
கை தொட்டதோ ......?
புனிதமான இடங்கள் எல்லாம்
உன் பாதம் பட்டதோ....?
*கவிதை ரசிகன்*
💃💃💃💃💃💃💃💃💃💃💃