அழகு தினக் கவிதை

🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

*அழகு தினக் கவிதை*

படைப்பு *கவிதை ரசிகன்*
குமரேசன்

🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

அழகே...!
நீ என்ன
இறைவனுக்கு ஈடா ?
பிறகு ?
தூணிலும் இருக்கிறாய்
துரும்பிலும் இருக்கிறாய் ....

நீ இருப்பதில் மட்டுமல்ல
இல்லாமையிலும் இருக்கிறாய்
இல்லை எனில் ....
ஒருவர் அழகானது என்பதை
மற்றொருவர்
அழகற்றது என்பாரா ?

நீயும்
ஒரு மது ரசம்தான்
கண்களால் பருகும் போது
போதையில்
தள்ளாடுகிறதே மனம்.....!!!

நீ அதிகம் இருப்பது
காலையில் பூக்கும் பூவிலா ?
கள்ளம் இல்லாமல் சிரிக்கும்
குழந்தையின் முகத்திலா ?

பெண்களின்
அடி முதல் முடி வரை
நிறைந்து இருக்கிறாயே !
ஓ ....!
நீ மட்டும் என்ன
விதிவிலக்கா..?

நிலையில்லாத
நீதான்
நிலையாக இருக்கிறாய்.....

நீ கானல் நீர் தான் என்றாலும்
ஏனோ !
எல்லோரும்
கண்ணீர் என்றே
உன்னை நேசிக்கின்றனர்...!

எது அழகு....

கொத்து கொத்தாக
இருக்கும் பூக்கள் அழகா?
நெருக்க நெருக்கமாக
இருக்கும் முள் அழகா..?

குளிர்ச்சியைக் கொடுக்கும்
மழை அழகா ?
வெப்பத்தைக் கொடுக்கும்
வெயில் அழக ?

கதிரவன் பிறக்கும்
காலை அழகா ?
கதிரவன் இறக்கும்
மாலை அழகா ?

பௌர்ணமி நிலவில்
சொட்டும் ஔி அழகா ?
அமாவாசையில்
நிறைந்திருக்கும் இருள் அழகா?

எல்லாமே அழகுதான்
ரசிக்கும் நம் பார்வையில்
அழகு இருந்தால்......!!!


*கவிதை ரசிகன்*

🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

எழுதியவர் : கவிதை ரசிகன் (9-Sep-24, 8:56 pm)
பார்வை : 27

சிறந்த கவிதைகள் (இந்த வாரம்)

மேலே