நண்பனே எங்கே இருக்கிறாய் இப்போது...?!
காப்பி அடித்ததால்... என்
கையில் பிரம்படி
சுளீர் சுளீரென்று....வலித்தது...!
கண்ணீர் கசிகிறது நண்பனின்
கண்களில் - அடிபடாமல் பாவி
அவன் ஏன் அழுகிறான்...?
ஒ....இது நட்பின் வலியோ...?
பதிலை காட்டியது அவன் தவறில்லை.!
எனினும் கலங்குகிறான்
எரிகின்ற என் வலியில்..!
என் மீது பாசம் காட்டியது அவன் தவறோ..?
நண்பனே நண்பனே
எங்கே இருக்கிறாய் இப்போது...?!
நானும் வாத்தியாரடா.....இப்போது....!
நான் திருத்தும் இந்தப் பேப்பரில்..
அன்று நீ காட்டிய அன்பு தெரியுதடா....!
கண்ணெதிரே நீ இல்லை -
எனவே என் நண்பனே...
காற்றை தழுவிக் கொள்கிறேனடா...!
அன்புடன் ஹரி