பெண்ணியம்

---- பெண்ணியம் ----

கருவேல காட்டு பொந்துக்குள்
ஈன்ற ஐந்து குட்டிகளில்
மூன்று காணவில்லை.
எஞ்சியிருக்கும் இரண்டு
என்ன பாலினம் என்பது
உங்களுக்கு தெரியும்.
பெண் நாய் குட்டியை
பிரியத்தோடு எடுத்து வளர்க்கும்
பெரிய மனசு
எத்தனை பேருக்கு
வாய்த்திருக்கும்?

கள்ளி பால் கொடுக்கும்
சிறுபுத்தி
நாய்களுக்கு இருப்பதில்லை.


--- தமிழ்தாசன்----

எழுதியவர் : ---தமிழ்தாசன்---- (24-Sep-12, 5:18 pm)
பார்வை : 163

மேலே