உண்மை அறியாமல் ....

சூரியனை மறைத்துவிடத்தை எண்ணி
பெருமிதம் கொண்டது முகில் ......
மழையின் தொடக்கம் உணராமல்.....!!

கடல் அலைகளை கிழித்ததை எண்ணி
பெருமிதம் கொண்டது பாய்மரம் ......
புயல் காற்றை உணராமல்......!!

மொட்டுடைந்து பூவானதை எண்ணி
கர்வம் கொண்டது மலர் ......
வண்டு வரும் பாதை அறியாமல்....!!

சிற்பத்தை மறைத்தேவிட்டோம் என்று
கர்வம் கொண்டது கல்
சிற்பி வரும் பாதை அறியாமல்.....!!

எழுதியவர் : நிவேதா (27-Sep-12, 9:32 pm)
Tanglish : unmai ariyaamal
பார்வை : 115

மேலே