கவிதையில் அவன் கண்ட பிழைகள் ....!

கண்களில் மை வரைந்தேன்
கவிதைகள் மிக அழகு என்றான்

கண் இமைகள் மூடிக் கொண்டேன்
கவிதையிலே சிறு பிழைகள் என்றான்

கண் சிமிட்டி அவனைக் கண்டேன்
கவிதைகளும் சிறகடிக்கும் என்றான்

கண் மயங்கி காதல் கொண்டேன்
கவிதை நீ என் வாழ்க்கை என்றான்

கண்களிலே கருப்பு கண்ணாடி அணிந்தேன்
கண்மணியே என்னாச்சி என்றான்

கண்ணாளா மெட்ராஸ் ஐ
காட்டட்டுமா கண்களை என்றேன்

கவிதையிலே இப்போது மிகப்பெரிய பிழை என்றபடி......!
கழட்டாதே கழட்டாதே கண்ணாடியை என்றான்

கட்டழகு உருக் குலைந்து விடில் - இங்கு
காதலும் சாகுதல் கூடுமோ ? என்றேன்

கண்விழித்து கண்டபோது அந்தக்
காதலன் சென்று கொண்டிருந்தான் - என்

கண்களிலே பொங்கிய கண்ணீரில் இப்போது
காதலின் உருவம் கானல் நீரில் பிம்பம்.....!

எழுதியவர் : (7-Nov-12, 5:55 am)
பார்வை : 259

மேலே