என் கனவுகள்....

ஒவ்வொரு நாளும்...
இரவின் பாதியில் தொலைந்துவிடும்...
கனவுகள்....
நான் அறியாமல் சுற்றிவருகின்றன...
பகல் பொழுதில்..என் அறையெங்கும்.

ஒவ்வொரு நாளும்...
ஒவ்வொருவிதமாய் நான்.

அன்றொரு நாள்-
நான் பைத்தியமாய் திரிந்த இரவில்...
வெறும் உண்மைகளை மட்டுமே...
யாரையும் அனுசரிக்காது
பேசிக் கொண்டிருந்தேன்.

இன்னொரு நாள்-
நானே உருவாக்கிக் கொண்டிருந்த
காதலில்....
விவஸ்தையற்றுக் கிடந்தேன் இரவு முழுவதும்.

வேறொரு நாள் வந்த கனவிலோ...
குருடனாய்..குரூபியாய்...
ஒரு நாள்...குபேரனாய்...கூட இருந்தேன்.

பெண்ணாய்க் கூட இருந்திருக்கிறேன்...
என் ஒரு நாள் கனவில்.

கனவுகள் பைத்தியமானவை...என்றாலும்...
உண்மையில் அவை...
நம் முகத்தைத்தான் சொல்கின்றன...
என நினைக்கையில்....

என் கனவுகளை எப்போதும் பிடிப்பதில்லை
எனக்கு.

எழுதியவர் : rameshalam (3-Jan-13, 11:33 am)
Tanglish : en kanavugal
பார்வை : 130

மேலே