அசோக் - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : அசோக் |
இடம் | : அழகப்பபுரம் |
பிறந்த தேதி | : 11-Jun-2000 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 20-Feb-2021 |
பார்த்தவர்கள் | : 223 |
புள்ளி | : 16 |
நான் கவிதைகளின் தீராக்காதலன்!!!
குரங்கிலிருந்து மனிதனாக...
மனிதனிலிருந்து இயந்திரமாக...பரிணாம வளர்ச்சியில் நாம்.
தாய்நாட்டுப்பற்றை எரிபொருளாக எரித்துக்கொண்டு
வெளிநாட்டுக்கு வேலை செய்யும் இயந்திரம் நாம்;
ரூபாய் நோட்டுகளுக்கு ஓட்டுகளை விற்று வாக்கு
இயந்திரத்தில் சின்னங்களை அழுத்தப் பயன்படுத்தப்படும் இயந்திரம் நாம்;
கல்வி என்னும் பெயரில் தகவல்களை மட்டும் மூளையில்
பதிவேற்றி தேவைக்கு பயன்படுத்தப்படும் இயந்திரம் நாம்;
உணர்வுகள் அழித்து உயிருடன் இயங்கும் ஒன்றுக்கும் உதவாத இயந்திரம் நாம்;
மருந்துகளை விற்க,நோய்களை வாங்கி பரப்பப் பயன்படுத்தப்படும் இயந்திரம் நாம்;
சுயமாக எதையும் திறமாக செய்யாமல் அடுத்தவன் இயக்கும் இயந்திரம் நாம்;
எவன்
உன் பெயர் கூட எனக்கு ஞாபகம் இல்லை
நீ எங்கிருக்கிறாய் என்பதும் தெரியவில்லை
அன்று என்னை பிடிக்கும் என்றாய்
காரணம் எனக்கே பிடிபடவில்லை
தெரிந்தவர்களுக்கு கூட என்னை பிடிப்பதில்லை
தெரியாததால்தான் பிடித்ததா
தெரிந்திருந்தால் என்ன என் நிலைமையோ
பிடிக்கவில்லை என்றால்கூட முகத்திற்கு நேரே யாரும் சொன்னதில்லை
பிடித்ததை சொன்னதால்தான் பிடித்ததோ உன்னை
கவிதையில் சொல்லத் தெரிந்தவன் கண்களைப்பார்த்து சொல்ல நினைக்கவில்லை
மற்றவர் கண்களால் உன்னை பார்த்தவன் என் கண்களும் உன் அழகை ரசிக்கவில்லை
புற அழகை அழகென்று நினைத்து உலக அழகி உன்னைத் தவறி விட்டேனோ
உன்னை ரசிக்க நான் நினைக்கும்போது என்னை விட்டு எங்கோ நீ!!
என்னமமோ பல பெ
----கதாநாயகர்களெல்லாம் தமிழ் நாட்டில் அரசியல் கட்சி ஆரம்பித்து விட்டார்கள்
சினிமாவின் எதிர்காலம் அவ்வளவு பிரகாசமில்லை என்று சொல்கிறார்களே அப்படியா ?
ஹாலிவுட்டிலிருந்து ஆட்களை கொண்டுவந்து வடநாட்டு பெண்களையும் வைத்து தமிழில் டப்பிங்
செய்து ஒப்பேத்த வேண்டியதுதான் . என்ன செய்வது ? அல்லது சார்லி சாப்ளின் பாணியில் பேசா படமாய்
--silent movie யாய் எடுத்து விடலாமா ? உங்கள் கருத்தைச் சொல்லவும்
கேள்வி அரசியல் சினிமாவின் எதிர்காலம் பற்றியது
நிதானமாகச் சிந்தித்துப் பதில் சொல்லவும்
நகைச் சுவையாக சொல்வதானால் அது உங்கள் விருப்பம்
உங்கள் SENSE OF HUMOR ஐ நான் தடுக்க முடியாது
சோதிடர் யார
உழவன் விளைவித்து உண்கிறாய்
நெசவாளன் நெய்து உடுத்துகிறாய்
கொத்தன் கட்டிய வீட்டில் வாழ்கிறாய்
கூலித்தொழிலாளி உழைப்பில் பிழைக்கிறாய்
எவனோ என்று நினைப்பவர்களிடமெல்லாம்
எவ்வளவோ தேவைகளை தீர்க்கிறாய்
ஆனாலும் நீ உயர்ந்த இனம் என்கிறாய்
மண்ணிலும் ஜாதி பெண்ணிலும் ஜாதி
நாயிலும் ஜாதி நரியிலும் ஜாதி
குருவியில் ஜாதி குரங்கிலும் ஜாதி என்றாய்
குரங்கிலிருந்து வந்த நீ
மலைக்குரங்கு ஜாதியா?
மண்திண்ணும் ஜாதியா?
தொழில் அடிப்படையில் ஜாதி என்கிறாய்
தொழிலை விட்டும் தொல்லைபிடித்த ஜாதியை விடவில்லை
அடையாளம் அடையாளம் என்றாய்
அடையாளம் தொலைத்து அனாதையானாய்
ஒரே இனம் என்றாய்
உன் இனத்து ஏழைக்கூட்டத்தை ஒரு அடி தள்ளிநில் என
உன் பெயர் கூட எனக்கு ஞாபகம் இல்லை
நீ எங்கிருக்கிறாய் என்பதும் தெரியவில்லை
அன்று என்னை பிடிக்கும் என்றாய்
காரணம் எனக்கே பிடிபடவில்லை
தெரிந்தவர்களுக்கு கூட என்னை பிடிப்பதில்லை
தெரியாததால்தான் பிடித்ததா
தெரிந்திருந்தால் என்ன என் நிலைமையோ
பிடிக்கவில்லை என்றால்கூட முகத்திற்கு நேரே யாரும் சொன்னதில்லை
பிடித்ததை சொன்னதால்தான் பிடித்ததோ உன்னை
கவிதையில் சொல்லத் தெரிந்தவன் கண்களைப்பார்த்து சொல்ல நினைக்கவில்லை
மற்றவர் கண்களால் உன்னை பார்த்தவன் என் கண்களும் உன் அழகை ரசிக்கவில்லை
புற அழகை அழகென்று நினைத்து உலக அழகி உன்னைத் தவறி விட்டேனோ
உன்னை ரசிக்க நான் நினைக்கும்போது என்னை விட்டு எங்கோ நீ!!
என்னமமோ பல பெ
இது இன்று கொரொனா யுகம்!!!!
ஓடி உழைத்தவரெல்லாம் ஒடுக்கப்பட்ட காலம்
நாளெல்லாம் உழைத்தவர் 144ல் அடங்கிய காலம்
ஓய்வில்லாமல் மருத்துவர்கள் உயிரை பணயம் வைக்கும் காலம்
உண்ண உணவுக்கு கவலையில்லை உயிருக்குப் பயம் ஒருபக்கம்
உணவே இல்லாமல் உயிர் போய்விடுமோ என்று ஒரு பக்கம்!
திருடி சேர்த்தவர்கள் திடமாய் உட்கார
காய்கறி விற்பவர் கூட கள்வராய் ஒரு பக்கம்
அரசுக்கும் மக்களுக்கும் இடையில் பந்தாக உதைக்கப்படும் காவலர்கள்;
காசிருப்பவன் கம்பீரமாய் கத்துகிறான் காவலர்முன்
கைகட்டி தான் நிற்கின்றனர் காவலர்கள்
ஏழை கொஞ்சம் சத்தம் கூட்டினால் ஏனென்று கேட்காமல் அடிக்கின்றனர்
உனக்காக அணியாமல் ஊருக்காக அணிகின்றாய் முகக்கவசத்தை
தேர்தல் ஆணையம், வாக்கு இயந்திரத்தின் மீது நம்பிக்கை உள்ளதா?
வணக்கம் சகோதர சகோதரிகளே,
சிறுகதை, கட்டுரைப் படைப்புகளை எவ்வாறு பதிவிடுவது ?
அவள் விழுந்ததை ஊரே கண்டது
யாரும் உதவிக்கு வரவில்லை!
அவள் அழகை எல்லோரும் ரசித்தனர்
யாரும் நெருங்க நினைக்கவில்லை!அழும்போதுகூட அவள் அழகுதான்! எல்லோருக்கும் அவள் மேல் காதல்
ஆனால் கூறுவதற்குள் ஓடி மறைந்து விட்டாள்
................................. மழை.....................................
வேறெங்கும் கிடைக்காத குறைந்த விலையில்
எங்கள் உரிமைகள் இங்கு மொத்தவியாபாரத்திற்கு!!
வாழ்க்கை நட்டம் எங்களுக்கு
வாரிசுகளுக்கெல்லாம் சொத்துகள் உங்களுக்கு!!!
தேர்தல் நாள் இது
ஒருமுறை உன் ஓட்டை கொன்று ஐந்தாண்டு கண்ணீர் விடும் நீண்ட இழவு நாள்
வறுமையில் பொருளை விற்றவனை வழியில்லாமல் உரிமையை விற்க வைக்கும் நாள்
5௦௦ ரூபாய்க்கு அதிகாரத்தை இழந்து உன்னை ஊனமாக்கும் நாள்
வந்தவரை எல்லாம் வாழ வைத்தவனை எலும்புத்துண்டுக்கு காத்திருக்கும் நாயாய் ஆக்கிய நாள்
மறுபடியும் ஒருமுறை நீ எல்லாம் மறந்து சொரணையற்று நிற்கும் நாள்
மெய்யில்லா வார்த்தைகளை கேட்டு உன் விரல் மையிடும் நாள்
எவனும் சரியில்லை என்று சொல்பவனே நீ சரியாகிக்கொள் இல்லையெனில்
உன் மூச்சுகாற்றுக்கும் வரி விதிப்பான்
எல்லாரும் ஏமாற்றுக்காரர்கள் என்று சொல்பவனே நீ யார் என்று கேட்டுக்கொள்
ஆட்சியில் திட்டிவிட்டு
பேசாமல் இருக்கும் போது சொல்வதை
புரிந்தவள்
பேச நினைக்கும்போது எங்கேயோ மறைந்தாய்
உன் வார்த்தைகளை அவமதித்தும் என்னை மதித்தாய்
இன்று மதிக்க நினைக்கும்போது என்னை தனிமையில் விதைத்தாய்
பேசத்தெரியாத போது பேசக்கெஞ்சினாய்
இன்று கவிதை எழுதுகிறேன் காணாமல்போய்விட்டாய்
சொல்ல பயம் இருந்தபோது சொல் என்றாய் கண்களால்
சொல்ல நினைக்கும் போது நில் என்றாய் உன்னை விட்டு தூரமாய்!!!!
எப்படியோ காலம் போய்விட்டது
தேடிவருவேன் உன்னிடம் அதுவரை எப்படி பாதுகாப்பேன் இவ்வுயிரை குழப்பங்களுடன்
தனிமையில் நான்!