ஓஷோ கஜன் - சுயவிவரம்

(Profile)

எழுத்தாளர்
இயற்பெயர்:  ஓஷோ கஜன்
இடம்
பிறந்த தேதி
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  03-Jan-2018
பார்த்தவர்கள்:  311
புள்ளி:  43

என் படைப்புகள்
ஓஷோ கஜன் செய்திகள்
ஓஷோ கஜன் - படைப்பு (public) அளித்துள்ளார்
04-Jul-2020 12:44 pm

வண்ணப் பூக்கள்போல்
சுவரில்
புகைப்படங்கள்
பூத்துக் குலுங்கின

Wall full of flowers

மேலும்

ஓஷோ கஜன் - படைப்பு (public) அளித்துள்ளார்
03-Jul-2020 11:30 pm

சருகுகள் மேல் நடக்கும் பறவை
ஞாபகம் செய்யும்
காதலனின் வருகை

மேலும்

ஓஷோ கஜன் - படைப்பு (public) அளித்துள்ளார்
03-Jul-2020 11:20 pm

("Arrival" திரைப்படத்தையும் "Story of your life" நாவலையும் தழுவி நான் எழுதியது)
#1 காரின் என்ஜின் சத்தமும் headlight வெளிச்சமும் ஓய்ந்து , எம் இதய இயந்திரங்களின் சத்தம் மட்டுமே கேட்டுக்கொண்டிருந்த இரவு , மெதுவாக காரிலிருந்து இறங்கி நான் படிக்கட்டுகளில் ஏறி வீட்டுக் கதவை நோக்கி நடந்தேன் , பின்னால் உன் அப்பாவும் தொடர்ந்து வந்தார். நள்ளிரவைத்தாண்டி மணிமுற்கள் நகர்ந்து கொண்டிருந்தது , முழு நிலவு அதன் பூரண ஒளியில் திகழ்ந்தது . கதவினுள் திறப்பு நுழைந்து திரும்பும் சத்தம், எங்கள் காலாணிச் சத்தங்கள், கண்ணாடிக் கோப்பைக்குள் கடும் சிவப்பு வைன் பாயும் சத்தம் , அனைத்தும் இசையாகத் தோன்றியது . காலணிகளைக்

மேலும்

ஓஷோ கஜன் - ஓஷோ கஜன் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
11-Apr-2018 8:56 am

வாலறிவன்

யாழ்ப்பாண நூலகம், அதன் வாசலில் கலைத்தேவி சரஸ்வதி, “ஆயகலைகள் அறுபத்திநான்கினையும் ஏய உணர்விக்கும் என் அன்னை” அனாதையாக வீற்றிருப்பாள்-காரணம், வண்ணங்கள் எதுவும் இல்லா வெறும் வெள்ளைநிறத்தில் தோய்ந்திருப்பாள்-ஒருவேளை அனைத்து வண்ணங்களையும் தன்னுள் அடக்கிய திமிரோ, ச்சா, இன்றைய கல்விமான்கள் போல் கற்ற திமிர் அவளுக்கில்லை. ஒரு மேகம் மட்டும் கீழிறங்கி, மின்குமிழின் அருகில் வீற்றிருந்தது போல் இருந்த அவளை, கடந்து சென்றது ஒரு கறுப்பு கார். அற்பமான வீதிவிளக்கு வெளிச்சங்கள் குடை சூழ, இருள் ஆட்சி நடத்திய அந்த இரவில், அந்தக் கறுப்புக் கார், கிட்டத்தட்ட கண்களுக்குத்தெரியாத வண்ணம், இருளோடு இருளாய் இச

மேலும்

மிக்க நன்றி, உங்கள் கருத்து மிக்க மகிழ்ச்சியைத் தந்தது 08-May-2018 7:13 pm
நல்லாருக்கு.....; மனதை தொட்ட கதை...... எழுதிய உங்களுக்கும் அச்சிட்டு வெளியிட்ட உதயன் பத்திரிகை உள்ளங்களுக்கும் என் பணிவான நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். 07-May-2018 12:16 pm
ஓஷோ கஜன் - ஓஷோ கஜன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்

15-Apr-2018 8:44 am

சின்னஞ் சிறு சின்னஞ் சிறு சிறகே
சிதறி விழுவாய் மார் மீதே

வண்ண விரல்
இரண்டும் பட்டுக்
கன்னக்குழி சிவக்க
கண்ட விழி
கனவில் வந்து
வண்டைப்போல மிதக்க

ஓடும் நதியின் ஓசை
ஆழ்ந்த செவியில் வேறு
தலை வணங்கிய பின்னே
ஞாலம் மௌனம் ஆகும்

பாதம் எடுத்தடி
என் தலையில் வையடி
உன் பச்சை விரல் ரெண்டால்
என் மார்பைக் கீறடி

உன் பார்வை போதுமே
பழி பாவம் தீருமே
உன் மோகத்தீயிலே
ஒரு யாகம் மூலுமே
பாதி ஈரப் பாதத்தை
என் தலையில் வையடி

நான் மூழ்கும் கங்கையே
என் ஆனந்த மங்கையே !
நான் மூழ்கும் கங்கையே
என் ஆனந்த மங்கையே !

மேலும்

மிக்க நன்றி. 15-Apr-2018 10:05 pm
உங்களிடம் நல்ல திறமை உள்ளது. முறையாக பயிற்சியும் உழைப்பும் இருந்தால் அது வேறு உருவம் கொள்ளும் என நம்புகிறேன். தளத்தில் சிலர் கக்குவதே கவிதை என எழுதுவது போல் அல்ல நீங்கள். 15-Apr-2018 9:18 am

11-Apr-2018 10:04 am

மரங்களுக்குள்
நதி போல் பாய்ந்த காற்று
கூட்டில்
வேர்த்து
களைத்திருந்த ஒரு பறவையை
ஆறுதல் படுத்தி
சில மலர்களைக் கொய்துகொண்டு
வண்ணத்துப்பூச்சிகளோடு
ஓடிப்பிடித்து விளையாடி
கடந்துபோனது

மாலை
வேலை முடிந்து
வீட்டுக்குத் திரும்பி வரும்
என் தந்தை
என்னோடு விளையாடி
பின்
சிறிது நேரத்திலேயே களைத்து
சாய்மனையில் போய்
விழுந்து உறங்குவதைப் போல்

மேலும்

நன்றி 11-Apr-2018 6:03 pm
அன்பு என்ற பூக்கடையில் வாடிய பின்னும் பூக்கள் வாசம் வீசத்தான் செய்கிறது. காலங்கள் என்ற பாதையில் நிஜங்கள் என்ற பயணங்கள் மரணம் வரை நெஞ்சை விட்டு அகலாது. இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 11-Apr-2018 1:15 pm
ஓஷோ கஜன் அளித்த படைப்பில் (public) Mohamed Sarfan மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்
11-Apr-2018 10:06 am

மரண விதையிலே
மறுபடி பிறப்பேன்
உன் மடியில் தவழ்வேன்
தாமரை இலையிலே
நீர்த்துளி போலவே
உனை சுற்றி விளையாடுவேன்

ஐவர் கொண்ட எம் குடும்பத்தின்
சூரியன் நீயே
உன் புன்னகை பார்த்து
சிலிர்க்கும் எம் தந்தையின்
வெள்ளித்தாடியே
எம் நிலவொளி

உன் பாதச்சுவடை
அச்சுவடித்து
ஒரு பூச்சாடி செய்வேன்
அதில் என் சாம்பலை
இட்டு வைத்து
விதைத்து
வளர்த்து வை
வருவேன்

சூரியன் உதிக்கையில்
பாலைவனத்தில்
நிழல்கள் கொந்தளிக்க இடம் ஏது
உன்னை வணங்கிய பின்
என் நெஞ்சில்
பகைவர் மறுதலிக்க இடம் ஏது
அவர்கள் கணைகள்
எனைத்துளைக்க முடியாது
வீரன் ஆனேன்
அம்மா

சூரியன் உதிக்கையில்
பாலைவனத்தில் போல்
ஒரு குழந்தையை

மேலும்

நன்றி, நல்ல நகைச்சுவையான கவிதை, பகிர்ந்தமைக்கு நன்றி 11-Apr-2018 6:01 pm
நன்றி 11-Apr-2018 6:00 pm
நெறிகள் நெஞ்சில் உள்ளவரை நாம் வாழும் வாழ்க்கையில் யாவும் நலமே! இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 11-Apr-2018 1:17 pm
நன்றாக இருக்கிறது...காளியம்மா காளியம்மா நாக்கை ஏன் நீட்டுகிறாய்.. நான் என்ன டாக்டரா..எனும் மணியின் கவிதை நினைவில் வருகிறது 11-Apr-2018 10:53 am
தமிழ் பித்தன் அளித்த படைப்பை (public) செநா மற்றும் 2 உறுப்பினர்கள் பகிர்ந்துள்ளனர்
29-Jan-2018 9:43 am

மூன்று முழம்
மல்லிகை கேட்போருக்கு
முக்கால் முழம்
புன்னகையும் சேர்த்து கட்டுகிறாள்
பூக்கடையில் ஓர் இளவரசி.

வேடமில்லா புன்னகைக்கு
விலை தர இயலாமல்
கடன் சொல்லி போகின்றனர்
வாடிக்கையாளர் யாவரும்.

பூக்கள் வாங்கினால்
புன்னகை இலவசமோ?

புருவம் சுருக்கி
இல்லையென்று தலையசைத்து
ஏதோ நினைத்தவளாய்
மீண்டும் சிரிக்கின்றாள்.

பையில் காசின்றி
உதடுகளில் குறுநகையுடன்
அவளை கடந்து போகின்றேன்.

மேலும்

நன்றி தோழர். 29-Jan-2018 9:49 pm
அருமை நட்பே.... 29-Jan-2018 9:42 pm
உண்மையான வரிகள் தோழர். 29-Jan-2018 8:34 pm
நன்றி தோழர். 29-Jan-2018 8:34 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (31)

தமிழ்குறிஞ்சி

தமிழ்குறிஞ்சி

யாழ்ப்பாணம்
user photo

வெங்கடேசன்

செஞ்சி
இதயம் விஜய்

இதயம் விஜய்

ஆம்பலாப்பட்டு

இவர் பின்தொடர்பவர்கள் (33)

இவரை பின்தொடர்பவர்கள் (31)

மேலே