aralirajesh - சுயவிவரம்
(Profile)
எழுத்தாளர்
இயற்பெயர் | : aralirajesh |
இடம் | : அரளிக்கோட்டை,சிவகங்கை மா |
பிறந்த தேதி | : 21-May-1986 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 16-Oct-2013 |
பார்த்தவர்கள் | : 96 |
புள்ளி | : 34 |
உயிரே...
என் தனிமையின் விநாடிகளை
உணதாக்கியது உன் பார்வை...
உன் பார்வையை கொடுத்துவிட்டாய்
என் விழிகளுக்கு...
சிறை பட்டதடி
என் விழிகள் உன்னில்...
உன்னருகில் நான் வரும்
நேரமெல்லாம்...
நீ ஊமையாக மட்டுமே
உன் பார்வைகள் மட்டும் பேசுதடி...
என் நெஞ்சில் தினம் பார்வையாலே
பச்சை குத்தி செல்கிறாயடி...
பொக்கிஷமாக
சேமிகிறேனடி நான்...
உன் பார்வைகளை
ஒவ்வொன்றையும்...
என் நித்திரையில் உன்னை பற்றி
வரும் கனவுகளையும் சேமிகிறேனடி...
உன் கண்களால் என் இதயத்தில்
நீ செதுக்கிய கல்வெட்டுதாண்டி...
என் அழகிய காதல்...
உன்னை தினமும் என்னருகில்
காண நினைத்தேன
இங்கேதான் ..
நாகரிகம் செழித்திருந்தது
வியக்கும் வண்ணம் !
கலைகளும்
வளங்களும்..
ஆசைகளும் ..
அழிவுகளும்..
ஆக்கிரமிப்புகளும் ..
கூட..
எல்லாமே
இங்கேதான் பெருகியிருந்தன
எப்போதும்..
நான்தான்..
இன்னும் இங்கு
இதுவரை
வாழவே இல்லை ..!
நீயும் ,
நானும்
முரண்பாடின்றி
முத்திரைப்பதித்த
இரண்டு முகவரிகள்
அன்று –திருமணம்
இன்று –விவாகரத்து ….
மண்ணில் தவழும்
என் மடி மீன் ,
விண்ணில் தெரியும்
நிலவு அது இனி வீண் ,
என் மார்பு முட்டும்
மலர் இது ,
சிறு விரல் கொண்டு
எனை மட்டும் விழுங்குது ,
நான் மட்டும் அறிவேன்
அதன் மொழி ,
எனை மட்டும் அறியும்
அதன் விழி
இப்படி
எத்தனையோ
மலட்டு கற்பனைகள்
எனைப் போல
என் கனவுகளுக்கும் ………
பாரதிக்கு கண்ணம்மா
எந்தன் கவிதைக்கு
உந்தன் கண்ணம்மா!
கடலில் மாலுமிகளுக்கு
வழிகாட்டும்
துருவ நட்சத்திரமாய்
எந்தன் வாழ்க்கைப் பயணத்தின்
வழிகாட்டி
உந்தன் கண்கள்!
இரண்டு எதிரெதிர்
மின்துகள்கள்
அதனைச் சுற்றியுள்ள
மின்புலத்தினால்
ஈர்க்கப் டுகின்றன!
அதைப் போல்
காதலெனும் புலத்தில்
கண்களால் ஈர்க்கப்படுகிறோம்
நாம்!
மின்விசைக் கோடுகள்
எப்பொழுதும்
நேர் மின்னூட்டத்தில் தொடங்கி
எதிர் மின்னூட்டத்தில்
முடிவடைகின்றன.
அதைப் போல்
காதலும்
ஆணிடம் தொடங்கி
பெண்ணிடம் முடிவுறுகிறது!
உனது பார்வைகள்
எனது கண்களின் வழியே
நுழையும் பொழுது
அழகான கோலத்தை
இடுகின்றன
எந்தன்
ஆழ்மனதின் அடியில்!