அருண் குமார் - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : அருண் குமார் |
இடம் | : ஈரோடு |
பிறந்த தேதி | : 07-Apr-1992 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 13-Oct-2014 |
பார்த்தவர்கள் | : 50 |
புள்ளி | : 10 |
தலைக்கு மேலே உள்ள வானமும்
காலுக்கு கீழே உள்ள பூமியும் காணாமல்
தவித்து போகிறேனடா...!
கண்சாடையில் காற்றாய் கரைந்து
சத்தமில்லா முத்தத்தில் காதலால் கட்டுண்டு
போகிறேனடா...!
நீ இன்பமா இல்லை
இம்சையா குழம்பி
தவிக்கிறேன் நானடா....!
விடை இல்லா புதிர் போடும் உன் விழிகள்
அதில் வினாக்குறி இடும் உன் புருவம்
வெப்பக்காற்றை வீசும் உன் நாசி
அதில் குளிர் காயும் உன் செவ்விதழ்கள்
பரிசுகளை புதைத்தன
உன் வெண்பற்கள் சிறிது தெரிவதால்
விழுந்த பள்ளத்தில் ....!
ஒளி வீசும் கதிரவனும் கலங்குமடி
ஓடி வரும் குளிர் காற்றும் புழுங்குமடி
ஒருமுறையாவது உன் பார்வை வீசி விடு
இல்லையெனில்
ஒரேயடியாக என்னை சிற்பமாக மாற்றிவிடு ...!
ஒளி வீசும் கதிரவனும் கலங்குமடி
ஓடி வரும் குளிர் காற்றும் புழுங்குமடி
ஒருமுறையாவது உன் பார்வை வீசி விடு
இல்லையெனில்
ஒரேயடியாக என்னை சிற்பமாக மாற்றிவிடு ...!
உன்னை நான் காதலியாக பார்க்க ஆசைபடவில்லை பெண்ணே
என் உறவுக்குள் ஒருத்தியாக சேர்க்க தான் பாடுபடுகிறேன் ..!
நித்திரையில் கூட
யுத்தம் செய்கிறாய்...!
கண் விழித்து காணும்
காட்சிகள் யாவும்
பொய்த்துப் போகின்றன.....!
கண்மூடி காணும்
காட்சிகள் யாவும்
சொர்க்கமாகின்றன..!
நித்திரையில் கூட
நீ அருகில் இருப்பதினால்....!
ஓடிச்சென்ற நொடி முள்ளும் ஏங்குதடி
தேடிச்சென்ற தேவதையை காணவில்லை என்று
தாக்கி சென்ற வேதனையும் நீங்குமடி
தேக்கி வைத்த உன் நினைவுகள் கொண்டு ...!
நினைத்ததை நொடியில் பெற்ற இன்பத்தை விட
நீ இல்லை என்ற ஏக்கம் அதிகமடி ..!