Arunkumar - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : Arunkumar |
இடம் | : Arcot |
பிறந்த தேதி | : 09-Jun-1996 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 31-Oct-2018 |
பார்த்தவர்கள் | : 80 |
புள்ளி | : 0 |
பாடல் பாடுவது பிடிக்கும்
தேனிலும் இனியவள்
தேகிடாத சுவையவள் .
முள்ளில்லா மலரவள்
முகம் காட்டும் நிலவவள் .
மெல்ல சிரிக்கையில்
சிதறிடும் முத்துக்கள்
விம்மி வெடிக்கையில்
மிரண்டிடும் கடல் அலைகள் .
கள்ளம் இல்லா வெள்ளை மனம்
கடவுள் கொடுத்த நல்ல குணம்
கவர்ந்திடுவாள் விழிகளால்
கவலை தீர்ப்பாள் கனி மொழியினால்
கோபம் போல நான் நடித்தால்
குழந்தையவள் தான் துடிப்பாள்
கொஞ்சி கொஞ்சி அருகில் வந்து
கன்னமதில் இதழ் பதிப்பாள்.
என் தேவதைக்கு இன்றோடு
வயது தான் ஈராறு
எம் வீட்டினில் இவளே தான்
மணம்வீசும் மலர் தேரு.
வாழ்த்துகின்றேன் மனதால் முத்தே
வாழ வேண்டும் பதினாறும் பெற்றே..!!!!!!
இக்காலத்தில் அன்பையும் காதலையும் தவறாக புரிந்து கொள்கிறார்களா??இளைய தலைமுறை???☺️
பரபாவ வருடம்
தை திங்கள் ஏழாம் நாள்
பிரமன் தீட்டினான்
உமா என்றொரு
உயிர் ஓவியத்தை ..!!!
புரிந்து பேசுவதில் தோழி
அறிவை புகுட்டும் ஆசான்
அன்பு கொள்வதில் அன்னை
கொஞ்சும் மொழி பேசி
நெஞ்சை குளிர வைக்கும்
குழந்தை குணமவளுக்கு..!!!
என் சகோதரியவளுக்கு
இன்று பிறந்த நாளாம்..!!!!
கவியெழுதி வாழ்த்திட
கம்பனை அழைத்தேன்
கம்பனோ
கற்பனையில் சிக்காத
கவிதையவள் என்றான்..!!!!
பூத்தூவி வாழ்த்திட
பூப் பறித்தேன்
பூக்களோ
புன்னகை பூ பூக்கும்
பூங்காவனமவள் என்றது..!!!
முத்துமாலை தொடுத்து வாழ்த்திட
முத்தெடுக்க போனேன்
முத்தோ
முழுமதி நிறத்தழகி
முத்து பல்லழகியவள் என்றது..!!!
தெம்மாங்கு பா
நீர்த்துப் போன நினைவுகள்
நீரோட்டமான வாழ்வு
நீந்த மறுக்கும் நினைவுகள்
இன்றும் ஓர் தினம்
நிறங்களைத் தொலைத்து விட்டு
நினைவுகளை ஏந்தியபடி...
நீ எங்கே சென்றாய்?
என் இதயத்துடிப்பு வேகமாகிக் கொண்டே செல்கிறது அந்த நாளை எண்ணும் போது.
நான் உனது பெயரையே உச்சரித்துக் கொண்டிருக்கிறேன்.
நீ அப்போது என்னை நேசித்தாயா?
இப்போதும் நீ என்னை நேசிக்கிறாயா?
நான் தினமும் உன் நினைவிலேயே வாழ்கிறேன்.
ஆனால் நீயோ வெகுதூரம் சென்றுவிட்டாய்.
எனக்கு தெரியாது,
நீ ஏன் என்னை இவ்வுலகில் விட்டுச் சென்றாயென்று.
நான் நம்பிக்கை கொண்டிருந்தேன், நீ என் இதயத்துடிப்பைப் போல என்றும் என்னுடன் இருப்பாயென்று.
எனக்கு தெரியாது, நீ என்னுடன் இருந்த வரை நான் உன்னை எவ்வளவு நேசித்தேன் என்று.
இந்த வலி மிகவும் ஆழமானது,
தினமும் வீட்டில் நீ இல்லாததை உணரும் போது,
உன்னுயிர் பிரிகையில் உ