சத்யா - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : சத்யா |
இடம் | : கோயம்புத்தூர் |
பிறந்த தேதி | : 11-Oct-1987 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 15-Apr-2015 |
பார்த்தவர்கள் | : 70 |
புள்ளி | : 0 |
விடுமுறை நாட்களில்
சேக்காளிகளுடனான
விளையாட்டுக்கிடையில்
வெய்ட்டீஸ் விட்டு....
விடாப்பிடியாக அம்மா
இன்னுமொரு வாயென ஊட்டியதை
கடவாயில் அடக்கி
ஜூட்டீஸ் என
மறுபடியும் தொடங்கி.....
இன்றும் நான் நலமாகவே இதை
டைப்பிக்கொண்டிருக்கிறேன்....
இல்லாள் கண்டிப்பாகக் கொடுத்த
ஊட்டச்சத்து பானத்தை
விழுங்கி முடித்த மகன்
மூச்சிரைக்கக் கொன்று
குவித்துக்கொண்டிருக்கிறான்
தொடுதிரையில்
மூக்குக்கண்ணாடியுடன்.
தெரிந்தும் தெரியாமல்
வாழ்கிறேன்.........
அடி கடி நீ என்னை
பார்த்து சிரிப்பதால் ......
அப்பா...
இரவினில் ஓடி மறையும் மின்மினி
பூச்சிகளை கைகளில் பிடித்து காட்டி...
இது அணையா
விளக்கு என்பார்...
தோளில் சுமந்து கொண்டு
உலகையும் காட்டுவார்...
தத்தி தவழும் வயதில் ஓடி
வர சொல்லி...
நடை பயிற்சி
கொடுப்பார்...
பள்ளிக்கு செல்லுமுன்னே கைபிடித்து
எழுத கற்று கொடுப்பார் உயிர் எழுத்தை...
விளையாடும் வயதில்
தானும் குழந்தையாக மாறி...
நமக்கு விளையாட்டும்
சொல்லி கொடுப்பார்...
பருவ வயதில் சொல் பேச்சு
கேளாதவன் என்று திட்டினாலும்...
தனிமையில் நினைத்து
வருத்தம் கொள்வார்...
நீ நீட்டிடும் உன்
கைகளுக்குள்...
நீல வானத்தையும் நிலவையும்
கொண்
"இந்த டிரஸ் நல்லாருக்கா"
ஆர்வமாய் நான்
"புடவை தான் அழகு உனக்கு"
சரியாக கூட பாராமல் நீ :-(
"புரியலைடா"
சம்மந்தமில்லாமல்
நீ அனுப்பிய குறுஞ்செய்திக்கு
பதிலாய் நான்
"சாரிடீ தவறுதலா அனுப்பிட்டேன்"
கூலாக நீ :-(
"யாருக்கிந்த கவிதை"
ஆசையாய்
உன் காதல் கவிதை
படித்தபடி நான்
"நானும் xxx
காதலிச்சிருந்தா
இப்படி தானிருக்கும்"
இயல்பாய் நீ :’(
"ஹாய்"
ஆர்வமாய் நான்
"கொஞ்சம் வேலை இருக்குடா"
ஆன்லைனில் இருந்தபடி நீ :-(
"என் கவிதை நல்லாருக்கா"
உனக்கான கவிதையோடு நான்
"ஓ சூப்பர்"
"எந்த வரிகள் ரொம்ப பிடிச்சிருக்கு"
"இன்னும் சரியா படிக்கலைடா"
உன் இயல்புகளில்
உனை
கடந்து கட
என்னவனே ....
என்னை முழுவதுமாய்
உணர்ந்த என் உணர்வுகள்
நீ மட்டுமே என எண்ணினேன் ...
முகமறியா உறவுகளை
எண்ணி என்னை ஏளனம்
செய்கிறாய் ....
உணர்ந்துக்கொண்டேன் முழுமையாய் ...
நீ என்னை என்றுமே
உணரபோவதில்லை என்று ...
என் கண்ணீர்த்துளிகள்
தினமும் என்னுடன்
உறவாடிக்கொண்டு தான்
இருக்கிறது ....
நீ தரும் காயங்களால்
உன் நினைவில் ....
பாவையே ....
நம் ஆயுளின் முடிவுநாள்
யாரும் அறிந்திருக்க
சாத்தியமில்லை ....
பேருந்துப்பயணம் அனைவருமே
பல்வேறு கனவுகளுடனே
பயணமாகிறோம்....
வாழ்க்கையிலும் பயணத்திலும்....
பேருந்து ஓட்டுனரிடம்
சில மங்கைகள் யதார்த்தமாகவே
பேசினாலும் கூட ஓட்டுனரின்
கவனம் சிதறுமே ....
கண்ணாடி சிதறல்கள்
போல உயிர்களும் ,உடல்களும்
சிதறிவிடும் ....
கதறி அழுதாலும் உயிரற்ற
உடல்கள் மீண்டும்
உயிர் பெறப்போவதில்லை...
சிறு கவனச்சிதறலில்
பயணமாகும் அனைத்து
உயிர்களுமே பலியாகிவிடும்
என்பதை மட்டும் மறவாதே ....
எதிரில் வரும் வாகனங்களுமே
பாதிக்கப்படும் என்பதயும்
மறந்துவிடாதே மங்கையே
"அத்தை பால் வந்துடுச்சா"வில்
ஆரம்பமாகிறது காலை ஓட்டம்
பால் காய்த்து
ரொம்ப தண்ணியாட்டம் இருந்தா இவருக்கு பிடிக்காது
சர்க்கரை அதிகமாயிட்டா அவங்களுக்கு பிடிக்காது
இப்படியாக
எல்லோருக்கும்
பிடிக்கற மாதிரியாக
காபி போட்டுத் தந்துவிட்டு
"அத்த கொஞ்சம் வெங்காயம் மட்டும் உறிச்சி தரிங்களா"
கொஞ்சம் கொஞ்சம் வேலைகளை
கொஞ்சி கொஞ்சி வாங்கி
காலை இட்டிலியும்
மதியம் ரசம் வரையும் முடித்து
"பாப்பூ நேரமாச்சு"
இரண்டாம் முறை உலுக்கிய பிறகு
லேசாய் சிணுங்கும் மகளை தூக்கி
"எப்பவும் நீங்க தான் என்ன ரெடி பண்ணணும்"
செல்ல மகளின் அன்பு கட்டளையால்
உம்மா தந்து பள்ளிக்கு அனுப்பும் வரையும்
கூடவே இருந்து
அற்புதமான வலைத்தளம் , ஏன் தமிழ் ஆர்வத்தை ஆதிக படுத்தியுள்ளது