pavithra pavi - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : pavithra pavi |
இடம் | : palayamkottai |
பிறந்த தேதி | : |
பாலினம் | : பெண் |
சேர்ந்த நாள் | : 29-Dec-2013 |
பார்த்தவர்கள் | : 73 |
புள்ளி | : 1 |
பழையனக் கழிந்தது புதியனப் பிறந்தது
இந்த புத்தாண்டில் தீய எண்ணங்களை ஒழித்து
புது மனிதனாய் உருவெடு
இனியாது நம் நாட்டில் ஒற்றுமை நிலவட்டும் !
சகோதரத்துவம் மலரட்டும்!........
மனிதநேயம் வளரட்டும் கருணை பெருகட்டும் !
கொலைக் கொள்ளை குறையட்டும் !
பாலியல் கொடுமை ஒழியட்டும் !
போதைப் பொருட்கள் அழியட்டும் !
லஞ்சம் வாங்குபவர்கள் ஒழியட்டும்!
இயற்கை அழிவுகள் குறையட்டும் !
வறுமை ஒழியட்டும்!!!வளமை பெருகட்டும் !!!
என் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் .....
பன்னீர் வாசனை தான்
எத்தனைப் பேருக்குத் தெரியும்
அது ஒரு ரோஜாவின் கண்ணீர் என்று !......
கவிதை எழுத விரும்பி,
கற்பனையில் ஆழ்ந்தேன்.
காகிதங்கள் பல கழிந்தும்,
கவிதை பிறக்க வில்லை.
கன்னி நினைவில்,
கைவிட எண்ணிய வேளையில்,
என்ன சிதறல் தென்றலாய் உன் வதனம்.
கண் சிமிட்டும் நேரத்தில் -என் உள்ளத்தில்
தோன்றிய கவிதைகள் ஓராயிரம்.
கருவில் உள்ள குழந்தையும் கவி பாடும்
உன் கண்கள் கண்டால்...
காளை நான் கவி ஆனதில் வியப்பில்லை,
கட்டுண்டு கிடந்த என் மனதை...
கவி பாட செய்தவளே
என்று இக்கவியின் காவியம் ஆக போகிறாய்???
ஒரு பறவை மரத்தின் கிளையில்
அமரும் போது அது எந்த
நேரத்திலும் முறிந்து விடும்
என்ற பயத்தில் அமர்வதில்லை ...
ஏனென்றால் பறவை நம்புவது
அந்த கிளையை அல்ல.........
அதன் "சிறகுகளையே" !!!!...........
மேள தாளத் தோடு வானில்
இருந்து வருகிறது -இடி
மின்னல் காற்று சுழன்று வீசி
மழையும் பொழியுது !!
ஏரி குளங்கள் நீர் நிரம்பி
இன்பம் ததும்புது -எங்கும்
இஞ்சி மஞ்சள் நெல்லும் கரும்பும்
கொஞ்சி ஆடுது ...