saranyasaara - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : saranyasaara |
இடம் | : coimbatore |
பிறந்த தேதி | : 17-Nov-1990 |
பாலினம் | : பெண் |
சேர்ந்த நாள் | : 27-Nov-2013 |
பார்த்தவர்கள் | : 49 |
புள்ளி | : 7 |
வணக்கம் தோழர்களே...
இனி சில விருதுகள்...
இவை 2013ஆம் ஆண்டின் பிற்பகுதியில் பதிவுகளை அளித்த தோழர்களுக்கானது...
அன்பானவர்களே , வந்துப் போகும் பருவ காலம்
போல தளத்தில் அவ்வப்போது தோழர் குழாம் உருவாகும் ..உவகை உலா வரும்...சினேகித தென்றல் வீசும்...கருத்து மோதல் பிறக்கும்..மறையும் அன்றியும் முகங்காணாத முகவரி அறியாத ..வாழ் எல்லை தெரியா...ஒரு உறவு வலை பரவி அன்பினால் நீட்சிகளாகி ஆக்டோபஸ் பின்னலாகும்...இதற்கு அவ்வப்போது எவரேனும் சந்து செய்வித்து சந்தோஷ திசை காட்டுவர்...அவ்வகையில் இருவருக்கு 2014ஆம் ஆண்டின் முதல் விருதாக "நட்புணர்வு பரப்பு நற் படைப்பாளிகள்-2013 " எனும் விருது பெறுகின்றனர்.....
இவள்
அழகான ஆடை
உடுத்தி இருந்தாலும்...
எப்பொழுதும்
அழுத்தமான
மனநிலையில் தான் வாழ்கிறாள் ....
பெண்ணுக்குச்
சமஉரிமை என்று
இந்தச் சமுதாயம்
சத்தமாக சொல்லிக்கொண்டு
இருந்தாலும் ...
மனச் சுத்தமாக
யோசித்தால்..
எதில்
என்பது கேள்விகுறி ..?
இதோ..!
அவளின் சமஉரிமைகள் ...
கஷ்டத்தில் சமஉரிமை ...
வேதனையில் சமஉரிமை ...
பிரச்சினையில் சமஉரிமை..
கடன் கட்டுவதில் கூட சமஉரிமை...
இப்பொழுதெல்லாம்
பெண்கள்
நாணத்தோடு நடப்பதில்லை
என்கிறார்கள் நல்லறிவு
படைத்தவர்கள் ....
ஆம் ..!
நாணயம் சம்பாதிக்க
அனுப்பும் நல்ல குடும்பங்களே ...
உடல் உழைப்பில்
நலிந்து போன பெண்ணிடம்
நாணம் எப்படி
தயவுசெய்து என்மீது என் பெயரையாவது
எழுதி வையுங்கள்....!
அறியாத சிலர் தொட்டில் என நினைத்து
தங்கள் குழந்தைகளை போட்டு செல்கிறார்கள்...!
-இப்படிக்கு,
குப்பைத்தொட்டி.
தயவுசெய்து என்மீது என் பெயரையாவது
எழுதி வையுங்கள்....!
அறியாத சிலர் தொட்டில் என நினைத்து
தங்கள் குழந்தைகளை போட்டு செல்கிறார்கள்...!
-இப்படிக்கு,
குப்பைத்தொட்டி.
என்
மனதிற்கு
சிறகுகள்
முளைக்கவேண்டும் ...
ஏன் தெரியுமா.?
மனம்...
அது ஒரு
மாட்டிகொண்ட
பறவையாக...
என்
அலுவலகம் மட்டும்
சுற்றி திரிகிறது ....
சமூக
பிரச்னை பற்றி
சற்றும் சிந்திக்க கூட
சங்கடம் கொள்கிறது ....
பக்கத்துக்கு
வீட்டி மனிதர்களிடம்
பழக்கம் கொள்ள
நேரம் இல்லை
நொந்து கொள்கிறது ....
சரி ...
இரவு நேரங்களிலாவது
இயற்கை ரசித்து
இன்பம் பெறலாம் என்று
நினைக்கும் போது...
அடுத்த நாள் ,
அலுவலக சிந்தனை
மனதை மழுங்க செய்கிறது ....
இப்படி,
சுருங்கி போன
என் மனதிற்கு
ஒரு
சிறகு
எப்போது முளைக்கும் ...!
இது
எல்லாருக்கும்
ஏற்படும் எதார்த்தம் என்று..
வாழ்த்து அட்டை பரிமாறி கொள்ளும் அறிவும் இல்லை......!
கவிதை எழுதவும் வயது இல்லை......!
காகா கடி கடித்து வைத்து கொண்ட ஒரு கடி முட்டாயில்
ஒளிந்து இருந்தது எங்கள் காதல்.....!
-என் சிறுவயது காதல்.