எழுத்து எண்ணம்

(Eluthu Ennam)

புதிய எண்ணம்


எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

புதுச்சேரிக்கும் தமிழ் கவிதை உலகிற்கும் பெருமை பெற்றுத்தந்த புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் அவர்களின் மகனார் தமிழ்மாமணி மன்னர் மன்னன் தனது 92வது வயதில் இயற்கை எய்தினார் என்பதை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன. தமிழ்மாமணி மன்னர் மன்னன் புதுச்சேரி ஆகில இந்திய வானோலியில் ஆசிரியராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். 50 க்கு மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார். பலமுறை புதுவைத் தமிழச் சங்கத்தின் தலைவராக இருந்துள்ளார்.

மேலும்

தமிழர்களில் பெரும்பாலோர் தங்கள் பிள்ளைகளுக்குத் தமிழ்ப் பெயர்களைச் சூட்ட விரும்பாமல் இந்தி அல்லது சமஸ்கிருதப் பெயர்களையே சூட்டுகிறார்கள். இந்தி மற்றும் சமஸ்கிருதப் பெயர்களில் குறைந்த பட்சம் 50% பெயர்கள் பெயர்ச் சொற்களாக இல்லை. பெயரடைகளைப் (Adjectives) பெயர்ச் சொற்களாகப் பயன்படுத்துகிறார்கள். 

      தங்கள் குழந்தைக்கு வைக்கும் பெயரின் பொருள் தெரியாமலும் அதைச் சரியாக உச்சரிக்கத் தெரியாமலும் பிறமொழிப் பெயரைச் சூட்டுகிறார்கள். 

     ஒரு கடையின் பெயர்ப் பலகையில் நான்     பார்த்த பெயர் Bavithra Textiles. Pavithra என்று எழுதவேண்டியதை Bavithra என்று எழுதியிருக்கிறார்கள். நிச்சயமாக அந்தப் பெயரை அவர்கள் சரியாக உச்சரிக்க வாய்ப்பில்லை. அப்பெயரின் பொருளும் தெரிந்திருக்காது.

     சில பெற்றோர்         இந்திப் பெயரென எண்ணி எம்மொழியிலும் இல்லாத பெயரை அவர்கள் குழந்தக்குச் சூட்டுகிறார்கள்.

   எனது இளம் நண்பர்கள் இருவரைத் தனித் தனியாகச் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. அவர்கள் இருவரும்  தங்கள் மனைவியர்     பெண் குழந்தையைப் பெற்றிருப்பதாகக் கூறினர். வாழ்த்து தெரிவித்துவிட்டு குழந்தையின் பெயர் பற்றிக் கேட்டேன். ஒருவர் "அய்யா, எங்க பாப்பாவு பேரு 'பூவிஷா' என்றார். அவரை திருப்திபடுத்த "நல்ல பெயர். வாழ்த்துக்கள்!" என்றேன். இன்னொரு நண்பரின் குழந்தையின் பெயர் "கிருத்தியா".

     நான் முடிந்தவரை வலைத் தளத்தில் தேடிப்பார்த்தேன். எந்த மொழியிலும் இல்லாத பெயர்கள் அப்பெயர்கள்.

அழகான தமிழ்ப் பெயர்கள் இருந்தாலும் தமிழர்கள் ஏன் பிறமொழிப் பெயர் மோகத்தில் திளைக்கிறார்கள் என்று தெரியவில்லை. ஒரு பள்ளி அப்பள்ளியின் சாதனை படைத்த மாணவ, மாணவியர் படங்களுடன் பெயர்களையும் விளம்பரம் செய்திருந்தது. அந்த விளம்பரத்தில் நான் கண்ட ஒரு நல்ல தமிழ்ப் பெயர் 'உரைநடை'.

      சமீபத்தில் இயற்கை எய்திய பேராசிரியர் லெனின் தங்கப்பா அவர்கள் இரண்டு முறை சாகித்திய அகாதமி விருது பெற்றவர். அவரது  பிள்ளைகளின் பெயர்கள்: மின்னல், இளம்பிறை, கதிரொளி. தமிழாசிரியர்கள், தமிழ்ப் பேராசிரியர்களில்கூட 80% ற்கு மேற்பட்டவர்கள் இந்தி அல்லது சமஸ்கிருதப் பெயர்களைத்தான் அவர்கள் பிள்ளைகளுக்குச் சூட்டியுள்ளார்கள். 

    இந்த பிறமொழிப் பெயர் மோகத்திற்கு திரை ரசனை தான் காரணியாக இருக்கவேண்டும். பிள்ளைகளுக்குப் பெயர் வைப்பதில் மட்டும் கற்றவர்க்கும் கல்லாதவர்க்கும் இன்றில்லை வேறுபாடு.

மேலும்

   வணக்கம்      எங்க கொழந்தைக்கு        நல்ல பேராச் சொல்லுங்க சாமி.

😊😊😊😊😊
சீடா, சீடி குழந்தை எங்கே?
😊😊😊😊
இன்னும் மூ ணு மாசத்தில பொறந்திருங்க சாமி.
😊😊😊😊😊
ஓ.... பெயர் முன் பதிவுக்கு வந்தீங்களா? முன் பதிவுக் கட்டணம் பத்தாயிரத்தைச் செலுத்தீட்டீங்களா?
😊😊😊😊😊
இந்தாங்க சாமி கட்டண ரசீது.
😊😊😊😊😊
சரி நல்ல பேராச் சொல்லறேன். ஆண் குழந்தையா இருந்தாலும் பெ ண் கு ழ ந் தையா இருந்தாலும் நான் சொல்லற ராசியான பேரத்ததான் வைக்கணும்.
😊😊😊😊😊😊
சாமி நாங்க உங்க நீண்ட கால சீடன், சீடியாச்சே. நீங்க சொல்லறத உ யி ரே போ னா லும் தட்டமாட்டங்கமுங்க சாமி.
😊😊😊😊😊
சரி, இப்ப என்னைப் பாருங்கள். நான் என்ன செய்கிறேன்?
😊😊😊😊😊
உங்க விரலை நீட்டி எதையோ சுட்டிக் காட்டறீங்க.
😊😊😊😊😊
என் விரலில் தான் பொறக்கப் போற உங்க குழந்தையோட பேரு இருக்குது.
😊😊😊😊😊
விரல்ல பேருங்களா சாமி?
😊😊😊😊😊
ஆமாம் சீடா, சீடி. உங்க குழந்தைக்கு 'விரல்' னு பேரு வையுங்க.
😊😊😊😊😊
அய்யோ சாமி 'விரலா'.
😊😊😊😊😊
அருமையான இந்திப் பேரு. தமிழர்களின் தற்கால நாகரிகப்படி
இந்தி ப் பேரப் பி ள் ளை களு க் கு வைக் கற துதான் நாகரிகம்.
😊😊😊😊😊
கு ழ ந் தை பிற ந் ததுக்ககப் பற ம் மூன்று மா த ம் க ழி த்து ரண்டு பேரும் கு ழ ந் தை யை நம்ம ஆசிரமத்துக்குக் கொண்டு வாங்க. உங்க 'விரல்' குழந்தை பேருக்கு அர்த்தம் சொல்லறேன். இப்ப நீங்கள் போகலாம்.
😊😊😊😊😊😊
வர்றமுங்க சாமி.
■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■
சிரிக்க அல்ல. சிந்திக்க. 
◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆●●◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆
Viral = priceles, valuable, rare, precious.

மேலும்

ஏண்டப்பா கிட்டு  எங்கடா  போன?  ஒரு வாரமா உன்னக் காணோம்?

😊😊😊
பாட்டிம்மா நான் இப்ப  கிட்டு இல்ல. அங்கிட் என்னோட புதுப் பேரு.
😊😊😊😊
கிட்டு எப்பிடிடா அங்கிட்டாச்சு? 
😊😊😊😊😊
கிட்டு ஆகிய நான் அங்குட்டுப்போனேன்; அங்கிட்  ஆனேன்.
😊😊😊😊😊
எ ங்குட்டுப்போன? எதுக்குப் போன?
😊😊😊😊😊
நீ ட் டு எ ழு த நீ ண் ட தூ ர மா ராஜ ஸ் தா ன் ல எ ன க் கு த் தே ர் வு மை ய ம். தேர்வு எழுதிட்டு வடக்கே முதல் தடவையா போனதுக்கு அடையாளமா எம் பேர 'அங்கிட்' -டுன்னு மாத்திட்டேன் பாட்டிம்மா.
😊😊😊😊😊
ராசசுதானுக்கு போனியா? பாலைவத்தில ஒட்டக சவாரி போனியா?
😊😊😊😊😊
ஜெய்ப்பூரு போயே கறுப்பா இருந்த நான் க கறுகறுப்பா வந்து சேந்தேன். பாலைவனம் போயிருந்தா அங்கயே தீப்பத்தி எரிஞ்சு போயிருப்பேன். என்னோட எலும்புகள மட்டும் மூட்டை கட்டி அனுப்பிருப்பாங்க.
😊😊😊😊😊
இங்கயே  மத்த பசங்களப் பாத்துப்   ப ரிச்சை எழுதற நீ ராசசுதானுக்குப் போயி என்ன கிழிக்கப் போறன்னு உங்கப்பன் உன்ன அங்க அனுப்பி வச்சான்?
😊😊😊😊
பா ட் டி ம் மா  நா ன் ப ன் னி ர ண் டா ம் வ கு ப் பை யே  த் தா ண் ட ற தி ல் ல.  போ லி ம ரு த் து வ ரா கி உ ங் க ளு க் கு ர ண்்டு கை யி ல யு ம் மா ட் டு க் கு ப் போ ட ற பெ ரி ய ஊ சி ய ப் போ ட் ட த் தா ன் உ ங் க மே ல  இ ரு க் க ற எ ன் கோ ப ம் தீ ரு ம்.
😊😊😊😊😊
உ ன க் கு கொ ள் ளி க் க ட் ட யி ல சூ டு  வ ச் சா த் தா ண் டா நீ  தி ரு ந் து வ.
😊😊😊😊😊
?????
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
எழுத்தின் புதிய வடிவில்  படைப்பை எப்படி, எங்கே    
 சமர்ப்பிப்பதென் று தெரியவில் லை.
■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■
Ankit=signet,symbol,conquered

மேலும்

எழுத்து கவிஞர்கள் அனைவருக்கும் இனிய பொங்கல் மற்றும் தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துக்கள்  தி. பி. 2049.

மேலும்

நன்றி அய்யா !! இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் !! 15-Jan-2018 7:12 pm
மிக்க நன்றி தோழமையே. 14-Jan-2018 10:40 pm
நன்றி தோழமையே உங்களுக்கும் எங்கள் இனிய மனம் நிறைந்த புத்தாண்டு வாழ்த்துக்கள் cod bless you 14-Jan-2018 1:45 pm

நம் அண்டை மாநிலமான கேரள மக்கள் தீபாவளிப் பண்டிகையைக் கொண்டாடுவதில்லை. கேரளத்தில் வாழும் தமிழர்களில் பலர் மட்டுமே தீபாவளிப் பண்டிகையைக் கொண்டாடுகிறார்கள். தீபாவளிப் பண்டியை தமிழர்களுக்கு  அறிமுகப்படுத்தியது யார் என்பதை எண்ணம் 32888ல் பார்க்கவும்.

மேலும்

தேடல் பகுதியில் பண்டைத் தமிழகத்தில் தீபாவளி என்ற தலைப்பை அச்சிட்டால் அந்தக் கட்டுரை உங்கள் வசம் வரும் அய்யா. 24-Oct-2017 1:21 am
மிக்க நன்றி அய்யா. 24-Oct-2017 1:19 am
கணினி பயன்பாட்டில் சிரமம் என் கணினியில் எப்படி எண்ணம் 32888 காணலாம் ? படைப்பை என் மின்னஞ்சலுக்கு அனுப்ப வேண்டுகிறேன் நன்றி 23-Oct-2017 7:03 pm
படைப்புக்கு பாராட்டுக்கள் 23-Oct-2017 6:59 pm

மக்கள் வெற்றி, பெண், ரண்டு பேரும் இங்க வாங்க.

😊😊😊😊😊😊😊
உரிமைக்குப் போராடும் மக்கள் வெற்றி பெறலாம். நீயும்    ஒரு   பெண்தான் நானும்   ஒரு  பெண்.
இப்ப எதுக்கு மக்கள் வெற்றி, பெண் ரண்டு பேரும் இங்க வாங்கன்னு கூப்பிட்ட?
😊😊😊😊
உங்க பேத்திங்க பேருங்களத்தான் தமிழ்ல கூப்பிட்டேன்   பாட்டிம்மா. 
😊😊😊😊😊😊
மூத்தவ பேரு நிக்கி. எளையவ பேரு லிக்கி. நீயேன் மக்கள் வெற்றி, பெண்-ன்னு கூப்பிட்ட?
😊😊😊😊😊
பாட்டிம்மா தமிழர்களில பெரும்பாலோர் பிறமொழிப் பேருங்களத்தான்  அவுங்க பிள்ளைங்களுக்கு வைக்கறாங்க. வர்ஷா -ன்னு சில பிள்ளைங்களுக்குப் பேரு வைக்கறாங்க. 'வர்ஷா'-ன்னா 'மழை'-ன்னு அர்த்தம். அந்த அர்த்தம் தெரிஞ்சாகூட    வர்ஷா-ங்கற  பொண்ணுங்களப்    பெத்த   பெற்றோர்களே அவுங்க பொண்ணுங்கள 'மழை' -ன்னு    யாராவது கூப்பிட்டா மழைன்னா கூப்பிட்டவங்ககிட்ட சண்டைக்குப் போயிடுவாங்க. அது கைகலப்பாக்கூட மாறிடும்.  இத என்னன்னு சொல்லறதுங்க பாட்டிம்மா?  அதச் சுட்டிக்காட்டத்தான் என்னோட பொண்ணுங்கள 'வெற்றி மகள்', 'பெண்' -ன்னு கூப்பிட்டேன். 
😊😊😊😊😊
ஆமாண்டி நம்ம தமிழ் மக்கள்ல முக்காவாசிப் பேரு திரைப்பட ரசிகர்ளா இருக்கறாங்க. என்ன செஞ்சு தொலைக்கிறது நாமும் பத்தோடு பதிணொண்ணா வாழவேண்டி இருக்குது. கெட்ட காலம்டி
😊😊😊😊😊😊😊😊😊😊😊😊
(Nikki=Victory of the people)
(Likki=woman) (Finnish origin)

மேலும்

மிக்க நன்றி அய்யா. 27-Oct-2017 6:55 pm
பன் மொழிப் புலவர் பார்வையில் பாட்டி --பேத்திகள் புதுமைப் பெயர் சூட்டும் வைபவம் சிந்திக்க வைக்கின்றதே ! போற்றுதற்குரிய படைப்பு பாராட்டுக்கள் தொடரட்டும் உங்கள் எழுத்து இலக்கிய பயணம் தமிழ் அன்னை ஆசிகள் 24-Oct-2017 4:56 pm

சமநிலை

■■■■■■■■■■
21ஆம் நூற்றாண்டிலும் மூடநம்பிக்கைகளின்  வளர்ச்சி      தடைபடவில்லை. மூடநம்பிக்கைகளை தாங்கிப் பிடிக்கவும் அறிவியல் பயன்படுகிறது. எதையும் பகுத்தறியும் திறன் மனிதர்கள் அனைவருக்கும் இருந்தாலும் நம்மில் பலர் பகுத்து அறியும் திறனை சுயநலத்துக்கே பயன்படுத்துகிறார்கள். ஏமாறுவோர் இருக்கும் வரை ஏமாற்றிப் பிழைப்பவர்களின் எண்ணிக்கை குறையப்போவதில்லை.  

மேலும்

உண்மை ஐயா ,வாழ்த்துக்கள் 08-Aug-2017 12:43 pm

தமிழர்களின் நிலை 

■■■■■■■■■■■◆◆◆◆◆◆
கேரள மக்கள் முதலமைச்சர்களை திரையரங்குகளில் தேடுவதில்லை -
    ●●●●●●
        -- மலையாள நடிகர் மம்முட்டி
◆◆●●●●●●■■■■
     இந்தத் தகவலை யூட்யூப்பில் கூறியவர் சீமான்.

மேலும்

மிக்க நன்றி அய்யா. தமிழர் நாகரீகம் மற்றும் மொழியைச் சீரழிப்பதில் காணொலி ஊடகங்கள் பெரும் பங்கு வகிக்கின்றன. அரசியலைவிட்டு மதத்தையும் திரைத் துறையையும் ஒதுக்கி வைப்பது நாட்டு நலனுக்கு உகந்தது அய்யா. 23-Jul-2017 12:52 am
அரசியல் விழிப்பு உணர்வு கேரளா அரசியல் வரலாறு மலரும் நினைவுகள் 22-Jul-2017 10:21 pm

அஷிகா அக்ஷி
■■■■
 ◆◆◆◆◆
 ●●●●●

வாடி கண்ணம்மா. நல்ல இருக்கறயா?
◆◆◆◆◆◆◆◆■■◆◆●●
நாங்க எல்லாம் நல்ல இருக்கறோம் உங்க புண்ணியத்திலே. எம் பொண்ணுங்க ரண்டு பேரும் இவுங்கதான். 
◆◆◆◆◆●◆
ஆமாம் இன்னைக்கு அவுங்களக் கூட்டிட்டு வரச்சொன்னேன் இல்லையா?
◆◆◆◆◆◆
ஆமாம் பாட்டிம்மா. மூத்தவ அஷிகா (Ashika)* சின்னவ அக்ஷி (Akshi)#
◆◆●◆●●
என்ன பேருங்கடி இது. அக்குசி, அசிக்கா.
●●●●●●
இந்த ரண்டு பேரும் இந்திப் பேருங்க பாட்டிம்மா. நாம தமிழர்கள். இந்திப் பேருங்கள வைக்கிறதுதானே தற்கால தமிழரின் நாகரீகம்.
◆◆◆●◆◆◆
நீ சொல்லறதும் சரிதாண்டி கண்ணம்மா.
◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆
●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●
* (Onewithoutsorrow)
# (existence)

மேலும்

மேலும்...

மேலே