Rozhan A.jiffry- கருத்துகள்

பரீட் சன்
நேற்று 01:21 AM மணிக்கு ·
கவிஞர் ரோஷான் ஏ.ஜிப்ரி
--------------------------------------------------
அறிமுகப்படுத்தவேண்டிய தேவையற்றவர் கவிஞர் ரோஷான்.
தேர்ந்த கவிஞர் அவர்.சமூக/தனிமனித வாழ்வியலில் எல்லா அம்சங்களையும் தத்ரூபமாக எழுத்தை தூண்டிலாய்ப் போட்டுப்பிடித்து கவிதைக்குள் உணர்வு மாறாமல் காட்சிப்படுத்துவதில் மிகக் கெட்டிக்காரர். சுருதி மாறாத நயத்துடனும் எழுதவும் இயன்றவர்.
திடீரென உச்சமறை படிமங்களுக்குள்ளும் கவிதையை முற்றாக மூடி விடுவார்.சமமாக எந்தத்திரையும் போடாமல் நிர்வாணமாகவும் திறந்திடுவார். ஒரு பன்முக எழுத்தாற்றல் கொண்ட முக்கியமான சம காலக்கவிஞர்களில் ஒருவர்
முக நூல் நட்புகள் அறிந்திடவே இக்குறிப்பு.
கவிஞரோ ஏற்கனவே பரந்த அளவில் அறியப்பட்டவர். அண்மையில கவிஞர் எழுதிய "காயச்சிறகுடன் அலையும் சிட்டுக்குருவி" கவிதை என்னை வெகுவாக பாதித்தது. மனித ஆக்ரோஷங்கள் மிருகத்தனத்தை தழுவுகின்ற பரப்பில், அதை மென்மைப்படுத்தி ஒரு குருவியின் பரிதாபத்துக்குரிய குரலாக்கி அரக்க மனங்களிலும் இரக்க நீரை சுரக்க வைத்துள்ளார் ரோஷான். இவரின் கவிதைகள் தேடிப்படிக்கத்தூண்டுபவை!

தேவை உணர்ந்து மழைத்துக் கொண்டிருந்த நமது வானத்தின் கீழ்தான் தேவை இல்லாமல்
இப்போதெல்லாம் காட்டாறுகள் கரை புரள்கின்றன ,சில நேரம்
பெருங் கோடையும் நிலவுகின்றது
நாம் வாங்கப் பழகியிருக்கிறோம்
கொடுக்கப் பழகவில்லை.
இயற்கை வாசிப்பதையாவது படித்து
யோசிப்பதில்லை.

மகளே புதுமைகள் புகுத்தி புலமையில் வெல்ல
நீர் தெரிவு செய்திருக்கும் களம் ஓர் பல்கலைக் கழகம். எழுத்து உன்னை எடுத்து வளர்த்து நீ விருதுகள் வாங்கும் வரைக்கும் உன்னை வினவும் .இனிதே தொடரட்டும். என் ஆசிகள்

எழுத்து.காம் என் இனிய தோழமைகளின் வெளிச்ச வீடு

இருபத்தி ஐந்து வருடங்களுக்கு மேல் என் எழுத்து நண்பர் ஐந்து வருடமாய் அவ்வப்போது சந்தித்து உறவாடும் உறவு. அவரிடமிருக்கும் எழிமை வேறொரு இலக்கிய செயல் பாட்டாளனிடம் இருக்குமா என்பது நான் அறிந்தவரை இல்லை.
இப்படி எழிமையே வாழ்வாகி போனபோதும் கலங்காது எழுத்தை கை விடாது களம் கண்டவர்தான் தோழர் நட்ராஜ்.
எத்தனை வலிமையான வலிகளை எல்லாம் கவிதைக்குள் கொண்டு வந்திருக்கிறார்.அவரது ஒவ்வொரு கவிதைகளையும் ஆழமாக ஆராயும்போது வாசிப்போரால் வரிகளில் விரவிக்கிடக்கும் வலிகள் உணரலாம் .மரபையும்,புதுமையையும் மிக சிறப்பாக கையாளும் திறன் இலக்கிய செயல் பாட்டாளர்கள் எல்லோருக்கும் வாய்த்து விடுவதில்லை.அது தோழர் நட்ராஜுக்கு வரமாய் கிடைத்திருப்பதும் அதனூடே நல்ல கவிதை படைப்புகளை வாசிக்க கிடைப்பதும் நாம் பெற்ற பாக்கியம்.கசல் தர கவிதைகள் முதல் தரம் .பெருகும் அன்புடன் வாழ்த்துக்கள் பகிர்கிறேன்.

மேலும் எழுத்தில் சில மாதம் இணையாமல் போனதால் நல்ல சந்தர்ப்பங்களை இளந்திருக்கிறேன் என்பதை எண்ணி வருந்துகிறேன்.ஆயினும் என் முன் வாசல் உறவுகள் அனைவரையும் நினைவு கூர்ந்து விடை பெறுகிறேன்.

அருமையான படைப்பு..இறுதிச் சுற்றிலும் வெற்றிபெற வாழ்த்துக்கள் நடா

ஊக்கப் படுத்தினால் ஊக்கு விற்பவனும் தேக்கு விற்பவன் ஆவானாம் வாலி சொன்ன வரிகள் நன்றி நாடா .

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோதரர் ஜின்னாஹ்.

இலட்சியங்களால்
எட்ட முடியாததை
இலட்சங்களால் எட்டவைக்கும்
'ஆசனங்களாக்கி கர்வப்பட்டுக்கொள்ளும்
நாட்காலிகளிலேயே
தீர்மானிக்கப்படுகின்றது
வாழ்க்கைக்கான இருப்பு.'நேர்த்தியான படைப்பு நடராஜ்.

பரிசு பெற்றமைக்கு வாழ்த்துக்கள் தோழரே!

நல்ல உணர்ச்சிமிகு கவிதை வாழ்த்துக்கள்..!

உறவுப் பாலம் உடையாமல் கடந்தால் காலம் கைகுலுக்கி தோள் தொட வைக்கும்.இன்ஷா அல்லாஹ் இறைவன் நாடினால் நடக்கும்.

கவனிப்புக்கும் கருத்துக்கும் ,நன்றிகள்

இடைவெளி ஒன்றின் பின் அகன் தோழரின் இனிப்பான கருத்துடன் கவி புனைய நேரம் கிடைத்ததையிட்டு நெகிழ்கிறேன் அய்யா உங்களின் வேண்டலுக்க இணங்க கொஞ்சம் விரித்துள்ளேன்.நன்றிகள்

நிறைய வாசியுங்கள் ,நிதானமாய் யோசியுங்கள்,இயற்கையை நேசியுங்கள் பாடல் என்ன பாரே உங்கள் வரிகளுக்குள் வந்துஅமரும் வாழ்த்துக்கள்.


Rozhan A.jiffry கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.comபுதிதாக இணைந்தவர்

மேலே