SHABINAA- கருத்துகள்

உண்மையே..!
பொன் மொழியில்... நன்மொழி..!

நண்பரே..நான் பதித்ததும் விளக்கமே அன்றி வேறு இல்லை.! மோதல் எண்ணம் சிறிதும் இல்லை.

ஒரு சினிமா பிரபலம் இஸ்லாத்தை தழுவியது குறித்து பெரியளவில் தூக்கிப்பிடித்துக் கொண்டாடும் சில இஸ்லாமியர்கள் பற்றி என்ன சொல்ல வருகிறீர்கள் ?

இதை தூக்கி பிடித்து கொண்டாடும் இஸ்லாமியர்களின் அறிவு அந்த அளவுக்கு உலக செய்தியில் இருந்து தூர இருக்கிறது என்று அர்த்தம்..!

சினிமா என்பது பெரும்பாலும் இஸ்லாமிய மார்க்க விதிகளைத் தகர்த்து வீறு நடைப்போடும் ஒரு வர்த்தகம். அப்படி இருக்க ஒரு சினிமா பிரபலத்தின் மதம் விட்டு மதம் தாவும் செய்கையானது எந்த விதத்தில் இஸ்லாத்தை பெருமைப்படுத்தும் ?

சினிமா மட்டுமல்ல.. ஆபாச பத்திரிகைகள்..தொலைக்காட்சி தொடர்கள்.. மது, மாது, வட்டி, கற்பழிப்பு, கொலை, திருட்டு அனைத்தையும் இஸ்லாம் எதிர்கிறது. ஒரு பிரபலம் இஸ்லாத்தில் மட்டுமல்ல வேறு எந்த மதத்தில் இணைந்தாலும் மதத்துக்கு பெருமை இல்லை..! அதன் உயர்வை எண்ணி தன்னை இணைத்து கொண்ட நபருக்கே பெருமை..! அரசியல் கட்சி தாவினால் ஒருவேளை பெருமையும் பணமும் கிடைக்கலாம்..!

சினிமா என்பது ஒரு ஊடகம்தான். அதாவது சமூக சிந்தனைகளை தொடக்கத்தில் கூட்டம் போட்டு பேசினார்கள்..! பின்னர் அச்சடித்து துண்டு அறிக்கைகளில் பரப்பினார்கள்..! அப்புறம் ரேடியோ மூலம்.. திரை ஒளி மூலம்..சின்ன திரை மூலம்.. இப்போது இணையதளம்...! இதில் எந்த துறையில் ஆபாசம் அனாச்சாரங்கள் புகுத்தினாலும் இஸ்லாம் ஆதரிக்காது..!
சுருங்க சொல்லின் அன்று விடுதலை போராட்டத்தை திரைப்படம் மூலம் மக்களை திரட்ட பயன் படுத்தினார்கள். அன்று ஆதரித்த தலைவர்கள் இன்றைய திரை படத்தை பார்த்தால் அதுபோல் ஆதரிப்பார்களா..?

கேரளத்தில் ஒரு பிரபல எழுத்தாளர் மதம் மாறினார்..! அதுபோல் துபாய் தூதரகத்தில் பணி புரிந்த வடநாட்டு இந்திய அதிகாரி மதம் மாறினார். அப்போது ஒன்றும் மதத்தை முன்னிறுத்தி எவரும் வீண் வாக்குவாதம் செய்யவில்லை. ஆனால் இந்த தமிழ் இனம் மட்டுமே எங்கும் ஜாதி மதத்தை நுழைத்து தனக்கு தானே அழிவை தேடி கொள்கிறது. அது சிறு தளமாக இருந்தாலும் சரி.. பெரும் போர் களமாக இருந்தாலும் சரி..! அதன் சமீபத்திய உதாரணம்தான் ஈழ போர் தோல்வி..!

இஸ்லாம்.. இந்து.. கிருஸ்துவ.. புத்த... யூத.. நாத்திக கொள்கை இப்படி ஒரு மதத்தில் இருந்து இன்னொரு மதத்துக்கு ஒருவர் மாறுவதால் மதங்களுக்கு இழப்போ.. இழிவோ..பெருமையோ கிடைக்கிறது என்பதை ஏற்று கொள்ள முடியாது.

இன்னொரு விஷயம்... இஸ்லாத்தில் அதன் கொள்கைக்காக அதை ஏற்று கொள்வது மட்டுமே சிறப்பு..! இன்னொரு காரணத்துக்காக இந்த மார்க்கத்தை (பெண்,பொன்,மண்) ஏற்று கொள்வதால் அவருக்கு எந்த சிறப்பும் கிடைக்கபோவது இல்லை..!

இந்த கேள்வி வர காரணம் நீங்கள் ஒரு "தமிழச்சி" ஆனதால்..!! மதத்தையும் ஜாதியையும் வைத்து மோத விடுவது என்றால் அப்படி ஒரு மகிழ்ச்சி இந்த இனத்துக்கு மட்டும்..!

எனக்கு எதுக்குங்க கோபம் வருது. காரணம் இதெல்லாம் ஒரு கருதாகாவோ விளக்கமாகவோ எனக்கு தெரியவில்லை. நீங்கள் குண்டக்க மண்டக்குனு கேட்டதுக்கு ஒரு பதில் அவ்வளவுதான்.
மற்ற கருத்துக்களை படித்து தெளிவு பெற்று கொள்ளுங்கள்.-நன்றி.

பிரதான தொழில் அப்போது விவசாயம் மட்டுமே....அந்த விவவசயம் சிறப்பாக நடக்க காரணம் முக்கியமாக சூரியன்...ஆகவே அறுவடை முடிந்தபின் பொங்கல் வைத்து வணங்கினார்கள்...இந்த வணக்கம் கடவுள் என்பதையும் தாண்டி நன்றி (கலை சொன்னதை போல ) என்பதே நிதர்சனம்.

என்ன ஒரு பகுத்தறிவு!
அப்படி என்றால் சூரியன் எப்போதும் நன்றாக அடிக்கிறதே.. ஏன் மழையை நம்பி பயிரிட்டு, பருவ மழை பொய்த்தால் விவசாயம் செய்ய முடியாமல் தற்கொலை செய்கிறார்கள். அப்படி பார்த்தல் மழையைதானே பொங்கலிட்டு வணங்க வேண்டும்..? உழவுமுதல் அறுவடைவரை இப்போது மாடு போயி ட்ராக்டர் வந்து விட்டது. அப்படிஎன்றால் டிராக்டருக்கு அல்லவா நான் நன்றி செலுத்தவேண்டும்!

என் மூதாதையர்கள் செய்ததை, இடமும் தொழிலும் மாறியதற்காக நான் ஏன் செய்ய மறுக்க வேண்டும்...?-
முதாதையர்கள் செய்த எல்லாவற்றையும்விட்டு விட்டோம். நம்ம வசதிக்கு பேச்சுக்கு வலுசேர்க்க துணையா அவர்களை இழுக்க வேண்டாம்.

மேலை நாடுகளில் "தேங்க்ஸ் கிவிங்" என்ற ஒரு விழா கொண்டாடப்படும். - அப்படிஎன்றால் பொங்கலும் மேல்நாட்டு கலாச்சாரம்தான் என்பதுபோல் சொல்கிறீர்களே.

-நன்றி.

எனது பதிவு மத உணர்வையோ அல்லது மத மோதல் கருத்துக்களையோ உருவாக்குவதற்காக அல்ல. ஒரு நண்பர் ஏன் பொங்கல் பண்டிகையை இஸ்லாமிய கிருஸ்துவர்களும் ஓணம் பண்டிகையை போல் கொண்டாடுவதில்லை என்று கேட்ட கேள்விக்கு நான் ஒரு இசுலாமியர் என்ற கோணத்தில் அளித்த விளக்கம் மட்டுமே. எனது பதிவுக்கு கருத்து சொன்ன எழுத்து நேயர்கள்
உயர்திரு..
நாகூர்கவி,நிலாமகள்,மைமாம்தீன்,அன்புடன்சிரி,சரோ,லதீப்,குமரிபையன்,சங்குசுப்ரமனியன்,நாதமற,அஹமதுஅலி,தெய்வசிகாமணி, களியப்பன்எசக்கியேல், தாரகை அனைவருக்கும் எனது நன்றி.
இன்னும் கருத்திடும் அனைவருக்கும் நன்றி.!

உங்களின் அனைத்துக்கும் பதில் எனது பதிவிலும் மற்றவர்களின் கருத்திலும் உள்ளது.

கடைசியில் சொல்லி இருப்பதற்கு நான் சொல்ல வருவது என்னவென்றால் 'பொங்கல்' என்ற உணவையோ அல்லது வேறு எந்த உணவையோ இந்து நண்பர் வீட்டில் ஒரு இஸ்லாமியர் உண்ண கூடாது என்று நான் எங்கும் சொல்லவில்லையே. பகுத்தறிவுடன் சுருக்கி பதில் சொல்ல வேண்டு மென்றால் நான் மத உணர்வை பற்றி சொல்கிறேன் நீங்கள் மத உணவை சொல்லி பினாத்துகிறீர்கள். எனது பதிவுக்கு மற்றவர்களின் கருத்துக்கும் உங்களின் கருத்துக்கும் உள்ள வேறுபாடு ஒன்றே ஒன்றுதான். மற்றவர்கள் பகுத்தறிவோடு கருத்திட்டு இருக்கிறார்கள். நீங்கள் மத தீவிரவாதியாக கருத்து இட்டு இருக்கிறீகள்.
அனைத்தையும் நன்றாக படித்து பாருங்கள் புரியும். நன்றி.

தோழியே..காதல் இரவு கலக்கல்.

சகோதரர் மலர்1991 அவர்கள் நல்ல ஒரு விண்ணப்பத்தை முன் வைத்தார்கள். இது சம்பந்தமாக சில விஷயங்களை இங்கு நான் முன் வைக்க விரும்புகிறேன்.அவைகளை வைத்து தமிழுக்கோ தமிழர்களுக்கோ நான் எதிரி என நீங்கள் முடிவு கட்டிவிடக் கூடாது.

ஒரு கலாச்சார விழா நமது நாட்டில் தொடர்ந்து நடை பெற்று வருகிறது என்ற காரணத்திற்காக அதைச் செய்யும்படி எவரையும் வற்புறுத்த முடியாது. பொங்கல் விழாவை பொறுத்தமட்டில், தானியம் விழைந்த மகிழ்ச்சியைக் கொண்டாடுவதற்காக அவ்விழா கொண்டாடப்படுகிறது என்றுதான் பொதுவாக கூறப்படுகிறது.

அறுவடை செய்பவர்கள் தங்கள் தானியம் தமது வீட்டிற்கு வந்தடையும் வேளை மகிழ்ச்சியில் மூழ்குவது இயல்பே! இவர்கள் கொண்டாடினால் அதற்கு அர்த்தம் உண்டு. ஆனால் இதற்கு சம்பந்தம் இல்லாதவர்களால் இது கொண்டாடப்படுகிறது.

தானியத்தைப் பற்றி எதுவுமறியாத, விவசாயத்தைப் பற்றி எந்தக் கவலையுமற்ற சென்னைவாசிகள் ஆந்திர விவசாயிகளின் அரிசியை வாங்கி உண்ணுகின்றனர். உண்ணும் இவர்களைக் கொண்டாடுமாறு கேட்டு இவர்கள் கொண்டாடினால் அது இயல்பான கொண்டாட்டமாக இருக்காது.

இரண்டவது, எந்த நேரத்திலும் மனிதன் பகுத்தறிவை இழந்து விடக்கூடாது என்பது இஸ்லாத்தின் மிக முக்கிய விதிகளில் ஒன்று. எந்த நிலையிலும் மனிதனை விட மேம்பட்டதாக எப்பொருளையும் நினைக்கக் கூடாது. ஆடு, மாடு போன்ற மிருகங்களை விட எல்லா வகையிலும் மனிதன் உயர்ந்தவன் என்பது இஸ்லாத்தின் கொள்கை. இந்த அடிப்படை விதிகளுடன் பொங்கல் விழாவை நோக்கும்போது அதிக முரண்பாடுகளை அங்கே காண முடியும்.

மாடுதான் எல்லாவற்றையும் தந்தது என நம்மிக் கொண்டு அதற்கு நன்றி செலுத்துகிறோம் என்ற பெயரில் மாட்டுப் பொங்கல் என்ற ஒரு வழிபாட்டைச் செய்கிறார்கள். அப்படி ஒரு கலாச்சாரத்தில் நம்பிக்கை இல்லாவிட்டாலும் கூட உண்மை நிலை அதுதான். மாட்டைக் கூம்பிடுகிறார்கள். அதற்கு வழிபாடு செய்கிறார்கள்.

மனிதனுக்கு ஏற்ற வகையில் தானாக இயங்கும் சிந்தனை மாட்டுக்கு கிடையாது. அதை எதற்கு நாம் பயன்படுத்துகிறோமோ அதை அது செய்யும் உழுதல், குத்துதல், சண்டையிடுதல் போன்ற வேலைகளுக்கு பழக்கப்படுத்தி நாமே அதைப் பயன்படுத்துகிறோம். நாம் அதைப் பயன்படுத்தி விவசாயம் செய்திருக்க அதற்கு பூஜை வழிபாடு எதற்கு? இதைச் செய்ய முற்படுகின்ற போது கடவுள் வழிபாடு போன்ற ஒரு தோற்றம் உண்டாகி விடுகிறது.

தம் கரங்களால் செய்த ஒரு பொருளான பானைக்கும் பூஜை செய்கிறார்கள். அதற்கு சில கோலங்கள் இட்டதும் புனிதத் தன்மை வந்துவிட்டதாக மக்கள் நினக்கிறார்கள். மாட்டுக்கும் கோலம் போட்டு கடவுளாக ஆக்கியது போல் இதுவும் அமைந்து விடுகிறது. இப்போது இஸ்லாத்திற்கு நேர் எதிர் மாறான கொள்கை செயற்பாடுகள் வந்து நுழைந்து விட்டன.ஒரு காலத்தில் தானியங்கள் வீட்டுக்கு வந்து சேருகின்ற மகிழ்ச்சியை மட்டும் பிரதிபலிக்கின்ற விழாவாக இந்தப் பொங்கல் விழா இருந்திருக்கலாம். அந்த பழைய நிலமைக்கு இந்த பொங்கல் விழாவை நீங்கள் கொண்டு வாருங்கள் ஆட்சேபனை இன்றி எல்லோரும் கொண்டாடுவோம்.

கும்பிடக்கூடிய. பலதெய்வ வணக்கங்களை உண்டாக்கக்கூடிய விதத்தில் இந்த விழாக்கள் செல்லும்போது அதிலிருந்து ஒதுங்கி விடுமாறு இஸ்லாம் எம்மைப் பணிக்கிறது. நாம் தவிர்த்துக் கொள்ள காரணம் இதுவே தவிர காழ்ப்புணர்ச்சியல்ல...

தொப்புள் கொடி உறவுகளான அன்பு மாற்று மத சகோதரர்களே !நீங்கள் உணர்ந்து கொள்வீர்கள் என நம்புகிறோன் .... பொங்கல் வாழ்த்து சொன்னவர்கள் மட்டுமே உங்கள் நண்பர்கள் மற்றும் சகோதரர்கள் என்று இல்லை மாறாக சொல்லாத அனைத்து இஸ்லாமியர்களும் உங்கள் சகோதரர்களே !... இதனை உணர்த்தத்தான் இந்த பதிவு ...

அடுத்து தமிழ் புத்தாண்டு தினம் என்று சொல்லவும் முடியவில்லை..! காரணம் தமிழக அரசு 'சித்திரை'யா' என்றும் 'தை' என்றும் மாறி மாறி கொண்டாடுகிறது கவனத்தில் கொள்ளவும்.

-நன்றி.

மதத்துக்கு கடிவாளம் போடா சொல்லுகிற கவிதை.
நல்ல கருத்து நண்பா..!

கருத்து தந்த அனைவருக்கும் நன்றிகள்.


SHABINAA கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

மேலே