கவியமுதன்- கருத்துகள்

kelvikal urankumvarai pathilkal vilippathillai
தொடருங்கள்
...........kaviyamudhan

நல்ல சொல்லாடல்
வெற்றி பெற வாழ்த்துக்கள் கவிஞரே

சந்தக் கவிகள் சாவதில்லை.
அழகான படைப்பு.
தொடருங்கள்
.................கவியமுதன்

எதார்த்தம் மிளிர்கிறது
அருமை
...................கவியமுதன்

//இமயத்தின் வாசலிலே
இமைக்காமல் காத்து நிற்கும் என்
இந்திய தேசத்து இளைஞனே//
என்ற முதல் பத்தியிலேயே தடுமாறிவிட்டேன்.

தன்னுயிர் ஈந்து பிறர் உயிர் காக்கும் தேசப்பற்றாளர்கள்
அவர்களை நினைக்கக்கூட நம்மில் பலருக்கு நேரமில்லை.
அருமையான பதிவு.
கொஞ்சம் ஆழம் கொடுத்திருக்கலாம்.
தொடருங்கள்
வாழ்த்துக்கள்
...................................கவியமுதன்

ஆங்கிலக் கலப்பைத் தவிர்க்க முயலுங்கள்.
நான் அப்பாடலைக் கேட்டதில்லை.
எனினும் வரிகள் அழகு.
மெட்டோடு பாடியிருந்தால் இன்னும் சுவை தந்திருக்கலாம்.
திரைப்பாடல் எழுத நினைக்கும்
உங்கள் என்னத்திற்கு முதலில் என் வாழ்த்துக்கள்.

ஆனால் தற்போது திரைத்துறை உள்ள சுழலில் வாய்ப்புபெறுவது சற்று கடினம்தான்.
திறமைக்குமேல் பொறுமை உள்ளவர்களே திரையில் வாய்ப்பினைப் பெறுகிறார்கள்.

எனவே பாடல் மட்டும் அல்லாது கதை வசனம் என்று உங்களை விரித்துக்கொள்ளுங்கள்
இசையின் நுணுக்கங்களைக் கற்றுக்கொள்ள முயலுங்கள்.

முடிந்தால் யாப்பிலக்கணம் பயிலுங்கள் அது
மெட்டுக்குள் எழுதுவதற்கு உதவியாக இருக்கும்.
மீண்டும் உங்களுக்கு என் வாழ்த்துக்கள்.

.................கவியமுதன்.

நட்பை இவ்வளவு நேசிக்கும்
உங்களுக்கு நான் நன்பனென்பதில்
எனக்கு மிகுந்த மகிழ்ச்சி.
மனமார்ந்த வாழ்த்துக்கள்

...............கவியமுதன்

உங்கள் இரகசியம்
பாதுகாக்கப்படட்டும்.
எழுதாமல் மறைத்த
உங்கள் இரகசியக் கவிக்கு என் வாழ்த்துக்கள்.
.....................கவியமுதன்

சாட்டை உங்கள் வார்த்தை

காதல் என்னும் வார்த்தை
என்னைத் தெளிவாகக் குழப்புகிறது

அதை மாற்றியிருந்தால் இன்னும் அர்த்தம் கூடுமோ? என்னவோ ?
வாழ்த்துக்கள்
.....................கவியமுதன்

//பேத்தியின் முத்தம்
மோட்ச மழை //

சத்திய வரிகள்
மிக அழகு
தொடருங்கள்
.....................கவியமுதன்

மிக்க மகிழ்ச்சி தோழமையே திருத்திக்கொண்டமைக்கு

வெண்கூந்தல் அழகென்றும்
வெண்விழி அழகென்றும்
வர்ணிக்காத போது
ஏன் வெக்கப்பட வேண்டும் நான்
கருப்பாய் பிறந்ததற்கு .

கருப்பன் ஆட்சி புரியும் போது
கருப்பி அழகியாகும் போது
கருப்பால் மழை பொழியும் போது
கருப்பே மண்ணை ஆளும் போது
கருவாச்சி காவியமான போது
கயல்விழி கவியானால் என்ன ..?
நாளை கவி வரியேனும் பேசட்டும்
கருப்பை கண்டு கலங்கவில்லை
இவள் என்று ....!!!
உங்கள் மொழியில் சொன்னால் தூள்
திராவிட மண்ணின் தனி பெரும் நிறம் கறுப்பு.
ஒரு கருவாயன் என்பதில் எனக்கும் திராவிட உணர்வைத் தவிர குற்ற உணர்வு கொண்டதில்லை தேவையில்லை. வாழ்த்துகள்
கருப்பு _கறுப்பு இதை மட்டும் மாற்றிக் கொள்ளுங்கள்.
. . . . . . . . . . கவியமுதன்

பொறாமை திறமையைத் திருடும் தின்னும் கொடிய நோய்.
அற்புதம்.
உங்கள் கவிநடை எனக்கு மிகவும் பிடித்துள்ளது.
தொடருங்கள் .
. . . . . . . . . . கவியமுதன்

உங்கள் காதல்
உங்கள் கையில்.

தொடர நினைத்தாலும்
விட நினைத்தாலும்
முடிவில் உறுதியாக இருங்கள்.
வாழ்த்துக்கள்.
. . . . . . . . . . . கவியமுதன்

அற்புதம்
என் கவி ஆசான் பாவேந்தர்
அவர் கவியை எவ்வளவு பருகினாலும் மனப் பசி ஆரது மாறய் வளரும்.
மிக்க மகிழ்ச்சி அவரை எழுதியதில்
. . . . . . . கவியமுதன்

மிக்க மகிழ்ச்சி தோழமையே
நீங்கள் பரிசு பெற்றதில்
அதுவும் குறிப்பாக இக்கவிக்கு கிடைத்ததில்.
காரணம் நான் ஒரு முறைக்கு மேல் படித்த சில கவிகலுள் இதுவும் ஒன்று.
தொடரட் டும் உங்கள் பயணம் மனமார்ந்த வாழ்த்துக்கள்.
. . . . . . . . . கவியமுதன்.


மிக்க மகிழ்ச்சி தோழமையே !


கவியமுதன் கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

மேலே