kongu thumbi- கருத்துகள்

செல்வத்தைத் தேடி ஓடும் உலகில் அறிவை நாடி வருதல் அரிதுதான். படிக்கும் பழக்கம் இருப்பதை விட நடிக்கும் பழக்கம் நாட்டில் பெருகிப் போனது. உயர்ந்து வளர்ந்த மரம் எல்லோருக்கும் நிழல் தருவது போல்
ஒருவர் படிப்பே நூறு பேருக்கு பலன் தருகிறது ........ என்ன செய்வது???? இதனால் யாரை நோவது????????

நான் கூறும் நன்றிகள் கோடி

கருக்கல் இல்லாமல் பெய்த மழை போல் சருக்கல் இல்லாமல் கிறுக்கலுக்கு மார்க் அளித்த மனதிற்கு நன்றி

இயற்கை வேளாண்மை
இப்படியும் செய்தனரா?
நன்று.

குட்டிக் குழந்தை
கவிதை அழகு .

என்னமோ
நடத்துக ...
கவி நன்று .

ஆஹா ....
கவிதை
என்பதற்கும்
ஓர் கவிதை
அருமை நண்பா!.

ஓஹோ ...!
இப்படிப் பட்டவன்
கவிஞன் தானா ?.
நன்றாக உள்ளது .

பற்றுக நல் தமிழ் பற்றினை .
அழகு கவிதை.

வருகைக்கு நன்றி .
தங்களது கவிதைகளைப் படித்துப் பார்கிறேன் நட்பே.

நண்பரே !தற்போதெல்லாம் குப்பை என்றாலே அது பிளாஸ்டிக் கழிவுகள் தான்
மக்கும் குப்பையால் மண்ணுக்கு வளம் .
ஆனால் பிளாஸ்டிக் குப்பையால் பூமியே நாசம் .விழித்தெழுவோம் இப்போதாவது.

உலகின் மூத்த அருவி, புகழ் பூத்த அருவி, நயாகரா அருவியாகும். இயற்கையோடு மனிதன் இணைந்து வாழாமல்,,, செயற்கைப் பூவில் மகரந்தம் தேடும் மூடனாகத் திரிவதால், தானே தற்கொலை செய்து கொண்டதோ இந்த அருவி??? இவையெல்லாம் எதை உணர்த்துகிறது??? வருங்கால அழிவுக்கு வழி வகுக்கிறது.


உங்கள் வருணனை வளம் மிக்கது வாழ்த்துக்கள்.

நயாகரா என்னும் தாயின் உடலில் நரையும் கிழமும் சேர்ந்துள்ளது. உலகின் குளுமை ஒன்றாய் சேர்ந்து அடி முதல் நுனி வரை அணைக்கிறது. அதனால் தான் இந்த கிழவிக்கு 100 ஆண்டுகள் கடந்தும் முகவரி ஜொலிக்கிறது.

விழைய வேண்டும் நான் என்று-உன் விழியில் காக்கிறாய் எனை நன்று.
வான் புகழ் என்பது மனிதருக்கு உண்டு.
வாழும் போது யார் யாருக்குண்டு???
பிள்ளைத் தமிழ் என்னிடம் உண்டு.
முல்லைத் தமிழ் பலரிடம் உண்டு.
மூத்த தமிழ் உன்னிடம் உண்டு.
அதற்காகவும் அன்பிற்காகவும் அடிபணிந்தே சென்றிடுவேன்.

கொங்குதும்பி...
(பொங்கல் கவிதைப் போட்டி)

இனிப்பார் தமிழினம் ஒன்றுபடும்...!

மனித இனத்தில் தனி இனம் ,
மானத்தோடு வாழ்வது நம்மினம் ,
வீரம் விளையும் பழைய இனம்,
வீழ்ந்தாலும் விளையும் நம்மினம்,

நேர்மை குணத்தை நெஞ்சினில் தாங்கி,
நிறைய அடிகள் உடலில் வாங்கி,
நிறமும் குணமும் மாறாமல்,
நின்று போரிடும் வீர இனம்,

சூழ்ச்சி வலையில் பிடிக்கப்பட்டு,
சுந்தரத் தமிழினம் பிரிக்கப் பட்டு,
குருதியில் தள்ளி அடித்தாலும்,
கண்ணைப் பிடுங்கி எடுத்தாலும்,
குறுகிடாது நம் இனம்.

வேர்கள் ஒன்றாய் இருந்தாலும்,
கிளைகள் பலவாய் பிரிந்துள்ளோம் ,
பிரிந்து நாம் உள்ளவரை ,
பின்னால் நரிகள் குதறப் பார்க்கும்.

ஒன்றாய்க் கூடி வாழ்த்திடவே,
நம் ஒற்றுமை உலகம் கண்டிடவே,
புதுப்பானை பொங்கலிடு,
புறப்பட்டு தமிழா !முடிவை எடு...!





மனிதர்களின் முக விழிகள் திறக்கும் போது பாதை தெரிகிறது
மூளையின் விழிகள் விழிக்கும் போது மாற்றம் வருகிறது
கொள்கை கொடிகள் பிறக்கும் போது கூட்டம் வருகிறது
கொடியவர் கூடி ஆளும் போது கோபம் வருகிறது
தேர்தல் மூலம் மாற்றம் காண தேவை எழுகிறது
அஹிம்சை மண்ணில் ஆயுதத்தாலே ஆட்டம் நடக்கிறது
சாதியையும் மதமும் சகதியில் தள்ளி நம்மை பிரிக்கிறது
ஆளும் கோள்கள் யாரிடம் இருந்தாலும்
நேர்மையும் தூய்மையும் இருந்தால் மட்டுமே
இனி ஆளுவோர் நிலைக்க முடியும்
மக்களை அண்டி பிழைக்க முடியும்
தீபங்களை அனைத்து விடலாம்
தியாகங்களை அளிக்க முடியாது.


kongu thumbi கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

மேலே