MSசுசீந்திரன்- கருத்துகள்

பெரிய தளம்
பக்கத்தில் mohamad sarfan
அழகிய கவிதை
வேறென்ன வேண்டும் எனக்கு நண்பரே.

கொல்லும் வெயிலென்றும் கொட்டும் மழையென்றும்
காலம் பார்க்காமல் பணிநடக்கும்!
நெல்லை உணவாக்கி நிற்கும் விவசாயி
நிஜத்தில் பசியாற எதுகிடைக்கும்?
..........அட்டகாசம் கவிஞரே...........சந்தம் இழையோட அருமையான ........aakkapoorvamaana படைப்பு .....வாழ்த்துக்கள் தோழரே .....தன்ன தானன ...தான தன்னனா....

வாழ்த்துக்கள் . தொடரட்டும் உம் தமிழ் தொண்டு..........அன்புடன் சுசீந்திரன்.

வாழ்த்துக்கள்........கவிஞரே......உங்களோடு பயணிக்க நானும் ஆர்வமாக உள்ளேன் .............

இருவரி கவிதைகள் அனைத்தும் ஹைக்கூ என நம்பும் முட்டாள்களில் இவளும் ஒருத்தி...இன்றும் ஏதோ கிறுக்கி விட்டேன் பிழைகளை மன்னிக்க வேண்டுகின்றேன். !
இந்த முன்னுரை தேவை இல்லை கவிதாயினி........

ஹைக்கூ எழுதுகிறேன் என்று ஒரு சிலர் ஏதோ ஒன்றை எழுதிக் கொண்டும் தன எழுத்து ஆளுமை மீது தனக்குத் தானே விலங்குகள் மாட்டிக் கொண்டு விழி பிதுங்கி பலபேர் அவரேளுத்தின் வீரியத்தை இழந்து கிடக்க ....கவித்துவம் இழையோட கவி படைக்கும் உங்களுக்கு இந்த முன்னுரை நீங்கள் எழுதியதை என் மனம் ஒப்பவில்லை.......


உயிரிழந்த பட்டாம்பூச்சி
இலையுதிர்ந்த விருட்சம்
ஜன்னலில் பறக்கும் சீலை

அருமை.உதிரம் தோய்ந்த வானம்
கோப அலைகளோடு ஈழத்தில் மண்டைஓடுகள்(3)

புரட்சி சிந்துகிறது
எழுத்தாளனின் வற்றிய
பேனா(4)

மலட்டு மேகம்
கட்டறுத்து ஓடும் காட்டாறு
விவசாயியின் கண்ணீர்

முரணமைத்து முடிவுரை சொன்ன விதம் அருமை.


நிசப்த இரவில்
நிகழும் சுகப்பிரசவம்
அல்லி(7)

அருமை...அருமை...கவித்துவம் மின்னுகிறது......இலக்கணத்தில் சிறைப் படுத்த தேவை இல்லை.....அருமை.

சிவப்பு விளக்கு
சிக்கிக் கொள்கிறது விட்டில் பூச்சி
விபச்சார விடுதி

பாவம் யார் பெற்ற பிள்ளையோ.......அருமையான வெளிப்பாடு.

படைப்பில் யார் செய்த
தவறு
தலைகீழாய் வெளவால்

பிரமனின் தவறுகளில் இதுவும் ஒன்றோ .....கவிதாயினியின் பரிணாமப் படைப்பு பார்வை பளிச்சிடுகிறது.....

7 அசைகள் இல்லாத எல்லாமே நன்றாகத்தான் இருக்கிறது ......இப்படியே இருக்கட்டும்.......இதுவும் புதுமையே..... அருமை....வாழ்த்துக்கள்.....

தமிழ் இங்கிலீஷ் dictionary மட்டும் தான் டவுன்லோட் ஆகிறது

அச்சரம் பிறழாமல் முழு விதியோடு ஹைக்கூ - வின் விதி மாறாமல் அதே நேரம் படிப்பவரையும் ஒரு ஏகாந்த உலகத்துக்கு அழைத்துச் செல்லும் குறும் கவிதைகள் படைக்கும் படைப்பாளிகளில் அகனார் தனித்துதான் நிற்கிறார்.........அவரின் இலக்கிய விதி சேவை நிச்சயம் எம் போன்றோருக்குத் தேவை என்று நான் உணர்கிறேன்........ஆகவே நான் கவித்தா சபாபதி கருத்தை வழிமொழிகிறேன்.......Now the ball is at aganaar court .

கற்பு பொதுவாகியிருந்தால்
தேவையிருந்திருக்காது
கண்ணகி சிலை.!

அரசியல் நாக்குகள்!
தேர்தல் நேரத்தில் நக்குகிறது-
ஈழத்தின் கண்ணீரை.!


துகிலுரித்தேன்.
நிர்வாணமானது
சாளரம்.

--

ஆகா....அருமை ...ஹைக்கூ ....ஹைக்கூ .....கவிஞரின் பரந்த பார்வையை அழகாய் குறுங்கவியில் கொண்டு வந்துள்ளார்......அதுவும் அரசியல் நாய்களின் போலித்தனத்தை...பித்தலாட்டத்தை ...கன கச்சிதமாக தன் எழுத்தில் சாடி உள்ளார்........அரசியலோடு மட்டுமல்லாமல் அழகியலையும் கொண்டுவந்த -ஜன்னலின் நிர்வாணம் - கவிதை ....சூப்பர் .......ஆனால் கவிஞரே உங்கள் கடைசி கைக்கூ மட்டும் என் சிற்றறிவுக்கு எட்டவில்லை ...மன்னிக்கவும்...வாழ்த்துக்கள் தோழரே....

அக்காவின் அடிதொட்டு குறளடி அமைக்க
சொக்கன் துணையுண்டு உமக்கு .

புரமுதுகோடா.......புறமுதுகோட

மரபின் தாக்கம் மடிந்து புதுக்கவிதைகள் புயலெனச் சீறிவந்து வெற்றி பெற்ற காலங்களை பின்னுக்குத் தள்ளி மீண்டும் மரபுப் பாக்கள் போட்டிகளில் கலந்து புதுக்கவிதைகளை புரமுதுகோடா வைத்து கேடயங்களை பெற்று வரும் ஒரு வசந்த காலச் சூழ்நிலையில் நீங்கள் எடுத்திருக்கும் நன்முயற்சி மிக்க பாராட்டுக்குரிய ஒன்றாகும்.....அதுவும் வள்ளுவனை அடி தொட்டு வயக்காட்டை பாட வந்துள்ளீர்கள் உங்களிடம் நான் பட்டுக் கோட்டை கல்யாண சுந்தரத்தையும் வள்ளுவப் பெருந்தகையையும் காணுகிறேன்........சும்மா கிடந்த nilaththak கொத்தி சோம்பலில்லாமல் ஏர் நடத்தி கம்மா கரையை உசத்தி கட்டி கரும்பு கொல்லையில் வாய்க்கால் விட்டு சம்பா பயிர பறிச்சு நட்டு தகுந்த முறையில் தண்ணீர்விட்டு நெல்லு விளைசிருக்கு வரப்பும்ம் உள்ள மறைசிருக்கு அட காடு விளைஞ்சென்ன மச்சான் நமக்கு கையும் காலும்தான் மிச்சம் என்ற வயபாட்டை இதுவரை வந்த எந்த எழுத்துக்களும் இத்துனை செறிவாக சொன்னதாகத் தெரியவில்லை .......அப்படிப் பட்ட வயலையே நீங்கள் பாடு பொருளாக எடுத்து எல்லோரும் வழக்கமாக சொல்வது போலில்லாமல் வித்தியாசக் கோணத்தில் சொல்லிய பாங்கு மிகவும் வரவேர்புடையத்து ......வந்த காலனும் பாசக் கயிற்றை வீச மறந்து வயலில் வேலை செய்தான் .....என்று சொல்லியதிலும் ......ஏன் அந்த வள்ளுவர் கூட இப்படிச் சொன்னதில்லை.......நாறு வயல் நீரின்றி துர் நாற்ற வயலை மாறியதைப் பார்த்து மனம் கொநியவர்கள் அந்த வயல் மங்கையின் வனப்பைப் பாராதவர்கள் என்ற பாட்டிலும் ......வானச் சூரியன் வந்தாலும் மழை என்ற ஓன்று இல்லாது போயின் எங்கள் வாழ்க்கை இருட்டே ...என்ற குரலிலும் ....நீங்கள் புதிய கோணத்தில் பயணிப்பதை காண முடிகிறது .....படிக்க பரவசம் ஊட்டுகிறது ...தொடரட்டும் உங்கள் பணி.....

மரபுக்கவிதைகளை புராண காலத்தில் இலக்கியங்களை காணுகையில் கம்பனின் கவிதையை படிக்கும் போது நம்மை கட்டிப் போடும் மாய வித்தையை காணலாம்.அது கம்பருக்கு மட்டுமே உரித்தானது....நவீனத்தில் நமக்குத் தெரிந்து பலரும் மரபுக் கவிதை படித்தாலும் எத்துறையில் பாடினாலும் அதில் ஒரு கற்கண்டு சுவையேற்றும் ஒரு வசீகரத் தன்மை நமது தளத்தில் திருமதி .சியாமளா ராஜசேகரிடம் மட்டும் காணலாம் ...அவருடைய கவிதைகள் படிக்க அத்துணை பேரானந்தமாக இருக்கும் ......அவரை நீங்கள் ஒரு வழிகாட்டியாகக் கொண்டுள்ளீர்கள் எனும்போது நீங்கள் நலலதொரு ஆசானைத்தான் பார்த்துள்ளீர்கள் ......வெறும் எதுகையும் மோனையும் வைத்து அநேகம் பேர் இலக்கணச் சுத்தமாக மரபுப்பா எழுதினாலும் படிக்க நற் கருப்பஞ் சாறாய் இருப்பது அக்காவின் மரபுப் பாவில் மட்டும்தான் என்பதில் மாற்றுக் கருத்து இருக்க முடியாது.......அவருக்கடுத்து உங்களிடம் அதை காணுகிறேன் தொடருங்கள் மேலும் சிறக்க ........தங்களின் குறளில் வெண்டளையும் அடி தொடைகளையும்.....இயற்சீர் வெண்டளையும் வெண் சீர் வெண்டளையும் சரியாக பொருந்தி உள்ளதா குறளுக்கே உரித்தான இலக்கணங்கள் அமைந்துள்ளதா என்பதை ஷ்யாமளா ராஜசேகர் போன்ற மரபுப் பாவலர்கள்தான் -அது தெரிந்தவர்கள் தான் சொல்ல வேண்டும் ......மொத்தத்தில் உங்கள் வயக்கரை நவீன குறள் அருமை...அருமை...அடிக்கரும்பு.......வாழ்த்துக்கள்.......

கோடிக் கம்பன் குடியிருக்கும்
நூலகமாய் உன் விழிகள்
தேடித் தேடி தினம் படிக்கும்
வாசகனாய் என் விழிகள்...

முடிந்து கொள்ளடி கார்குழலை
பாவம் மயில்கள்
ஆடியாடிக் களைத்து விட்டது..

பல்லாங்குழி ஆடுகிறது காதல்
உன் கன்னக் குழியில் என்னைப் போட்டு...

சிதறி விழுகிறது என் பூமியில்
சில பல பிறை நிலவுகள்
நீ நகம் வெட்டும் வேளைகளில்...

சிறைப்பட்டுக் கிடக்கிறது கவிதைகள்
நீ பேசாத மௌனங்களில்...

கோழிக் கிண்டலில் கூட புதையல்
எனது கையெழுத்தில் அவள் பெயர்...

வெற்றுக் குடம்தான் உன் இடையில்
தளும்பவே செய்கிறது என் மனம்..

நீயோ கோவிலைச் சுற்றி படியிலமற்கிறாய்
கருவறை சிலையோ தவம் செய்கிறது
படிக் கற்களாய் பிறக்கும் வரம் கேட்டு...

*************************************

கழுத்தறுப்பட்ட சேவல்
கலப்பையில் சிக்கிய புழு
காதல் கொண்ட என் இதயம்
எத்தனை கூர்மையடி உன் நினைவுகளுக்கு...

தினமும் சாகிறேன் தினமும் உயிர்த்தெழுகிறேன்
அனுதினம் அறைகிறாய் நீயென்னை
உன் நினைவுச் சிலுவைகளில்...

வானம் பார்த்த பூமி நான்
வான் மழைதான் நீ
ஆயினும் உன்னையேச் சாரும்
என்னை தரிசாக்கிச் சென்ற பெருமை...

கஸல் பற்றி எனக்கொன்றும் தெரியாது
எண்ணிப் பார்க்கிறேன் உன் காதலை
கண்ணீர் வருகிறது.. கூடவே கஸலும்..........

கசலுக்கே உண்டான சோகம் கவிதையெங்கும் நிரம்பி வழிகிறது............ஒரு வித்தியாச சிந்தனை கொண்ட நற் கவிஞர் ஒருவரை நானிந்த படைப்பின் மூலம் காண்கிறேன்........ஆழ்மனதில் உறங்கிக் கிடந்த காதல் வலிகளை எல்லாம் இவ்வண்ணமும் எழுத முடியும் என்று கவிஞர் மிக்க ஆளுமை கொண்டு அனுபவித்து படைத்த விதத்தில் காண முடிகிறது.....

காதலின் வலிகளை கவிதையில் கண்டபோது எம் கண்களுக்குள்ளும் வடிந்து ஓடியது......கண்ணீர் ...அது ஆனந்தக் கண்ணீர்........சுருங்கச் சொல்லின் கசலுக்கே பெருமை சேர்த்த கவிதை இது....அதுவும் கடைசி வரிகள் கன கச்சிதம்.......கசலறியேன் ........உன் கண்ணுக்குள் நுழைந்த பிறகு கசலும் வருகிறது கண்ணீரோடு.........அருமை ....மணியான கவி தந்த மணி அமரனுக்கு வாழ்த்துக்கள்.......வாழ்க பல்லாண்டு......

துண்டாடப்பட்ட ஊரில்
பந்தாடிக்கொண்டிருக்கிறது ஜாதியும் மதமும்.
ஆற்றங்கரையில் என் துணியோடு
உன் துணியையும் சேர்த்தே துவைக்கிறான்
சலவைத் தொழிலாளி.
வெளுக்கவில்லை கறைபடிந்த சமுதாயம்...............................

விளக்கை அணைத்தும் பிரகாசமான
நமது முதலிரவில்
உறுதி செய்துகொண்டேன்.
நீல் ஆர்ம் ஸ்ட்ரோங் கால் வைத்தது
வேறொரு கிரகமாகத் தானிருக்க வேண்டும்.......

நான் நாணயமானவன் .
சொன்ன வாக்கு மீறாமல்
வட்டியுடன் திருப்பித் தந்துவிடுவேன்
உன் சேமிப்பிலிருந்து இப்போதைக்கு
கடனாய் தந்துவிடு சில முத்தங்கள்......................

அருமை ...அருமை .....மரபுக்கவிதை கப்பலோட்டியி டமிருந்து புதுக்கவிதை பூக்கள் என்னமாய் பூத்து வருகிறது..........புதுக் கண்ணிகள் அத்தனையும் புதுமைக் கண்ணிகள் ....... நீண்டதொரு பதிப்பாக இருந்தாலும் கொஞ்சம் கூட அலுக்காமல் ஜல் ஜல் என்று பயணிக்கிறது..புதுக் கவிதை புதுமையான சிந்தனையோடு .........மிகப் பெரும் பாராட்டுக்கள் கவிஞர் அய்யா ......பாராட்டும் அளவுக்கு நானொன்றும் கவிஞன் இல்லை என்றாலும் பாராட்டாமல் இருக்க முடியவில்லை ......-சுசீந்திரன்.

உண்மை....உண்மையிலும் உண்மை .......அருமையாகச் சொன்னீர்கள்.....

வனப்புகள் திமிறிக்குலுங்கும்
நீவொரு பூக்காடு...
நினைவுகள் பற்றி எரிகிறதே
ஏதினியெனக்குச் சாக்காடு... .......................................

தெரு ஓவியனொருவன்
மேகத்தை ஓவியமாய்
வரைந்திருந்தான்
மழை பெய்யத் துவங்கியது
மேகத்தை மேகம் அழித்தது
ஓர் இனத்தின் யுத்தம்
இதிலிருந்துதான்
துவங்கியிருக்கக்கூடும்... ...............................................

நீ நீராடிய நதிக்கரையில்
நான் கால்நனைக்க
உனைக் கொஞ்சித் தழுவிய மீன்கள்
எனையேன் குதறுகிறது...? ........................................

பூகம்பங்கள் மிகக்கொடியதுதான்
நீ வரும்போது என்னுள் எழும்
பூகம்பத்தை நான் எந்த ரிக்டரில் அளக்க........................................

அட்டகாசம் கவிஞரே...............கவிதைத்துளிகள் அனைத்தும் அருமை .......இனி நாங்கள் எந்த வார்த்தைகள் கொண்டு கவிதை எழுத.......வாய்ப்பே இல்லாத அளவுக்கு புதியதொரு காட்சிப் படங்களை கவிவரியில் காட்டி யுள்ளீர்கள்.........மிகவும் ரசிக்கும்படியும் ....காதலியென்ற ஒரு காரிகையோடு நடந்த அனுபவத்தையும் கொடுத்து விட்டீர்கள் .........அருமை....அருமை.....ஆனால் ஒரு சின்ன வருத்தம்........திரு ஜின்னா அவர்கள் கஜல் என்ற பொது தலைப்பில் ....அதாவது இசையோடு பாடும் வகையான கவித்துவக் கண்ணிகள் கொண்டு அமைக்கப் பட்ட ஒரு பாடல் வகை......அந்த வகையில் பார்க்கும்போது அங்கங்கங்கே இசைக்குள் அடங்காமல் கண்ணிகள் நகர்கிறதே .......ஆனாலும் அதையும் தாண்டி உங்கள் கவிதை எங்கள் மனங்களை அசைத்துவிட்டதால்........ஒரு படைப்பு படிப்பவரை எழுச்சி பெற வைத்து விட்டதால் ஜெயமே........கவிக்கண்ணி எழுதி எம்மை கட்டிப்போட்ட குமரேசக் கவிராயருக்கு (!!!!) சொர்ண காப்பே சிறப்பு.....நன்றி...

நான் முனையும், நடுவும் இல்லாத
இயற்கையின் பரப்பு - பரப்பின் இயற்கை
பல்பிரபஞ்சம் என் பெயர்!
சிறிதினும் சிறியதை பெரிதினும் பெரிதோடு
பொருத்தி வைத்திருக்கிறது எனது பிரமாண்ட இருட்டு
நான் சற்றே வாய் திறந்தால்
அது கருந்துளைவெளி [black hole] ........................................................

நானிப்போது திரு .புதுயுகனின் பரிசு பெற்ற கவிதையை படித்தேன்.........அவரின் கவிதை இப்படித்தான் ஆரம்பித்தது........அட்டகாசம்......... ......எழுத்துதளம் முதன்முதலாக நல்ல வீரிய சிந்தனைக்குப் பின் நல்லதொரு முடிவு எடுத்து உண்மையிலே நல்லதொரு வீரிய படைப்புக்கு பரிசு கொடுத்திருக்கிறது...........மிகவும் சந்தோசமாக இருக்கிறது.......தளம் மாறுகிறது...........சத்துக் கவிதைகளின் காட்டில் இனி ஜெயம்தான்......
புதுயுகன் உண்மையில் புரட்சியுகன்...வாழ்த்துக்கள்........

வாழ்த்துக்கள் தோழரே......3 லட்சம் பொற்காசுகள் பரிசு பெற்றதற்கு.......

நான் முனையும், நடுவும் இல்லாத
இயற்கையின் பரப்பு - பரப்பின் இயற்கை
பல்பிரபஞ்சம் என் பெயர்!
சிறிதினும் சிறியதை பெரிதினும் பெரிதோடு
பொருத்தி வைத்திருக்கிறது எனது பிரமாண்ட இருட்டு
நான் சற்றே வாய் திறந்தால்
அது கருந்துளைவெளி [black hole] ....................................அட்டகாசம் தோழரே...

பரிசுபெற்ற புதுயுகன் அவர்களுக்கு வாழ்த்துக்கள்........திரு சந்தோஷ்குமார் சொல்லியதுபோல் மாதந்திர தேர்வுபோட்டிகளை துறந்து இதுபோல் பண்ணினால் கவிதையெனும் தாய் ஆரோக்கியமாக இருப்பாள் என்று நானும் அவர் கருத்திற்கு வழி மொழிகிறேன்....கணினி மீது குற்றறம் சொல்ல முடியாதல்லவா.....வெறும் சதைக் கவிதைகள் சந்தைக்கு வந்து முகமன் பெற சத்தானக் கவிதைகள் சந்துக்குள் காணாமல் கிடக்கின்ற அவல நிலை இதன் மூலம் துறந்து போகும் வாய்ப்புள்ளதே என்பதே விருப்பம்....

பயனுள்ள பின்னோட்டம் தந்தமைக்கு மிக்க நன்றி தோழமையே........

இங்கே அறிஞர்கள் இருக்கிறார்கள் என்பதை நம்பவாவது செய்கிறீர்களே...!
....இந்தவரி மனதை ஏதோ வருத்துகிறது.............பரவாயில்லை........மிக்க நன்றி..........


MSசுசீந்திரன் கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.comமேலே