அருள் கூர்ந்து சொல்ல வேணும்.....

ஏர் கழுவி
மாடு குளிப்பாட்டி...
பொட்டு வச்சு...
பொங்கப்பானை வாங்கி....
மாவிலை தோரணம் கட்டி...
விளைச்சல் எல்லாம் வித்து...
புத்தாடை வாங்கி....
பொங்கலோ பொங்கல் என....
கூச்சலிட்ட விவசாயி.....
கனவுலயும் வருவதில்ல....
காரணமும் புரியவில்ல.....
இந்த்யாவின் பிரதமரே....
விவசாயி வேற வேலை
பார்க்கணுண்ணு யோசனையும் சொல்லியாச்சு....
அய்யா....மெத்தப் படிச்சவரே....
மேதாவி ஆனவரே....
இன்னொரு யோசனை மட்டும்
எல்லோருக்கும் சொல்ல வேணும்....
விவசாயி எல்லாம் .....
வேற வேலை பார்த்துக்கிட்டா ...
"சோத்துக்கு என்ன வழி"?
அய்யா நீங்க ..
அதை மட்டும்
அருள் கூர்ந்து சொல்ல வேணும்....