காத்திருப்பேன் நம் உண்மை காதலுக்காக

கண்ணே நீ கலங்கி விடாதே
உன் பெயர் என் மனத்தில்
எழுதப்படவில்லை
பச்சை குத்தப்பட்டுள்ளது
இன்னொரு பெண்ணிற்கு இந்த
மனத்தில் இடம் கொடுக்க மாட்டேன்
உன் நினைவுகளுடன்
வாழ எனக்கு வழி தெரியும்
எத்தனை ஜென்மம் எடுத்தாலும்
உனக்காக காத்திருப்பேன்
நாங்கள் மீண்டும் சேர வேண்டும்
உன்னையே நேசிக்க வேண்டும்
உனக்காகவே வாழ வேண்டும்
அப்படியும் சேராமல் போனால்
உன் நினைவுகளுடனே உயிர் விட வேண்டும்
அளவில்லாத காதலை மனத்தில் சுமந்து
காத்திருக்கிறேன் உனக்காக
காத்திருப்பேன் நம் உண்மை காதலுக்காக