கரையான் கூடு-கே-எஸ்-கலை

ஒரு நாயின் கைது
கூடவே சில
தெள்ளுப்பூச்சிகள் !
☆❀☆
காற்று
ஊஞ்சல் ஆட்டுகிறது
தாத்தா வீட்டில் !
☆❀☆
ஒரு மரம்
ஆவலாய் வந்தது குரங்கு
நிறைய இலவங்காய்கள் !
☆❀☆
நிறத் துவேசம்
அவர்கள் போனதும் சமாதானம்
சதுரங்கம் !
☆❀☆
சித்திரப் புத்தகம்
அழகாய் இருக்கிறது
கரையான் கூடு !

எழுதியவர் : கே.எஸ்.கலை (1-Feb-14, 9:35 am)
பார்வை : 291

மேலே