என்றும் அம்மா
ஓயாத தாலாட்டை கேட்டுவிட்டு
உன் மடியில் பின் இரவில்
இரவியவன் பழித்துநிற்க
பாலகனாய் எனை மறந்து
நீ தூங்கா நேரமென
நினைவெடுக்க முடியாமல்
நீண்ட துயிலிலும்
உனது முகம் தனை நினைத்து
ஓயாமல் அயா்ந்துவிட
சட்டென்று வந்த கனவும்
தாலாட்டை தள்ளிவிட்டு
துடித்தெழும்ப செய்துவிட
இல்லலை என்று சொல்லி
சமாதானம் செயதென்னை
தூங்க வைத்தபடி
நீ தூங்க நேரம் ஏதும் கிடைத்ததா?
............. என் தாயே............!!! அம்மா..!