கொடிகள்‘‘ சிறுவர் பாடல்

*
சமாதானம் என்றால்
என்ன கொடி? அது
வெள்ளை கொடி.
* [
அபாயம் என்றால்
என்ன கொடி? அது
சிவப்புக் கொடி.
*
எதிர்ப்பு என்றால்
என்ன கொடி? அது
கருப்புக் கொடி.
*
தொற்று நோய் என்றால்
என்ன கொடி? அது
மஞ்சள் கொடி.
*
புயல் எச்சரிக்கை என்றால்
என்ன கொடி? அது
எண்கள் இட்டக் கொடி.
*
கொடிகளின் நிறங்கள்
நமக்கு எச்சரிக்கையாகும் – அதன்
அர்த்தம் புரிந்து நடப்பதே
நமது கடமை யாகும்…!!
*

எழுதியவர் : ந.க.துறைவன் (4-Jun-14, 12:36 pm)
சேர்த்தது : துறைவன்
பார்வை : 123

மேலே