காதல் கோலங்கள்

சிறு புள்ளிகள் இணைந்து கோலங்கள் ஆனதே

சில கோடுகள், புள்ளிகளை, அழகாக சேர்த்து கோலமாக மாற்றியதே....!

இங்கு நான் ஒரு புள்ளி, நீ ஒரு புள்ளி, இணைவது எப்படியோ?

கண்விழிகளில் நீ சொல்லும் சேதிகள் கோடுகளாக மாறிடுமோ? என் விழிகளில்
நான் சொல்லும் பதில்கள் காதலை வளர்த்திடுமோ?

நான் எழுதிய கவிதை எந்தன் காதலை எடுத்து சொல்லிடுமோ?
உந்தன் பதிலும் சம்மதம் என்று இருந்திடுமோ?

சொல்லடி நீயே, இதயங்கள் இணைந்திட இங்கு தேவைகள் என்னவோ?
புள்ளிகளா? கோடுகளா? கோலங்களா? இல்லை காதல் உள்ளங்களா?

எழுதியவர் : நிர்மலா மூர்த்தி (நிம்மி) (4-Jun-14, 1:06 pm)
சேர்த்தது : nimminimmi
Tanglish : kaadhal kolangal
பார்வை : 66

மேலே