போலிகளின் பிடியில் இறைவனும் மனிதனும்

மஞ்சள் நீரிட்டு
மகுடம் சூட்டி
மவுசாய் வீதிகளில்
ஊர்வலம்....
இவர்களா துறவிகள்?
இனம் கண்டு வணங்கு!

வருகை விளம்பரங்கள் வீதிகளில்
கம்பங்களில் அருள் வாக்குகள்
போகின்ற போக்கில்
ஆசிர்வாதமாம்!
இவர்களா துறவிகள்?
அடையாளம் கண்டு மதி!

சந்தேகம் எட்டா
சாமர்த்திய மந்திரம்
மாயாஜாலம்
மயங்கும் மனிதம்!
இவர்களா துறவிகள்?
நம்பி வேகாதே!

காவிகளில் காம
காப்பியங்கள் நிதம் நிதம்
விதவிதமான பெயரில்
வலம் வரும் விபசார
காட்சிகளாய் நாளிதழ்களில்!
இவர்களா துறவிகள்?
இவர்களின் முகத்திரையை கிழித்திடு!

பளிங்கு மாளிகை
பழகி களிக்க
பாவ பக்தர்கள்....
இவர்களா துறவிகள்?
துரத்தி அடித்து கொல்லடா!

இறைவனின் பெயரில்
இவர்களின் அவதாரம்
இளம் பெண்களின் வாழ்வின்
சேதாரம்!
இவர்களா துறவிகள்?
இறைவன் ஒருவன்
அறிந்து அழித்திடு!

-மூ.முத்துச்செல்வி

எழுதியவர் : மூ.முத்துச்செல்வி (24-Sep-14, 12:18 pm)
சேர்த்தது : மூமுத்துச்செல்வி
பார்வை : 223

மேலே