முகமற்ற பொட்டு

வீடெங்கும்
தேடிய பின்னும்
அவள்
ஒட்டி விட்டுப் போன
அந்த ஒற்றைப்
பொட்டைக் காணவில்லை....
அது
எங்கேனும் இருக்கும்
என்ற நம்பிக்கையில்
நகர்ந்து கொண்டிருக்கிறது
முகமற்ற
நெற்றி ஒன்று....

கவிஜி

எழுதியவர் : கவிஜி (15-Dec-14, 3:06 pm)
பார்வை : 176

மேலே