கண்ணாடி காதல்
தண்ணீர் போல தேங்கி நின்றாள்
பாறையை தூக்கி வழி விட்டேன்
அவள் ஓடினால்
என்னையும் தாண்டி..
தண்ணீர் மேல் உறங்கினேன்..
மறைத்து நின்றேன்
மழையாக வந்து ஓரம் தள்ளினால்
உடைந்து போனேன்
களைந்து போனேன்....
சாரலில் சிலையாக ஆனாள்
காதலில் கரைந்து போனாள் ...
வீட்டில் பூ வளர்த்தேன்
அவளுக்காக...வளர்ந்து
மற்றவர் தலையில்
ஏறி சென்றால்....
கடலின் ஆழத்தை சந்திக்க சென்றேன்...
அலைகள் மிதக்க வைத்தன...