பாம்பணையில் பள்ளிகொள்ளும் பரந்தாமா - இரு விகற்ப நேரிசை வெண்பாக்கள்

பாம்பணையில் பள்ளிகொள்ளும் ஸ்வாமி பரந்தாமா!
தாம்பெனவே உன்னன்பில் கட்டிடுவாய் – வேம்பில்லை;
இன்சுவையே தானெனக்கு ஈங்கெனக்கு நற்கதி,தா!
நன்றி மறவேனே நான்! 1

பாம்பணையில் பள்ளிகொள்ளும் ஸ்வாமி பரந்தாமா!
தாம்பெனவே உன்னன்பில் கட்டிடுவாய் – வேம்பில்லை;
இன்சுவையே தானெனக்கு ஈங்கெனக்கு நற்கதி,தா!
உன்னை விடுவதில்லை நான்! 1 A

ஒப்புமை யில்லாத உன்திறமை யால்,செல்வி;
எப்பொழுதும் எம்மனதை ஈர்க்கின்ற – செப்பமுடை
உன்சித்ர வித்தையும்; ஓ’..ரியாசின் ஆங்கில
இன்கவியும் ஒன்றையொன்று நேர்! 2

நண்பா! சுதாமா! நலம்தானா நீயுமுன்
பண்பு துணைவியும், மக்களும்? - எண்ணினேன்
உள்ளத்தில் உங்கள் அனைவரையும்; ஓங்கியது
வள்ளலாம் உன்னினிய நட்பு! 3

மாசிலா நல்மணியே உன்மனம் என்றுமே
மாசில்லா மாணிக்க முத்துமணி - தேசு
நிறைவிச்வ நாதனின் நித்திலமே உந்தன்
விறலன்றோ பொன்றாப் புகழ்! 4

சூடாமணி நிகண்டு: விறல் - வலிமை, வெற்றி

பல விகற்ப இன்னிசை வெண்பா

பாம்பணையில் பள்ளிகொள்ளும் ஸ்வாமி பரந்தாமா!
உம்மை நினைந்து பணிந்தோர்க்கு - இம்மைமட்டு(ம்)
அன்றி மறுமையிலும் ஆனந்த நற்கதி,தா!
நன்றி மறவேனே நான்! 5

வண்ண ஓவியம் தீட்டியவர்: ஈரோடு பள்ளிபாளையம் பிரபல மருத்துவர். தமிழ்செல்வி மாசிலாமணி.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (2-Aug-16, 2:43 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 147

மேலே