என்னை காத்த அன்னை

தவம் இருந்து பெற்ற தாயே,
என்னை தவிக்க வைத்தாயே
உந்தன் அன்பில்;
உன் கண்ணில் விழும் முன்னே,
கண்ணீர் விழ வைத்தேனே,
அம்மா என்றொரு வார்த்தை அல்ல -
அவளை போல எதார்த்தை யாரும் இல்லை;
பெற்ற மகனோ பெயரெடுப்பானோ -
என்று கனவுகான,
காணாமல் போன
வைகை ஆறானேனே;
என்னை நேசித்த ஒரே ஆன்மா
என் அம்மா.....
- கௌரி சங்கர்

எழுதியவர் : ச.கௌரி சங்கர் (4-Dec-17, 7:40 am)
பார்வை : 672

மேலே