மனதை வெல்வாயா

சொல்லத்தான் வேண்டும்
என் மன ஆசையை
உன்னிடம் சேர்க்கத்தான்
வேண்டும்
தீர்க்கத்தான் வேண்டும்
காதலின் வேதனையை நீ
உன் ஓரக்கண்ணால் ஒரு
பார்வை பார்த்து
தீர்க்கத்தான் வேண்டும்

நாளும்தான் நிலவு அது
தேயுந்தான்
நானும் தான் இப்போ
அது போலத்தான்
வேண்டும்தான் நான்
சுவாசிக்க உன் மூச்சு காற்று
தினம்தோறும் வேண்டும்தான்

கடிதம்பல எழுதுகிறேன்
உன்னிடம் தர தயங்குகிறேன்
இரவினிலே விழிக்கிறேன்
விடியலிலே உறங்குகிறேன்
உன்னைக் கண்டால்
என்னையறியாது மயங்குகிறேன்

என் வாழ்வில் நீ வேண்டும்
என்றொரு ஆசை
பதில் ஒன்றை சொல்வாயா
என் மனதை நீ
வெல்வாயா?

எழுதியவர் : பெ.பரிதி காமராஜ் (16-Jan-18, 1:26 am)
சேர்த்தது : paridhi kamaraj
பார்வை : 90

மேலே