விடையைத் தேடி

மனிதனாகப் படைத்து உன்னை
மண்ணுலகம் அனுப்புகிறேன்
நான் படைக்கும் நீ
நல்லதையே செய்
நல்லதையே பேசு
நல்லவர்களோடு பழகு
நாள் தோறும் எனை வணங்கு
நல்லதொரு வாழ்வு வாழ்ந்து பின்
நானிருக்கும் இடத்தை வந்தடை
மனிதன் சிரித்தான்
மறுபடியும் உனை அடைய
எனை அங்கு
ஏன் அனுப்புகிறாய்
இறைவனிடம் விடை இல்லை
இருக்கிறதா உங்களிடம்

எழுதியவர் : நாங்குநேரி வாசஸ்ரீ (25-Oct-18, 6:59 pm)
பார்வை : 2489

மேலே