நீ மட்டும் போதும்
உன்அழக பார்த்திருந்தா சாப்பிடவா
தோணும்
பசிக்கூட என்கூட கண்ணாமூச்சி
ஆடும்
உன்னோடு நான் இருக்கும் நேரம்
வேகமாக நிக்காம ஓடும்
ஓடுகின்ற நேரமதை எனக்கு கட்டிப்
போடத்தோணும்
குரலெடுத்து பாட நீ மட்டும் போதும்
குயில் வந்துப்பாடினா என்னோட பகையாதான் ஆகும்
நரகத்தில் நீ இருந்தாலும்
அதுவே எனக்கு போதும்
அந்த நரகம் கூட எனக்கு சொர்க்கமாக மாறும்
கேட்பதற்கு எதுவுமில்லை நீ மட்டும் போதும்
என்றே கொடுக்க நினைக்கும்
கடவுளைகூட மனசு ஒதுக்கி விட்டுப் போகும்