தவமாய் தவமிருந்து
என்ன தவம் செய்தானோ
மாணிடப் பிறவி பெற
என்ன பாவம் செய்தானோ
ஆணாய் பிறக்க...
பாரம் ஏற்றும் காளை கூட
இறக்கி வைக்குமே
சில நொடிகளில்...
ஆண் ஜென்மம் மட்டும்
சுமை தாங்க வேண்டுமே
போகும் வரை...
எப்படியும் வாழ்ந்து விடுவான்
ஆண்பிள்ளை என்று ஒதுக்கும்
பெற்றோர்கள்...
மணமுடித்த பின்னே
மணவாட்டி சொல் கேளான்
பிள்ளை என குறை
கூறுவதில் என்ன பயன்...
பெண்ணுக்கு தேவை அடைக்களம்
ஆணுக்கு தேவை சுடர் விளக்காய்
எரியும் விளக்குக்கு தூண்டுகோள்
போல் வேண்டுமே பாசம் அன்பு
ஆறுதல்...
அரவணைப்பு என்ற ஒன்றே
எதிர்பார்க்குமே ஆணுள்ளம்
தன்னை ஈன்றெடுத்தவர்களிடமே தவிர
அவர்கள் குவித்த சொத்துக்களுக்காக
இல்லை...