உள்ளத்தை உருக்கும் காதல் கவிதை
💙🖤💙🖤💙🖤💙🖤💙🖤💙
*கவிதை*
படைப்பு *கவிதை ரசிகன்*
💙🖤💙🖤💙🖤💙🖤💙🖤💙
நீ உறங்க நினைக்கையிலே!
என் மடியில் உறங்கிட வேண்டும்
நீ உன்ன நினைக்கையிலே!
என் கைகளில் ஊட்ட வேண்டும்
நீ நோயுற்று இருக்கையிலே!
நான் மருத்துவராக வேண்டும்
நீ கருவுற்று இருக்கையிலே
நான் தாயாக வேண்டும்
காலையில் விழிக்கையிலே -முன்னால் தெரிவது உன் முகமாக வேண்டும்
ஆறுதல் நான் தேடுகையில்
அள்ளி அணைக்க நீ வேண்டும்
நீீ சின்ன சின்ன சண்டை போடணும்
நான் அதை ரசிக்க வேண்டும்
நீ கோபித்துக் கொள்ளும் போது
நான் கொஞ்சி பேசி முத்தம் கொடுக்க வேண்டும்......
உந்தன் ஆசைகளையெல்லாம்
ஒவ்வொன்றாக நிறைவேற்ற வேண்டும்
உன்னை ஏதாவது ஒன்றில்
சாதிக்க வைக்க வேண்டும்....
நீ வாழும் நாட்களெல்லாம்
உன்னை மகிழ்ச்சியாக
வாழ வைக்க வேண்டும்
நீ வடிக்கும்
கண்ணீர் எல்லாம்
ஆனந்தக் கண்ணீராய்
வரவைக்க வேண்டும்.....!
*கவிதை ரசிகன்*
💙🖤💙🖤💙🖤💙🖤💙🖤💙