சராசரிக்கும் குறைவான சம்பளக்காரன் வாழ்க்கை

’உங்களுக்கு தான் வாக்கப்பட்டு
என்னத்த கண்டா பட்டு’
செல்லமாய் கலாய்க்கும்
பட்டு மாமிகள்
ஆயிரத்து தொள்ளாயிரத்து ஐம்பதுகளில்
பிறந்தவர்களாகவோ
பாலசந்தரின்
பரம விசிறிகளாகவோ இருக்கக்கூடும்.
எண்பதுகள் அல்லது
அதற்கப்பால் அவதரித்து
சராசரிக்கும் குறைவான
சம்பளக்காரர்களுக்கு வாய்க்கும்
கொட்டு மாமிகளின்
எதிர்நீச்சல் வாழ்க்கை
முற்றாக தரமுயர்கிறது
அல்லது
முழுதாக தடம்புரள்கிறது.

எழுதியவர் : ஜ. கோபிநாத் (24-Nov-22, 1:29 pm)
சேர்த்தது : Gopinath J
பார்வை : 461

மேலே