தமிழை செம்மொழியாக அறிவித்த நாள்

*தமிழ் மொழியை செம்மொழியாக* *அறிவித்த தினம் இன்று....*






✒️✒️✒️✒️✒️✒️✒️✒️✒️✒️✒️

*எம் மொழிக்கும்*
*நம் தமிழ் தான் தாய்.....!*

படைப்பு *கவிதை ரசிகன்*
குமரேசன்


✒️✒️✒️✒️✒️✒️✒️✒️✒️✒️✒️✒️

நம்
தாய்மொழி
முடிசூடா மன்னனாகவே!
இவ்வளவ காலமாக
வலம் வந்தது...
ஆனால்
2004 ஆண்டுதான்
முறையாக
உலக சிம்மாசனத்தில்
அமர வைத்து
செம்மொழி
மணிமகுடத்தைச் சூட்டி
கௌரவித்தார்கள்.... !

தமிழர்களின்
தாய்மொழி தான்
தமிழ் என்று
பலரும் நினைத்துள்ளனர்...
ஆனால்
பல மொழிகளுக்கும்
தாய்மொழி
தமிழ்தான் என்று
வரும் காலம் உணர்த்தும்..... !

'யாமரிந்த மொழிகளிலே தமிழ்மொழி போல்
இனிமை கண்டதில்லை' என்று
பாடினான்
மாகவி பாராதியார்....
ஏனெனில்?
அவன்
காற்றை சுவாசித்து
வாழவில்லை
தமிழ் கவிதையைச் சுவாசித்து
வாழ்ந்தவன்.....!

'தமிழுக்கு
அமுதென்று பேர்
அந்த தமிழ் இன்பத்
தமிழ் எங்கள்
உயிருக்கு நேர்'என்று
பாடினான்
பாவேந்தர் பாரதிதாசன்
ஏனெனில்?
அவன்
உணவால் வாழவில்லை
தமிழ் உணர்வால்
வாழ்ந்தவன்.....!!!


அந்தப்
பரம்பரையில் வந்த
நாம்தான்
தமிழ்ப்பள்ளியில்
படிப்பதும்
தமிழ் பேசுவதும்
கேவலம் என்று நினைத்து
அந்நிய மொழிக்கு
விசிறி கொண்டிருக்கிறோம்...

தமிழ் பேசியப் பிறகு
தேனைச் சாப்பிட்டாலும்
கசக்குமடா....
தமிழை வாசித்த பிறகு
வீணையை வாசித்தாலும்
வெறுக்குமடா......

காலத்திற்கு
அடுத்தப்படியாக
இந்த உலக்தத்தில்
மரணம் இல்லாதது
எதுவென்று கேட்டால்
தயங்காமல்
தமிழ் என்று சொலலுங்கடா!

சிங்கப்பூர்
இலங்கை
மலேசியா
ஆஸ்திரேலிய போன்ற
அந்நிய நாடுகள்
தமிழ் கொடியை
பறக்க விட்டுப் பார்த்து
பரவசமடைகிறது....
ஆனால்
நாம்தான்
அரை கம்பத்தில் கட்டி
அஞ்சலி செலுத்தவே
ஆசைப்பட்டுகிறோம்.....

கற்காலத்தில்
தோன்றிய தமிழ் மொழி
கம்ப்யூட்டர் காலத்திலும்
இணையத்தை
கலக்கிக் கொண்டிருக்கிறது என்றால் .....
அதன் வலிமையை
தமிழனே!
உன்னால்
உணர முடியவில்லையா?
இல்லை
உனக்கு
தமிழன் என்ற
உணர்வே இல்லையா....?

தமிழ்வழியில் கற்று
தரணியில்
புகழ் பெற்றவர்களின்
பெயர்களை
வரிசையாக எழுதினால்....
வரலாற்றில்
பக்கங்கள் போதாது..... .!!!

நாம்தான்
தமிழில் படித்தால்
வேலை கிடைக்காது என்று... ஆங்கிலப் பள்ளியில்
தன்மானத்தை
அடமானம் வைத்து
பிள்ளைகளைப்
படிக்க வைத்துக் கொண்டிருக்கிறோம்....!

அன்னியர்
நம்மிடம்
தமிழில்
பேச வேண்டும் என்று
நினைக்கும் நாம்....
நம் பிள்ளைகள்
ஆங்கிலத்தில்
பேசவேண்டும் என்று
நினைப்பது
நமக்கு
தலைகுணிவு இல்லையா?

அன்னையர்
திக்கித் திக்கி
பேசும் தமிழை
ரசித்துப் பாராட்டுகின்றோம்...
நம் பிள்ளைகள்
அழகாகப் பேசும் தமிழை
அலட்சியம் செய்கிறோம்....
இது தான்
தாய்மொழி பற்றா ...?

ஒரு பானைச்சோற்றுக்கு
ஒரு சோறு பதம்
என்பது போல்
தமிழ் மொழியின்
வலிமை திறமை
பெருமை அருமை
மென்மை இனிமை
உண்மை புதுமை இவற்றிற்கெல்லாம்..... கன்னியாகுமரியின்
கடல் பாறையின் மீது
குன்றின் மேலிட்ட
விளக்காய் நிற்கும்
திருவள்ளுவர்
சிலையே சாட்சி....!!!

இனியாவது
விழித்தெழு தோழா !
சிங்கம் போல்
சிலிர்த்தெழு தமிழா!

*கவிதை ரசிகன்*

✒️✒️✒️✒️✒️✒️✒️✒️✒️✒️✒️

எழுதியவர் : கவிதை ரசிகன் (6-Jun-24, 7:16 pm)
பார்வை : 19

சிறந்த கவிதைகள் (இந்த வாரம்)

மேலே