gspria - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  gspria
இடம்:  chennai
பிறந்த தேதி :  04-Oct-1979
பாலினம் :  பெண்
சேர்ந்த நாள்:  16-Dec-2011
பார்த்தவர்கள்:  196
புள்ளி:  10

என்னைப் பற்றி...

kavidhai, en uyir

என் படைப்புகள்
gspria செய்திகள்
gspria - Adam Biju1 அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
09-Sep-2014 11:57 am

(தமிழ் ஓசை நாளிதழின் இணைப்பான களஞ்சியம் இதழில் வெளியான சேவியர் அவர்களது கட்டுரை)

ஒரு அமெரிக்கரும், ஒரு இங்கிலாந்து நாட்டவரும், ஒரு இந்தியரும் பேசிக்கொண்டார்கள். அமெரிக்கர் சொன்னார், எங்கள் நாட்டில் வாகனங்கள் வலது புறமாகச் செல்லும். இங்கிலாந்துக் காரர் சொன்னார், எங்கள் ஊரில் இடது புறமாகச் செல்லும். இந்தியர் கடைசியாக சிரித்துக் கொண்டே சொன்னார், எங்கள் ஊரில் இடைவெளி இருக்குமிடமெல்லாம் செல்லும்.

சாலைப்பயணம் என்பது மரணத்தை முன்னிருக்கையில் அமரவைத்துச் செல்வது போலாகிவிட்டது இப்போது. வாகன எமன் எப்போது வந்து உயிரை இழுத்துச் செல்வான் என்று அறியமுடியாத சூழல். எப்போதும் மரணம் நிகழலாம் என்னும் நிலைய

மேலும்

கார்த்திக் அளித்த படைப்பில் (public) நாகூர் கவி மற்றும் 2 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
13-Nov-2013 7:15 pm

ஊனத்தை கிண்டல்,
செய்யும்,
ஈன பிறவிகளே,

கடவுளும் ,அவர்களும்,
ஒன்றென்று தெரியுமா ?

எதுவும் செய்ய,
முடியாத,
கடவுளை,
எல்லாம் செய்யுமென்று,
நம்பி,

முடியவில்லை என்றாலும்,
முயற்சி செய்யும்,
அவர்களை,
இழிவுபடுத்தும் கூட்டமே,
நீ அழிந்து போ மொத்தமே,

தூணாய் நாம்,
இருந்தாலே,
அவர்கள் அதில்,
கோபுரமே கட்டுவார்கள்,
நாம்,
துரும்பாக கூட,
இருப்பதில்லை,

அவர்களை வசைபாட,
படைக்கப்பட்ட,
பழமொழி எத்தனை?
அவர்கள் புகழ் பாட,
வந்ததா நமக்கு,
சிந்தனை,

கை இல்லாதவனிடம்,
ஓவியம் வரைய,
கால் போதும் என,
சொல்லி பார்,
அவன் விமானத்தையே,
ஓட்ட முயற்சிப்பான்,

உன்னால் முடியாது,
என சொல்ல,
ஒர

மேலும்

உணர்வு. மனிதாபிமானம். ஈர்க்கவில்லை கவி அமைப்பு 01-Oct-2014 5:20 am
பழைய கவிதை பார்க்கும்போது கிடைத்த முத்து . பகிர்கிறேன் . தொடருங்கள் ... 18-Sep-2014 6:10 am
வலியை மிக ஆழமாக உணர்த்திவிட்டீர்கள் நண்பா ! நிச்சயம் வழி பிறக்கும் இந்த இழிவான குணம் மாற ! என்னை மிகவும் பாதித்த உங்களது வரிகள் ! இனி ஒரு, சினிமாவிலோ, கண் எதிரே, யார் ஒருவரையோ, அவமானம், செய்யும் போது, கை கட்டி, வேடிக்கை பார்த்தால், ஊனம் அவர்களுக்கு அல்ல, நமக்கு தான், கல்யாண சந்தையிலே, கடைசியாய் நிற்கும், அவர்கள் தான், கண்ணியமான கணவன்மார்கள், 30-Aug-2014 3:01 pm
வழியும் விழி நீரை வலிகலால் தாக்கி வானவில்லையும் வளைப்பவர்கள் அவர்களே... கண்முன் கலையாத நம்பிக்கையின் கருக்கள்.... 05-Aug-2014 10:46 pm
குமரிப்பையன் அளித்த படைப்பில் (public) புதுவை தமிழ் மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்
15-Dec-2013 3:06 pm

தாய்மை என்றால் எனக்கு அப்படி என்கிறார்கள்...
ஆனால்...
அடுத்தவர் தாயை தலையில் ஓங்கி அடிக்கிறார்கள்..!

நண்பரின் குழந்தையை அடிக்காமல் தடுக்கிறார்கள்...
ஆனால்...
தான் பெற்ற குழந்தையை தாறுமாறாய் அடிக்கிறார்கள்..!

கற்கவைக்கும் கல்விமான்கள் நாங்கள் என்கிறார்கள்..
ஆனால்...
அவர்தம் பிள்ளைகள் வேறு பாடசாலையில் படிக்கிறார்கள்..!

இவருடன் இருக்கும்வரை கவரிமான் என்கிறார்கள்..
ஆனால்...
எதிர்வரிசை சென்றவுடன் பச்சோந்தியில் சேர்கிறார்கள்..!

இவர் கைகாட்டினால் பேருந்து நிற்க சொல்கிறார்கள்..
ஆனால்...
அடுத்த நிறுத்தத்தில் நிறுத்தினால் ஏனோ சீறுகிறார்கள்..!

தனக்கு மட்டுமே நட்பு வேண்டுமென ஓடுகி

மேலும்

சிறப்பானது ! 22-Apr-2014 7:12 pm
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றிகள் தோழமையே..! நட்புடன் குமரி. 25-Jan-2014 12:53 am
வருகைக்கும் பதிவுக்கும் மிக்க நன்றிகள் தோழமையே..! நட்புடன்குமரி. 25-Jan-2014 12:53 am
யதார்த்தம் தழுவிய கவி. 25-Jan-2014 12:11 am
gspria - படைப்பு (public) அளித்துள்ளார்
21-Nov-2013 8:08 pm

விடியற்காலை கங்கா ஸ்நானம்;
பின் தொடரும் தீபாவளி மருந்து
ஆசிர்வாதங்களுடன் புத்தாடை;
தின்று மகிழ பலகாரங்கள்!
வாழ்த்துக்கள் தரும் சுற்றமும் நட்பும்;
இவை எல்லாமே எனக்கு
தாமரை இலை தண்ணீர் தான்!
எங்கோ ஒரு மூலையில் இருந்து என்னை
வாழ்த்த நீ இல்லாமல்...

மேலும்

அம்மாவின் அன்புக்கு முன் எதுவும் நிற்க முடியாது ! 21-Nov-2013 8:32 pm
gspria - படைப்பு (public) அளித்துள்ளார்
21-Nov-2013 8:07 pm

பல முறை
பல விஷயம்
பல மணித்துளிகள்
பலவிதமாக
நம்முடைய
சந்தோஷம், துக்கம்;
மௌனம், கோவம்;
விருப்பு, வெறுப்பு
எல்லாவற்றையும்
பேசி பகிர்ந்திருக்கிறோம்;

இருப்பினும்
பிரிதலின் வலியை மட்டும்
எனக்கே எனக்கு என்று
பகிராமல் வைத்துள்ளேன்;

பிரிந்த பின்னரும்
என்றேனும் எதிர்படுவீர்கள்
என்ற எதிர்பார்ப்பில்
இதழோரம் சேமிக்கிறேன்
என் புன்சிரிப்புகளை;

சிதறப் போகும்
சிரிப்புகளில் சிலதாவது
தூய்மையான நட்பிற்காக
வாழும் உள்ளத்தினை
மகிழிச்சியில் நனைக்கலாம் அல்லவா?

குளிரப் போவது
இதயம் மட்டும் அல்ல
அதில் உறைந்து இருக்கும்
நம் நட்பும் தான்...

மேலும்

நன்று ! 21-Nov-2013 8:24 pm
gspria - படைப்பு (public) அளித்துள்ளார்
21-Nov-2013 8:06 pm

ஒவ்வொரு முறையும்
உங்கள் இருப்பிடத்தை
கடந்து செல்லும் போது
வந்துவிடாதே என்ற
அறிவின் ஆணையையும் மீறி
நெஞ்சாங்கூட்டில் உங்கள் நினைவுகளும்
நேத்திரங்களில் சிறு கண்ணீர் துளிகளும்....

மேலும்

நன்றி .. தோழரே அல்ல.. தோழியே.. ஹி ஹி ஹி 28-Nov-2013 3:33 pm
அருமை தோழரே 23-Nov-2013 6:26 pm
நன்று ! 21-Nov-2013 8:32 pm
gspria - எண்ணம் (public)
21-Nov-2013 8:04 pm

ஒவ்வொரு முறையும்
உங்கள் இருப்பிடத்தை
கடந்து செல்லும் போது
வந்துவிடாதே என்ற
அறிவின் ஆணையையும் மீறி
நெஞ்சாங்கூட்டில் உங்கள் நினைவுகளும்
நேத்திரங்களில் சிறு கண்ணீர் துளிகளும்....

மேலும்

மேலும்...
கருத்துகள்

மேலே