மாஹிரா ஜைலப்தீன் - சுயவிவரம்
(Profile)
எழுத்தாளர்
இயற்பெயர் | : மாஹிரா ஜைலப்தீன் |
இடம் | : kandy |
பிறந்த தேதி | : 05-May-1992 |
பாலினம் | : பெண் |
சேர்ந்த நாள் | : 04-May-2016 |
பார்த்தவர்கள் | : 427 |
புள்ளி | : 56 |
சில்லென்று வீசிய காற்று மெதுவாக விஸ்வநாதனின் முகத்தை தீண்டியது. இமைகள் இரண்டையும் மூடி கொண்டார், மனைவி பாக்கிய லட்சுமி மூடிய விழிக்குள் ஒரு கோடாய் தெரிந்து மறைந்தாள். சென்ற மாதம் இதே நாள் தான் '' என்னங்க நெஞ்சு கொஞ்சம் வலிக்குறாப்புல இருக்கு, '' என்று கணவனின் தோளில் சாய்ந்தவள் எழுந்திருக்கவே இல்லை. கணவனின் மடியிலேயே நிம்மதியாக இறுதி மூச்சை விட்டு விட்டாள் , ஆனால் அவளின் மறைவுக்கு பின்னால் விஸ்வநாதன் தான் இன்னும் பழைய விஸ்வநாதனாய் மாறவில்லை. கடமைக்கு சாப்பாடு ஒரு குளியல் பத்திரிக்கை என நடை பிணமாக அலைந்தார். நாளின் பாதி கட்டிலில் கழிந்தது. கனடாவில் உள்ள மகள் செந்தாமரையும் தந்தையை தம்மோடு
...கண்ட நாள் முதலாய்....
பகுதி : 24
அவனிற்கு முகத்தைக் காட்டாது கட்டிலில் திரும்பிப் படுத்தவளுக்கு கண்கள் அவளைக் கேட்காமலேயே கண்ணீர்த்துளிகளை பரிசளிக்கத் தொடங்கியது...எந்த பதிலும் சொல்லாமல் அவன் சென்றது அவள் மனதில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தது...அவன் கோபத்தைக் காட்டியிருந்தாலோ அல்லது வார்த்தைகளால் அவளைத் திட்டித் தீர்த்திருந்தால் கூட அவள் கவலைப்பட்டிருக்க மாட்டாள்...ஆனால் அவனது பாராமுகம் அவளை மிகவும் வேதனையடையச் செய்தது...மனம் அமைதியின்றி அலைகடலாய் கொதித்துக் கொண்டிருக்க...உறக்கமும் தொலைவாகிப் போக மௌனமாய் விழிநீரில் கரைந்து கொண்டிருந்தாள் துளசி...
இங்கே சோபாவில் வந்து படுத்துக
'கன்னத்தில் முத்தமிட்டால்' திரைப்படத்தின் 'ஒரு தெய்வம் தந்த பூவே கண்ணில் தேடல் என்ன தாயே'
என்ற பாடல் ராகத்திற்கும் அதே சூழ்நிலைக்கும் என்னால் எழுதப்பட்ட வரிகள். குறை நிறைகளை விமர்சியுங்கள் அவைகள் என்னை இன்னும் வளர்த்துக் கொள்ள ஆணி வேராய் அமையும்.
(மெல்ல மென்று போகும்
வாடைக் காற்றை போல
கன்னத்தில் முத்தமிட்டால் நீ
கன்னத்தில் முத்தமிட்டால்) 2
பல்லவி
-------------
தவமின்றி பிறந்த நிலவே!
வரமின்றி பிரியும் கனவே!
தவமின்றி பிறந்த நிலவே!
வரமின்றி பிரியும் கனவே!
தாய்மை புகழும் இதம் நீ அன்பே! ஆ....
தாய்மை புகழும் இதம் நீ அன்பே!
வாய்மை இகழும் இடம் நீ அன்பே!
நதியைப் போல நீ
கவியென எண்ணி கிறுக்கி விட்டு - விரல் கடிக்கிறேன்
பக்கமெல்லாம் மொத்தமாய் உன் பெயர் நிறைந்திருக்க
பேனாவின் மையெல்லாம் நம் காதலாய் மாறியிருந்தன ...
for my sweet hubby
அழகான ஆத்தங்கரை
சலசலக்கும் நீரோட்டம்
ஒற்றைப் படகு
மிதக்கும் துடுப்பு
அன்னமாய் நீ
அருகில் நானும்
நாம் மட்டும்
கூடவே நீரும்
நம்மை பார்த்திட
குதிக்கும் மீன்கள்
தொந்தரவு என
விரட்டும் நான்
விளையாட்டு என
ரசிக்கும் நீ
உறுத்துப் பார்த்த
உன் விழிகள்
தோற்றுத்தான் போன
அந்த மீன்கள்
அதன்பின் எட்டிப்
பார்க்க துணியவில்லை
நீருக்கு அவைகளும்
நிலத்துக்கு இவளும்
போதுமென ஒதுங்கிக்கொண்டன
அவள் விழிகள்
என் இளமையில்
நீச்சல் இட்டு
என் இதயத்தின்
ஆழத்தில் உறங்கிட
இடம் தேட
தொடங்குகின்றன
என் விழிகள்
அவள் விழி
பார்வைகள் விழுங்கி
தாகம்
வீடு நிரம்ப கூட்டம் இருந்தாலும் வீடே அமைதியாய் இருந்தது. தானே உலகம் என்ற மத்தாப்பில் இருந்த நிரஞ்சன் ஆறடி கட்டிலில் சடலமாய் படுத்திருந்தான். 30 வயது ஆக இன்னும் இரண்டு மாதம் இருந்தது. அவனை சுற்றி வர கூட்டம் .. அது அன்பால் நிறைந்த கூட்டம் அல்ல, பார்வதி அம்மாளையும் அப்பாவி விநோதராவையும் பரிதாப கண்ணோடு அலசவே வந்திருந்தது மொத்த கூட்டமும். கணவனின் சாவு விநோதராவை பாதித்ததா இல்லையா என்பதை எவராலும் கணிக்க முடியாமல் இருந்தது. கண்ணில் நீர் மல்க தன் மாமியாரின் மடியில் தலை சாய்த்து விட்டத்தை நோக்கி கொண்டிருந்தாள் வினோ..வினோதரா. 25 வயதும் ஆகாத பச்சை பெண், இவள் விதவை ஆனது யார் குற்றம்?
மகனின் கெட்ட குணத்தை
முகவரிகள் தொலைத்த போது
முதல் வரியாய் நீ வந்தாய்
முகில் கொஞ்சம் விலக்கிடும் போது
முழுமதியாய் நீ ஒளிர்ந்தாய்
முகம் தன்னை நோக்கிடும் போது
முத்து சிரிப்பாள் நீ மிளிர்ந்தாய்
முதலுடன் நான் உன் கரம் பிடிக்க வருகையில்
முதிர் கன்னியாய் நீ மடிந்துவிட்டாய்
மீண்டும் ஒரு முறை தன் கைப்பையை தடவிகொண்டான் விக்னேஷ். கண்கள் அவனை அறியாமல் நீரை சொரிந்தன. மனதிலே குடிகொண்ட காயத்துக்கு மருந்து இல்லாமல் அவன் தன்னையே புண்ணாக்கி கொண்டிருந்தான்.
'' என்னடா மச்சான் ! இன்னும் அவ நெனப்பா?" சுகனின் கேள்வி காற்றிலே மறைந்தது. " அப்படி என்னதான் இந்த பய்ல மறைச்சி வெச்சி இருக்குற? மீண்டும் சுகனின் கேள்வி காற்றுக்குள் மறைந்தது. விக்னேஷ் எண்ணங்களுக்குள் கட்டு பட்டு பழைய நினைவுக்குள் மறைந்தான்.
"ரோஜா ரோஜா ... கண்ட பின்னே .....! செல்போன் சிணுங்களுக்கு கலைப்பட்ட உறக்கம் மீண்டும் வரவே மறுத்தது. வ்ரோங் நம்பர் என்றாலும் பேசிய குரல் தூக்கத்தை கலைத்து உடைந்த ரெகார்ட் போல மீண்டு
மீண்டும் ஒரு முறை தன் கைப்பையை தடவிகொண்டான் விக்னேஷ். கண்கள் அவனை அறியாமல் நீரை சொரிந்தன. மனதிலே குடிகொண்ட காயத்துக்கு மருந்து இல்லாமல் அவன் தன்னையே புண்ணாக்கி கொண்டிருந்தான்.
'' என்னடா மச்சான் ! இன்னும் அவ நெனப்பா?" சுகனின் கேள்வி காற்றிலே மறைந்தது. " அப்படி என்னதான் இந்த பய்ல மறைச்சி வெச்சி இருக்குற? மீண்டும் சுகனின் கேள்வி காற்றுக்குள் மறைந்தது. விக்னேஷ் எண்ணங்களுக்குள் கட்டு பட்டு பழைய நினைவுக்குள் மறைந்தான்.
"ரோஜா ரோஜா ... கண்ட பின்னே .....! செல்போன் சிணுங்களுக்கு கலைப்பட்ட உறக்கம் மீண்டும் வரவே மறுத்தது. வ்ரோங் நம்பர் என்றாலும் பேசிய குரல் தூக்கத்தை கலைத்து உடைந்த ரெகார்ட் போல ம