செஞ்சூரியன் - சுயவிவரம்
(Profile)
![](https://eluthu.com/images/userimages/b/14536.jpg)
![](https://eluthu.com/images/roles/newer.png?v=5)
வாசகர்
இயற்பெயர் | : செஞ்சூரியன் |
இடம் | : தமிழ் தேசம் |
பிறந்த தேதி | : 12-Jun-1983 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 26-Sep-2012 |
பார்த்தவர்கள் | : 101 |
புள்ளி | : 14 |
நான் ஒரு ஏழை விவசாயி என்பதை தவிர எனக்கு அடையாளம் எதுவுமில்லை .
சிட்டுகுருவி திங்கநெல்லு இல்லை – சிறு
பட்டுப்பூச்சி தங்கஇடமும் இல்லை !
ஆட்டுமாட்டு கூட்டத்திற்கும் இங்கே – வெறும்
கட்டாந்தரை தவிர ஏதும் இல்லை !
மரமும்நீரும் அழிந்துபோகும் முதலில் – நல்ல
மீனும்உப்பும் ஒழிந்துபோகும் கடலில் !
மனிதன்என்ற மிருகத்தின் வெறியில் – இந்த
மாண்புமிக்க உலகம் அழியும் கதியில் !
காசுதேடி சொத்துதேடி ஓடி – இங்கு
மாசுபட்டு கிடப்போர்கள் கோடி !
கூசும்குணம் எள்ளளவும் இன்றி – பொய்
பேசும்மனம் படைத்தோரும் கோடி !
யுத்தம்செய்து கெட்டுப்போனார் பாதி – காம
மத்தம்கொண்டு செத்துப்போனார் மீதி !
மொத்தமாக ஊரையுண்டு வாழும் – பேடி
எத்தர்களின் ஆட்சியில் தான் பூமி !
வீடுவிட்டுக் காடுபோக வேண்டும் – அங்கே
விருந்துபல உண்டுமகிழ வேண்டும்
கூடுவிட்டு ஆவிப்போகும் முன்னே – நான்
கொள்ளையெழில் கண்டுமகிழ வேண்டும் !
கிண்ணத்து மதுவென்று மயக்கும் – சின்ன
வண்ணத்துப் பூச்சிகள் வேண்டும் !
வண்டோடும் விட்டிலோடும் கலந்து – நான்
கொண்டாடி மகிழ்ந்திருக்க வேண்டும் !
நதிதொட்டு வருகின்ற தென்றல் – என்
நலம்கேட்டுக் குளிர்விக்க வேண்டும்
வான்விட்டு வந்தந்த நிலவு – என்
வாலிபத்தை தீமூட்ட வேண்டும் !
தென்றல்தொட்டு நழுவுகின்ற தூறல் -என்
முன்றல்வந்து கோலம்போட வேண்டும்
செடிமுகத்தில் சிரிக்கின்ற பூக்கள் – சுக
சேதிகேட்டு வாய்மலர வேண்டும் !
சாரல்தரும் ஏழுநிறம் போது
நாவலன் தீவென்று நற்பெயர் கொண்டு
நாற்திசையும் நன்புகழ் வென்ற
குமரிக் கண்டம் காப்பதற்கு
காவலன் யாருமில்லையென்று
நீ காவு வாங்கினாயோ
ஏ....கடலே.!
ஏழுதெங்க நாடு ஏழுமதுரை நாடு
ஏழுமுன்பலை நாடு ஏழு பின்பலை நாடு
என்றெல்லாம் எம் தமிழர் ஆண்ட
நாற்பத்தொன்பது நாடுகளையும்
நாசகரமாய் வயிற்றில் போட்டாயே
உன் பசி அடங்கியதா சொல்
ஆழ்கடலே.!
பாய்ந்தோடி நிலமெங்கும்
பயிர் செய்த "பறுளி"யாற்றையும்
குன்றில் பிறந்து குவளயம் தவழ்ந்து
குலம் காத்த "குமரி"யாற்றையும்
நீ குடித்துப் போனாயே
நீலக் கடலே.!
நெடுவானம் தொட்டுப் பார்த்து
நெடுநாட்கள் உயர்ந்து நின்ற
"குமரிக்கொடு" மலையையு
தோழர்கள் அனைவருக்கும் வணக்கம்..!
தளத்தில், சிறுகதைகள் எழுதும் தோழர்களுக்கு,ஒரு நல்ல வாய்ப்பு..!
தேனி மாவட்ட தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கம் மற்றும் போடி-மாலன் அறக்கட்டளை இணைந்து,சிறுகதைப் போட்டி ஒன்று நடத்தப் படுகிறது.!
சிறுகதைகள் எத்தனைப் பற்றி வேண்டுமானாலும் இருக்கலாம்.
கதைகளை தெளிவான கையெழுத்தில் தட்டச்சு செய்து அனுப்பலாம்.அல்லது மின் அஞ்சலிலும் அனுப்பலாம்.
தேர்வு செய்யப் படும் முதல் மூன்று இடங்கள் பெற்ற கதைகளுக்கு, எழுத்தாளர்களை ஊக்கப் படுத்தும் வகையில், கவுரவமான பரிசுத் தொகையும் உண்டு.
அனுப்ப வேண்டிய முகவரி-
தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலை