Akbar Abthullaa - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : Akbar Abthullaa |
இடம் | : தமிழ்நாடு |
பிறந்த தேதி | : 07-Jul-1963 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 04-Jan-2014 |
பார்த்தவர்கள் | : 56 |
புள்ளி | : 6 |
பகிர்ந்து கொண்டிருக்கிறேன்
ஏராளமான ரகசியங்களை
உன்னிடம் மட்டுமே.
ஐந்து வயதில்
குளக்கரைப் படிக்கட்டில் அமர்ந்து
மீன்களுக்குப் பொறி போட
துள்ளி எழுந்த ஒரு விடலை மீன்
என் சுண்டு விரல் கடித்ததை.
முறைப் பெண் என்று
முதலில் அறிமுகமான
மலர்க்கொடிக்குப் பிடிக்காதென்று
பொக்கிஷமாகப் பாதுகாத்த
அரும்பு மீசையை
ரகசியமாக வழித்தெடுத்ததை.
என் இருபது வயதில்
அக்காவிற்குத் திருமணமாகி
மாமாவுடன் செல்ல
அவளைக் கட்டிப் பிடித்து
போகவிடாமல் தடுத்து
தேம்பி அழுததை.
வேலை தேடி பட்டிணம் வந்த பிறகு
விடுதியின் காரை பெயர்ந்த
சுவரோவியங்களில்
அம்மாவின் முகம் கண்டு மகிழ்ந்ததை.
இப்படியாக எல்லாவற்றையு
மதம் ஏற்றால் விழா ரெண்டுதான்
மனம் ஏற்றால் விழா ஒன்றுதான்
ஓணம் கேரளத்தில் எல்லோருக்கும்
ஒன்றுதான்
அது மிகவும் நன்றுதான்
பானைக்கு ஏது மதம்
யார் தப்பினாலும் உருவாகும்
நெருப்பிற்கு ஏது மதம்
யார் எரித்தாலும் சூடு தரும்
நீரிற்கு ஏது மதம்
பானையிலிட்டால் சூடாகும்
அரிசிக்கு ஏது மதம்
கொதிக்கும் நீரிலிட்டால் சோறாகும்
சோற்றிற்கு ஏது மதம்
யார் வயிற்றிலும் அது உணவாகும்
விரும்பினாலும் விரும்பாவிட்டாலும்
ஏற்றாலும் ஏற்காவிட்டாலும்
இறுதியில் எல்லோரும் தழுவும் மதம்
ஒன்னுதான் அது மண்ணுதான் !
-----கவின் சாரலன்
அறிந்தும் அறியாமலும்
என் படுக்கையறைப்பக்கமாயிருக்கின்ற
உன் திறந்த ஜன்னல் சொல்லுகிறது
உன் கோபங்களுக்குள்ளே என்னையும்
ஒளிய வைத்திருக்கின்றாயென்பதை
என் பார்வைக்கடக்கின்ற உன் அறைக்கதவை
நீ ஆயிரம் முறை சாத்தியறைந்தபொழுதும்
================================
மூன்றாம் பிறையினுள்ளே
ஒரு முழுப்பிறை
உந்தன் முகம்
அலைத் தழுவிடாத கரையொன்று
உலர்வதைப்போல்
ஆண்கள் வெட்கப்படுகின்ற தருணம்
இப்படித்தான் இருக்கின்றது போல்
உன் முறுவல்கள் தொட்டுச் சென்ற
என் வதனங்களுக்குள்ளே
சிறு இலை முளைக்கின்ற நிகழ்வுகளின்போது
=================================
உன் வருகையினாலே
மௌனம் என்கின
எந்த மண்ணில் பிறந்தாலும்
எந்த மொழியில் வாழ்ந்தாலும்.
சொந்தம் ஒன்று உணர்விலும்
முந்தும் தமிழ் உறவாகும்.
இடையில் வந்த உறவெலாம்
கடையில் பெற்ற பொருள் போலாம்.
கருவின் மூல உணர்விலும்
கலந்து வந்ததும் தமிழாகும்.
முதல் மொழிந்த அம்மா சொல்
முழு உலகின் முதல் சொல்.
தரணி எங்கும் தமிழ் உணர்வு
நிறைந்திருந்த தாக்கம் அது.
வாய் பேசும் மொழியெலாம்
தாய் சொன்ன மொழியாமோ!
மண்ணிலே விழும்போதும்
சொல்லி அழும் தமிழன்றோ!
பிழைப்புக்காக இடம் மாறி
பேசுவதும் நம்மொழியோ!
பிழை காணப் பொறுப்போமோ!
பின்னும் முப்பத்துக் கோடியோ!
காற்றுள்ள இடமெங்கும்
கன்னித் தமிழ் வாழ்ந்திருக்கும்.
வே
கொட்டும் மழையில்
உனை நினைத்தேன்
கொதிக்கும் வெயிலில்
உனை நினைத்தேன்...
தும்மும்போது
உனை ரசித்தேன்
துப்பட்டாவிலும்
உனை ரசித்தேன்.........
நீயில்லாத சாலையை
கசப்பாய் உணர்ந்தேன்
இனிப்பிலும் கூட
வேம்பை உணர்ந்தேன்...
என்னருகில் நீயிருக்க
என்னை மறந்தேன்
நீ கிடைக்கவில்லையென்றால்
நான் உயிர் துறப்பேன்....!!!!!!!
கெட்டவர் எல்லாம்
ஒன்று சேர்ந்தால்
இனி
கொடுங்கோலர்களுக்கு
வீழ்ச்சி இல்லை.......!!!!
என் கெட்ட நேரம்
ஆரம்பமானது
சிலரின்
நல்ல நேரத்துடன்..!
சிலரது காதல் வளர்பிறை
சிலரது காதல் தேய்பிறை
சிலரது காதல் பௌர்ணமி
சிலரது காதல் அமாவாசை
காதலும் அப்படித்தான்
அவரவர் மனம்போல......!!!