எழில்வேந்தன் - சுயவிவரம்
(Profile)
எழுத்தாளர்
இயற்பெயர் | : எழில்வேந்தன் |
இடம் | : சென்னை |
பிறந்த தேதி | : |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 07-Aug-2015 |
பார்த்தவர்கள் | : 546 |
புள்ளி | : 30 |
கவிஞர், ஆராய்ச்சியாளர் , வழக்கறிஞர், சமூக ஆர்வலர். அரசியல் அறிவியல் மற்றும் பொது நிர்வாகவியலில் முனைவர் பட்டம், அரசியல் அறிவியலில் முதுகலைப் பட்டம், சட்டவியலில் இளம்கலை பட்டமும் பெற்றுள்ளேன்.
' பாதையோரத்துப் பாரிஜாதங்கள்’
' வெளிச்ச விழுதுகள் ' என்னும் இரண்டு கவிதை நூல்கள் இதுவரை வெளிடப்பட்டுள்ளன.
ஆண்டுதோறும் இந்திய குடியரசு தினத்தையொட்டி புது டில்லியில் இந்திய அரசு நடத்தும் ' தேசிய பன்மொழிக் கவியரங்கத்தில் ' பங்கேற்க 1995ஆம் ஆண்டுக்கான சிறந்த தமிழ்க் கவிதையாக 'ஆலமரம்' தேர்ந்தெடுக்கப் பட்டது. (ஒவ்வொரு மொழியிலிருந்தும் ஒரு கவிதை மட்டுமே). இக்கவிதை பதினெட்டு தேசிய மொழிகளில் இந்திய அரசால் மொழி பெயர்க்கப் பட்டுள்ளது.
'மங்கையராய்ப் பிறப்பதற்கு', 'ஆலமரம்' , 'நதி' ஆகிய கவிதைகள் பஞ்சாபி மற்றும் கன்னட மொழிகளில் கன்னட சாகித்திய அகாதமி, பஞ்சாபி சாகித்திய அகாதமி ஆகியவற்றால் மொழி பெயர்த்துள்ளன.
பன்னாட்டு பல்கலைக் கழகங்களும் கலை இலக்கிய அமைப்புகளும் நடத்தும் உலக மற்றும் தேசிய அளவிலான கருத்தரங்கங்களிலும் மாநாடுகளிலும் ஆராய்ச்சி உரைகள் நிகழ்த்தி வருகிறேன். அனைத்துவகை ஊடகங்களிலும் என் படைப்புகளும் பங்கேற்பும் தொடர்ந்து வருகின்றன. மனித உரிமைகள், பெண்ணுரிமை, குழந்தைகள் உரிமைகள், சுற்றுச்சூழல் மற்றும் சமூகவியல் ஆகிய தளங்களில் என் பார்வையும் பணியும்.
பூக்கள் மணமெழுத
****புல்லாங்குழல் இசையெழுத
ஈக்கள் எதுகையிட
****இலைகள் மோனையிட
கீற்று தவிப்பெழுத
****கிளிகள் பேச்செழுத
ஊற்று சிலிர்ப்பெழுத
****உயிர்கள் மூச்செழுதும்
காற்றின் பக்கங்களில்
****கவிதைகள்..கவிதைகள்..!
சேற்றுக் கூழருந்தி
****செங்கதிர்கள் அசைந்தெழுத
ஆற்றின் கால்களில்
****சலங்கைகள் குதித்தெழுத
சோற்றுக் கனவுகளில்
****சிறகுகள் சோர்ந்தெழுத
நேற்றில் எஞ்சிய
****நம்பிக்கை உயிர்த்தெழுதும்
காற்றின் பக்கங்களில்
****கவிதைகள்..கவிதைகள்..!
நைந்த நினைவுகளும்
****நிலத்தின் பெருமூச்சும்
நாளைய கேள்விகளும்
****நீங்காத ஆசைகளும்
காலப் பெருவெளியின்
****கவலைகளும் கண்ணீரும்
கரைப
இருட்டில் பிறந்தவளே,
எங்கே இருக்கின்றாய்.
அன்பிற்கினிய எங்கள்
அருமை மகள் சு(த)ந்தரியை
அடைத்து வைத்துள்ளார்கள் என்று
உன்னைப் பெற்றவர்கள்
என்னிடம் பிராது கொடுத்துள்ளார்.
பத்திரிக்கை விளம்பரத்திற்குப்
பணம் காசு இல்லை என்று
ஏழைகளின் வழக்கறிஞன்
என்னிடத்தில் வந்துள்ளார்.
நீ
சுகப் பிரசவத்திலா
சுடர் முகம் காட்டினாய்.?
கருவறையில் கொடி சுற்றக்
கட்டுண்டு கிடந்தாயே.
உன்னை விடுவித்த மருத்துவச்சிகள்
இங்கே விலா நோக குமுறுகின்றார்.
நீ
ஈன்றவரை நோக்கி என்றேனும்
எழுந்தோடி வருவாய் என
அதீத நம்பிக்கையுடன்
ஆவலாய் இருந்தாராம்.
வருடங்கள் தானே வந்து போயின
நீ வரவில்லையே.
உன்னைப் ப
இருட்டில் பிறந்தவளே,
எங்கே இருக்கின்றாய்.
அன்பிற்கினிய எங்கள்
அருமை மகள் சு(த)ந்தரியை
அடைத்து வைத்துள்ளார்கள் என்று
உன்னைப் பெற்றவர்கள்
என்னிடம் பிராது கொடுத்துள்ளார்.
பத்திரிக்கை விளம்பரத்திற்குப்
பணம் காசு இல்லை என்று
ஏழைகளின் வழக்கறிஞன்
என்னிடத்தில் வந்துள்ளார்.
நீ
சுகப் பிரசவத்திலா
சுடர் முகம் காட்டினாய்.?
கருவறையில் கொடி சுற்றக்
கட்டுண்டு கிடந்தாயே.
உன்னை விடுவித்த மருத்துவச்சிகள்
இங்கே விலா நோக குமுறுகின்றார்.
நீ
ஈன்றவரை நோக்கி என்றேனும்
எழுந்தோடி வருவாய் என
அதீத நம்பிக்கையுடன்
ஆவலாய் இருந்தாராம்.
வருடங்கள் தானே வந்து போயின
நீ வரவில்லையே.
உன்னைப் பெற
கண்ணீர் சிந்தாதே
கைவசமில்லை கைக்குட்டை
கவிதைப் பூக்களை அனுப்புகிறேன்.
முன்னுரை முடிவுரைக்கு மாற்று வார்த்தைகள் எவை?... அல்லது அதே பொருள் கொண்ட வார்த்தைகள் உண்டா..???
அய்யா, நீங்கள்
அக்கினிக் குஞ்சுகளை
அடைகாத்த சூரியன்
நாங்களோ
மின்மினிகளுக்காக ராத்திரியானவர்கள்.
நீங்கள் பேசத் தொடங்கினீர்கள்
ஆயிரம் வால்ட் பல்புகளாய்
இதயங்கள் எல்லாம் பிரகாசமடைந்தன.
நாங்கள் ஆயிரம்
பல்புகள் எரிந்தால்தான்
பேசவே வருகிறோம்.
நீங்கள் தமிழ்க் குடும்பத்தின்
தந்தையாய் இருந்தீர்கள்
நாங்கள்
அவரவர் குடும்பத்தின்
அப்பாவை இருப்பதிலேயே
அக்கறையாய் இருக்கிறோம்.
நீங்கள்
கூட்டத்துக்கு வருகிற தலைகளை
கணக்கெடுத்துக் கொண்டிருக்காமல்
சிங்கமாய் முழங்கி செம்மாந்து நடந்தீர்கள்.
நாங்கள்
வாக்குகளின் எண்ணிக்கையைக்
கணக்கிட்டுக் கொண்டுதான்
வார்த்தைகளை உதிர்க்கிறோம்.
நீங